மரபியல் - மெண்டலின் விதிகள் | 10th Science : Chapter 18 : Heredity
மெண்டலின்
விதிகள்
ஒரு பண்புக் கலப்பு மற்றும்
இரு பண்புக் கலப்பு சோதனைகளின் அடிப்படையில் மெண்டல் மூன்று முக்கியமான விதிகளை
முன் வைத்தார். அவை இப்பொழுது மெண்டலின் பாரம்பரிய விதிகள் என அழைக்கப்படுகின்றன.
ஒன்று அல்லது ஒன்றுக்கு
மேற்பட்ட பண்புகளைக் கொண்ட பெற்றோர்களிடையே கலப்புச் செய்யப்படும்பொழுது முதல்
தலைமுறை சந்ததியில் வெளிப்படும் பண்பு ஓங்குப் பண்பாகும். வெளிப்படாத பண்பு
ஒடுங்கு பண்பாகும் இது ஓங்குபண்பு விதி எனப்படும்.
ஒரு கலப்புயிரியில் வேறுபட்ட
இரண்டு காரணிகள் இணைந்து காணப்பட்டால் ஒன்றுடன் ஒன்று கலப்படையாமல் கேமிட்டுகள்
உருவாக்கத்தின் போது தனித்துப் பிரிந்து கேமிட்டுக்குள் செல்கிறது. இது தனித்துப்
பிரிதல் விதி அல்லது கேமீட்டுகளின் கலப்பற்ற தன்மை விதி எனப்படும்.
ஒரே சமயத்தில் இரண்டு அல்லது
அதற்கு மேற்பட்ட வேறுபட்ட ஜோடி பண்புகள் பராம்பரியமாகும் போது, இப்பண்புகளைக்
கட்டுப்படுத்தும் ஜீன் அல்லது காரணிகள் ஒரு ஜோடி மற்றொரு ஜோடியுடன் சார்பின்றி
ஒதுங்குகின்றன. இதனால் தான் புதிய பண்புகள் தோன்றுகின்றன.
மேலும் அறிந்துகொள்வோம்
மரபியலின்
குரோமோசோம்களின் பங்கு பற்றிய கண்டுபிடிப்பிற்கான நோபல் பரிசு 1993 ஆம் ஆண்டு T.H மோர்கனுக்கு வழங்கப்பட்டது.