வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 5 ஆம் வகுப்பு கணக்கு - முப்பரிமாண உருவங்களின் பண்புகள் | 5th Maths : Term 1 Unit 1 : Geometry
முப்பரிமாண உருவங்களின் பண்புகள்.
கனசதுரம்
பண்புகள்:
❖ இது ஒரு முப்பரிமாண உருவம்
(3D) ஆகும்.
❖ இது ஆறு முகங்களை கொண்டது.
❖ இதன் அனைத்து பக்கங்களும்
சமம்
❖ இது 8 முனைகளையும்
12 விளிம்புகளையும் கொண்டது.

எடுத்துக்காட்டுகள்

கனசெவ்வகம்
பண்புகள்
❖ இது ஒரு முப்பரிமாண உருவம்
(3D) ஆகும்.
❖ இது ஆறு முகங்களைக் கொண்டது
❖ இதன் எதிரெதிர் பக்கங்கள்
சமம்.
❖ இது 8 முனைகளையும் 12
விளிம்புகளையும் கொண்டது.

எடுத்துக்காட்டுகள்

உருளை
பண்புகள்
❖ இது ஒரு முப்பரிமாண உருவம் (3D) ஆகும்.
❖ இரண்டு சமதளங்களையும் ஒரு வளைதளத்தையும் கொண்டது.
❖ இரண்டு சமதளங்களுக்கு இடையே உள்ள தொலைவு உயரம் ஆகும்.

எடுத்துக்காட்டுகள்

கோளம்
பண்புகள்
❖ இது ஒரு முப்பரிமாண உருவம் (3D) ஆகும்.
❖ இதற்கு ஒரேயொரு வளைதளம் மட்டுமே உண்டு.
❖ வளைதளத்தில்
உள்ள அனைத்து புள்ளிகளும் மையப்புள்ளியிலிருந்து சம தொலைவில் இருக்கும்.
❖ இதற்கு முனைகளும் விளிம்புகளும் இல்லை.

எடுத்துக்காட்டுகள்

கூம்பு
பண்புகள்
❖ இது ஒரு முப்பரிமாண உருவம் (3D) ஆகும்.
❖ இது ஒரு சமதளமும் ஒரு வளைதளமும் கொண்டது.
❖ இது ஒரு முனையைக் கொண்டது.
❖ கூம்பின் முனையிலிருந்து அடிப்பாகத்தின் நடுப்புள்ளி வரை உள்ள தொலைவு உயரம்
ஆகும்.

எடுத்துக்காட்டுகள்

செயல்பாடு
நம்மை சுற்றியுள்ள முப்பரிமாண (3D) பொருள்களை உற்றுநோக்கி அட்டவணையை நிரப்புக

பின்வரும் முப்பரிமாண உருவங்களை உற்றுநோக்கி மனிதரின் பார்வையில்
தெரியும் வடிவத்தை (✔) குறியிடவும்.
