Home | 8 ஆம் வகுப்பு | 8வது சமூக அறிவியல் | பொருளாதார செயல்பாடு

தொழிலகங்கள் | அலகு 6 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - பொருளாதார செயல்பாடு | 8th Social Science : Geography : Chapter 6 : Industries

   Posted On :  12.06.2023 08:29 am

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 6 : தொழிலகங்கள்

பொருளாதார செயல்பாடு

உற்பத்தி, விநியோகம், நுகர்வு அல்லது பணிகளில் ஈடுபடும் எந்த ஒரு செயலுமே பொருளாதார நடவடிக்கையாகும்.

பொருளாதார செயல்பாடு

உற்பத்தி, விநியோகம், நுகர்வு அல்லது பணிகளில் ஈடுபடும் எந்த ஒரு செயலுமே பொருளாதார நடவடிக்கையாகும்.


பொருளாதார நடவடிக்கைகளின் அடிப்படை

பின்வருவன அனைத்தும் முக்கியமான அடிப்படை மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் ஆகும்.

1. முதன்மை பொருளாதார நடவடிக்கைகள் (எடுத்துக்காட்டு - கச்சா பருத்தி உற்பத்தி)

2. இரண்டாம் நிலை பொருளாதார நடவடிக்கைகள் (எடுத்துக்காட்டு - நூற்பாலைகள்)

3. மூன்றாம் நிலை பொருளாதார நடவடிக்கைகள் (எடுத்துக்காட்டு - வர்த்தகம், போக்குவரத்து)

4. நான்காம் நிலை பொருளாதார நடவடிக்கைக்கள் (எடுத்துக்காட்டு - வங்கித்துறை)

5. ஐந்தாம் நிலை பொருளாதார நடவடிக்கைகள் (எடுத்துக்காட்டு - நீதித்துறை)



1. முதன்மை அல்லது முதல் நிலை பொருளாதார நடவடிக்கை (Primary Economic Activity): இவை பழங்காலம் முதலே தோன்றிய பொருளாதார நடவடிக்கைகளாகும். கால்நடை மேய்த்தல், வேட்டையாடுதல், உணவு சேகரித்தல், மீன் பிடித்தல், விவசாயம், சுரங்கத் தொழில், கல் உடைத்தல் ஆகிய பொருளாதார நடவடிக்கைகளை உள்ளடக்கியது.



2. இரண்டாம் நிலை பொருளாதார நடவடிக்கை (Secondary Economic Activity): இரண்டாம் நிலை பொருளாதார நடவடிக்கைகள் என்பது மூலப்பொருட்களை முறைப்படுத்துதல் மற்றும் உற்பத்தி மூலம் பயன்படும் பொருட்களாக மாற்றம் செய்வது ஆகும். எடுத்துக்காட்டாக அடுமனைகளில் மாவுகளை ரொட்டியாக மாற்றுவது. உலோகங்கள் மற்றும் நெகிழிகளை முறைப்படுத்தி வாகனங்களாக மாற்றும் தொழிற்சாலைகள் ஆகும்.



3.மூன்றாம் நிலை பொருளாதார நடவடிக்கை (Tertiary Economic Activity): மூன்றாம் நிலை பொருளாதார நடவடிக்கைகள் அத்தியாவசிய சேவைகளை அளிக்கிறது. மற்றும் தொழிலகங்கள் இயங்குவதற்கு உதவி புரிகின்றது. இவை சேவைகள் துறை என்றும் அழைக்கப்படுகிறது. போக்குவரத்து, நிதி பயன்பாடுகள், கல்வி, சில்லறை வர்த்தகம், வீட்டுவசதி, மருத்துவம் மற்றும் பிற சேவைகளை உள்ளடக்கியதாகும். நாம் பள்ளியின் மூலமாக கல்வி பயில்கிறோம். எனவே பள்ளி சேவைகளை அளிப்பதால் இது மூன்றாம் நிலை பொருளாதார நடவடிக்கைகளின் கீழ் வருகிறது.



4. நான்காம் நிலை பொருளாதார செயல்பாடுகள்: இச்செயல்பாடு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி உள்ளிட்ட தகவல் உருவாக்கம் மற்றும் பரிமாற்றங்களுடன் தொடர்புடையதாகும். ஆகையால் இத்துறையைத் தகவல் நுட்பத் தொழிலகங்கள் என்று அழைக்கிறோம். தகவல் பரிமாற்றம் மற்றும் மின்னணு காட்சியானது தகவல் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் விளைவாக இந்த வியக்கத்தகு நிலையை அடைந்துள்ளது. தொலைக்காட்சி நிலையத்தில் இருந்து ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை காண்பது நான்காம் நிலை பொருளாதார செயல்பாட்டிற்கு சிறந்த உதாரணம் ஆகும்.

உங்களுக்குத் தெரியுமா?

சேவைத்துறை இந்தியாவின் மிகப்பெரிய துறைகளில் ஒன்றாகும். தற்போது இந்தத் துறையானது இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 53 சதவீதம் பங்களிப்பினை அளிக்கிறது.


5. ஐந்தாம் நிலை பொருளாதார செயல்பாடுகள்: தொழிற்சாலைகள், வணிகம், கல்வி மற்றும் அரசாங்கங்களின் உயர்மட்ட அளவில் முடிவெடுக்கும் நிர்வாகிகளை குறிப்பிடுகின்றன. சுகாதாரம், பல்கலைக்கழகங்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் உள்ள உயர்மட்ட அதிகாரிகள் அல்லது நிர்வாகிகள் இவற்றில் அடங்குவர். உதாரணமாக நம்முடைய பெற்றோர்கள் வீட்டு குடிசார் பண்டம் அல்லது பொருட்கள் வாங்குவதற்கான முடிவினை அவர்களே எடுக்கின்றனர். அதே போல அமைச்சரவை குழுவினர் ஒரு மாநிலத்தின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைப் பற்றிய முடிவுகளை எடுக்கின்றனர்.

செயல்பாடு

ஏதேனும் ஒரு தொழிற்சாலையைப் பார்வையிட்டு அதன் அமைவிடத்திற்கு காரணமான சாதகமான காரணிகளைக் கண்டறியவும்.

Tags : Industries | Chapter 6 | Geography | 8th Social Science தொழிலகங்கள் | அலகு 6 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்.
8th Social Science : Geography : Chapter 6 : Industries : Economic Activity Industries | Chapter 6 | Geography | 8th Social Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 6 : தொழிலகங்கள் : பொருளாதார செயல்பாடு - தொழிலகங்கள் | அலகு 6 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 6 : தொழிலகங்கள்