தொழிலகங்கள் | அலகு 6 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - வினா விடை | 8th Social Science : Geography : Chapter 6 : Industries

   Posted On :  23.08.2023 01:51 am

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 6 : தொழிலகங்கள்

வினா விடை

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 6 : தொழிலகங்கள் : புத்தக வினாக்கள், கேள்வி பதில்கள்

மதிப்பீடு

 

| சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

 

1. பட்டு நெசவு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் சார்ந்த தொழிலகங்கள் ------------ பிரிவுகளின் கீழ் வருகின்றன.

அ) சிறிய அளவிலான தொழிலகம்

ஆ) பெரிய அளவிலான தொழிலகம்

இ) கடல் வளம் சார்ந்த தொழிலகம்

ஈ) மூலதனம் சார்ந்த தொழிலகம்

[விடை: அ) சிறிய அளவிலான தொழிலகம்]

 

2. உடைமையாளர்கள் அடிப்படையிலான தொழிலகங்கள் ------------------  வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

அ) 2

ஆ) 3

இ) 4

ஈ) 5

[விடை: இ) 4]

 

3. ஆனந்த் பால் பண்ணைத் தொழிலகம் (அமுல்) --------------- துறைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

அ) தனியார் துறை

ஆ) பொதுத்துறை

இ) கூட்டுறவுத்துறை

ஈ) கூட்டுத்துறை

[விடை: இ) கூட்டுறவுத்துறை]

 

4. இரும்பு எஃகு மற்றும் சிமெண்ட் தொழிலகங்கள் ------------ தொழிலகங்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

அ) வேளாண் சார்ந்த

ஆ) கனிம வளம் சார்ந்த

இ) வனப் பொருட்கள் சார்ந்த

ஈ) கடல் வளம் சார்ந்த

[விடை: ஆ) கனிம வளம் சார்ந்த]  

 

 

5. சார்புத் துறை ---------------- வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

அ) 4

ஆ) 3

இ) 2

ஈ) 5

[விடை: இ) 2]

 

 

|| கோடிட்ட இடங்களை நிரப்புக

 

1. வங்கித் துறை என்பது மூன்றாம் நிலை / சார்பு நிலை பொருளாதார நடவடிக்கையாகும்

2. மூன்றாம் நிலை தொழில்கள் நான்காம் நிலை மற்றும் ஐந்தாம் நிலை  ஆக வகைப்படுத்தப்படுகிறது.

3. அரசாங்க முடிவு எடுக்கும் செயல்முறைகள் ஐந்தாம் நிலை பொருளாதார செயல்பாடுகள் துறையின் கீழ்வரும் மூன்றாம் நிலை செயல்பாடாகும்.

4. மூலப்பொருட்கள் அடிப்படையில் பருத்தி நெசவாலை ஒரு வேளாண் சார்ந்த  தொழிலாகும்.

5. பெரிய அளவிலான தொழிற்சாலையை நிறுவுவதற்கு தேவையான மூலதனம் ரூபாய் ஒரு கோடிக்கு மேல் ஆகும்.

 

II பொருத்துக

 

1. நீதித்துறை - தனியார்துறை

2. தொலைக்காட்சி ஒளிபரப்பு - புவியியல் அல்லாத காரணிகள்

3. புவியியல் காரணிகள் - நான்காம் நிலை செயல்பாடு

4. மூலதனம்- மூலப்பொருட்கள்

5. பஜாஜ் ஆட்டோ - ஐந்தாம் நிலை செயல்பாடுகள்

 

விடைகள் 

1. நீதித்துறை - ஐந்தாம் நிலை செயல்பாடுகள்

2. தொலைக்காட்சி ஒளிபரப்பு - நான்காம் நிலை செயல்பாடு

3. புவியியல் காரணிகள் - மூலப்பொருட்கள்

4. மூலதனம் - புவியியல் அல்லாத காரணிகள்

5. பஜாஜ் ஆட்டோ - தனியார்துறை

 

 

IV வேறுபடுத்துக


1. இரண்டாம் நிலை பொருளாதார செயல்பாடு மற்றும் மூன்றாம் நிலை பொருளாதார செயல்பாடு.


2. வேளாண் சார்ந்த தொழிலகங்கள் மற்றும் கடல் வளம் சார்ந்த தொழிலகங்கள்.


3. பெரிய அளவிலான தொழிலகங்கள் மற்றும் சிறிய அளவிலான தொழிலகங்கள்.


 

V சுருக்கமாக விடையளி

 

1. தொழிற்சாலை - வரையறு.

மூலப்பொருட்களை இயந்திரங்களின் மூலம் பயன்படுத்தக் கூடிய பொருட்களாக மாற்றப்படும் இடமே தொழிற்சாலை எனப்படும்

 

2. பொருளாதார நடவடிக்கை என்றால் என்ன ?

உற்பத்தி, விநியோகம், நுகர்வு அல்லது பணிகளில் ஈடுபடும் எந்த ஒரு செயலுமே பொருளாதார நடவடிக்கை ஆகும்,

 

3. முக்கிய பொருளாதார நடவடிக்கைகளின் பெயர்களை எழுதுக.

1. முதன்மை பொருளாதார நடவடிக்கைகள்:

எடுத்துக்காட்டு: கச்சா பருத்தி உற்பத்தி

2. இரண்டாம் பொருளாதார நடவடிக்கைகள்:

எடுத்துக்காட்டு: நூற்பாலைகள்

3. சார்பு நிலை பொருளாதார நடவடிக்கைகள்:

எடுத்துக்காட்டு: வங்கித்துறை

4. நான்காம் பொருளாதார நடவடிக்கைகள்:

எடுத்துக்காட்டு: தகவல் தொழில்நுட்பம்

5. ஐந்தாம் நிலை பொருளாதார நடவடிக்கைகள்:

எடுத்துக்காட்டு: உயர்மட்ட அளவில் முடிவெடுக்கும் அதிகாரிகள்

 

4. ஐந்தாம் நிலை பொருளாதார நடவடிக்கைகள் என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் தெளிவாக்குக.

தொழிற்சாலைகள், வணிகம், கல்வி மற்றும் அரசாங்கங்களின் உயர்மட்ட அளவில் முடிவெடுக்கும் நிர்வாகிகள் ஐந்தாம் நிலை பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர், உயர்மட்ட அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் இதில் அடங்குவர். எடுத்துக்காட்டு: மாநிலத்தின் அமைச்சரவைக் குழுவினர் மாநிலத்தின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைப் பற்றிய முடிவுகளை எடுக்கின்றனர்.

 

5. தொழிலக அமைவிடத்திற்கு காரணமான காரணிகளைக் குறிப்பிடுக.

I. புவியியல் காரணிகள்:

> மூலப்பொருட்கள்

> ஆற்றல் வளம்

> மனித சக்தி

> போக்குவரத்து

> சேமிப்பு மற்றும் கிடங்கு

> நிலத்தோற்றம்

> காலநிலை

> நீர்வளம்

II. புவியியல் அல்லாத காரணிகள்:

> மூலதனம்

> கடன் வசதி

> அரசாங்கக் கொள்கைகள் / விதிமுறைகள்

 

6. பின்வருவனவற்றிக்குச் சிறு குறிப்புத் தருக.

அ. பெரிய அளவிலான தொழிலகங்கள்

ஆ. சிறிய அளவிலான தொழிலகங்கள்

அ. பெரிய அளவிலான தொழிலகங்கள்:

> ரூபாய் ஒரு கோடிக்கும் மேல் மூலதனம் கொண்டு நிறுவப்படும் தொழிற்சாலைகள் பெரிய அளவிலான தொழிற்சாலைகள் என்று அழைக்கப்படுகின்றன.

> இரும்பு மற்றும் எஃகு ஆலை, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, சிமெண்ட் தொழிற்சாலை மற்றும் நெசவாலைகள் போன்றவை பெரிய அளவிலான தொழிலகங்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

ஆ. சிறிய அளவிலான தொழிலகங்கள் :

> ரூபாய் ஒரு கோடிக்கும் குறைவான மூலதனத்தைக் கொண்டு நிறுவப்படும் தொழிற்சாலைகள் சிறிய அளவிலான தொழிற்சாலைகள் எனப்படுகின்றன,

> பட்டு நெசவு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் சார்ந்த தொழிலகங்கள் சிறிய அளவிளான தொழிலகங்களுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.

 

 

VI விரிவான விடையளி

 

1. மூலப்பொருட்களின் அடிப்படையில் தொழிலகங்களை வகைப்படுத்தி விளக்குக.

வேளாண் சார்ந்த தொழிலகங்கள் :

> இவ்வகைத் தொழிலகங்களில் வேளாண் மற்றும் விலங்கு சார்ந்த பொருட்கள் மூலப் பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.

> எடுத்துக்காட்டு: உணவுப் பதப்படுத்துதல், தாவர எண்ணெய் உற்பத்தி, பருத்தி நெசவாலைகள், பால் உற்பத்திப் பொருட்கள் போன்றவை.

கனிமவளம் சார்ந்த தொழிற்சாலைகள்:

> இவ்வகைத் தொழிலகங்கள் கனிமத் தாதுக்களை மூலப்பொருட்களாகப் பயன்படுத்துகின்றன.

> எடுத்துக்காட்டு: இரும்பு எஃகுத் தொழிலகங்கள், சிமெண்ட் தொழிற்சாலை, இயந்திரக் கருவிகள் உற்பத்தி போன்றவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.

கடல்வளம் சார்ந்த தொழிலகங்கள்:

> இவ்வகைத் தொழிலகங்களுக்கு கடல் மற்றும் பெருங்கடலில் இருந்து கிடைக்கப்பெறும் பொருட்கள் மூலப்பொருட்களாகப் பயன்படுகின்றன.

> எடுத்துக்காட்டு: பதப்படுத்தப்பட்ட கடல்சார் உணவு, மீன் எண்ணெய் உற்பத்தி அலகுகள் போன்றவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.

வனம் சார்ந்த தொழிலகங்கள்:

> இவ்வகைத் தொழிற்சாலைகளுக்கு வனப்பொருட்கள் மூலப்பொருட்களாகப் பயன்படுகின்றன.

> எடுத்துக்காட்டு: மரக்கூழ் மற்றும் காகித உற்பத்தி, மரத்தளவாடங்கள் மற்றும் சில மருந்து உற்பத்தி தொழிலகங்கள்.

 

2. தொழில் அமைவிடத்தை நிர்ணயிக்கும் புவியியல் காரணிகளை விளக்குக.

மூலப்பொருட்கள்:

> அதிக அளவு மூலப்பொருட்கள் மற்றும் எடை இழக்கும் பொருட்களை நீண்ட தூரத்திற்குக் கொண்டு செல்ல முடியாது.

> எனவே இரும்பு, எஃகு மற்றும் சர்க்கரை தொழிலகங்கள் முறையே இரும்புத்தாது மற்றும் கரும்பு கிடைக்கும் இடத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளன.

ஆற்றல் வளம்:

> தொழிலகங்களை இயக்குவதற்கு எரிசக்தி அடிப்படை மற்றும் அவசியமானதாகும்.

> எனவே மின் தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு ஏதேனும் ஒரு ஆற்றல் வளம் அமைந்துள்ள இடங்களுக்கு அருகில் தொழிற்சாலைகள் அமைக்கப்படுகின்றன.

மனிதசக்தி: தொழிலாளர் சார்ந்த தொழில்களுக்கு மலிவான மற்றும் திறமையான தொழிலாளர்கள் அவசியமாகும். எடுத்துக்காட்டு: தேயிலைத் தொழிற்சாலை

போக்குவரத்து:

> மூலப்பொருட்களை தொழிலகங்களுக்குக் கொண்டு வருவதற்கும், முடிக்கப்பட்ட பொருட்களை மீண்டும் சந்தைக்கு அனுப்பவும் போக்குவரத்து தேவைப்படுகிறது.

> எனவே எப்பொழுதும் எளிதான போக்குவரத்து தொழிலகங்களின் அமைவிடத்தைத் தீர்மானிக்கிறது.

சேமிப்பு மற்றும் கிடங்கு: முடிவுற்ற பொருள்கள் சந்தைக்கு எடுத்து செல்லப்பட வேண்டும். அவ்வாறு சந்தைக்கு எடுத்துச் செல்லும் வரை பொருத்தமான கிடங்குகளில் சேமித்து வைக்க வேண்டும்.

நிலத்தோற்றம்: ஒரு தொழிற்சாலையை அமைப்பதற்குத் தேர்ந்தெடுக்கப்படும் இடம் சமமானதாக இருக்க வேண்டும். இது பல்வேறு போக்குவரத்து சாதனங்களைப் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக இருக்கும்.

கால நிலை: ஒவ்வொரு தொழிற்சாலைகளுக்கும் ஒரு குறிப்பிட்ட காலநிலை தேவைப்படுகிறது. எனவே தொழிற்சாலை வளர்ச்சிக்கு அங்கு நிலவும் காலநிலை ஒரு முக்கியக்காரணியாக விளங்குகிறது, எடுத்துக்காட்டாக பருத்தி நெசவுத் தொழிலுக்கு ஈரப்பத காலநிலை தேவைப்படுகிறது.

நீர்வளம்: தொழிற்சாலைகளின் அமைவிடத்தை நிர்ணயிப்பதில் நீர்வளம் முக்கியக்காரணியாக உள்ளது, எனவே பல தொழிலகங்கள் ஆறுகள், கால்வாய்கள் மற்றும் ஏரிகளுக்கு அருகிலேயே நிறுவப்பட்டுள்ளன.

 

3. தொழிலகங்களின் வகைப்பாட்டை விளக்கப் படம் மூலம் விளக்குக.


Tags : Industries | Chapter 6 | Geography | 8th Social Science தொழிலகங்கள் | அலகு 6 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்.
8th Social Science : Geography : Chapter 6 : Industries : Questions with Answers Industries | Chapter 6 | Geography | 8th Social Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 6 : தொழிலகங்கள் : வினா விடை - தொழிலகங்கள் | அலகு 6 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 6 : தொழிலகங்கள்