Home | 8 ஆம் வகுப்பு | 8வது சமூக அறிவியல் | தொழிலக அமைவிட காரணிகள்

தொழிலகங்கள் | அலகு 6 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - தொழிலக அமைவிட காரணிகள் | 8th Social Science : Geography : Chapter 6 : Industries

   Posted On :  12.06.2023 08:32 am

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 6 : தொழிலகங்கள்

தொழிலக அமைவிட காரணிகள்

தொழிற்சாலையின் அமைவிடங்கள் இயற்கையில் சிக்கலானவை. அவை அங்கு கிடைக்கக்கூடிய பல காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றன. மூலப்பொருட்கள், நிலம், நீர், தொழிலாளர்கள், மூலதனம், ஆற்றல் வளம், போக்குவரத்து மற்றும் சந்தை இவைகள் தொழிலகங்களின் அமைவிடத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாகும்.

தொழிலக அமைவிட காரணிகள்

தொழிற்சாலையின் அமைவிடங்கள் இயற்கையில் சிக்கலானவை. அவை அங்கு கிடைக்கக்கூடிய பல காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றன. மூலப்பொருட்கள், நிலம், நீர், தொழிலாளர்கள், மூலதனம், ஆற்றல் வளம், போக்குவரத்து மற்றும் சந்தை இவைகள் தொழிலகங்களின் அமைவிடத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாகும்.

தொழிலக அமைவிட காரணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

1. புவியியல் காரணிகள் (Geographical Factors)

2. புவியியல் அல்லாத காரணிகள் (Non Geographical Factors)



1. புவியியல் காரணிகள்

1. மூலப்பொருட்கள் (Raw Materials): அதிக அளவு மூலப்பொருட்கள் மற்றும் எடை இழக்கும் பொருட்களை நீண்ட தூரத்திற்குக் கொண்டு செல்ல முடியாது. எனவே இரும்பு மற்றும் எஃகு மற்றும் சர்க்கரை தொழிலகங்கள் முறையே இரும்புத்தாது மற்றும் கரும்பு கிடைக்கும் இடத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளன. சேலம் இரும்பு எஃகு ஆலையானது இரும்பு தாது கிடைக்கும் கஞ்சமலைக்கு அருகிலேயே அமைந்துள்ளது. சர்க்கரைத் தொழிற் சாலைகள் கரும்பு விளையும் இடங்களுக்கு அருகிலேயே அமைந்துள்ளன.

2. ஆற்றல் வளம் (Power): எரிசக்தி பெரும்பாலான தொழிலகங்களை இயக்குவதற்கு அடிப்படை மற்றும் அவசியமானதாகும். நிலக்கரி, தாது எண்ணெய் மற்றும் நீர் போன்ற மரபுசார் மூலங்களிலிருந்து எரிசக்தி பெரும்பாலும் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே தொழிற்சாலைகளின் மின் தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு மேற்கண்ட ஏதேனும் ஒரு வளம் அமைந்துள்ள இடங்களுக்கு அருகாமையில் தொழிற்சாலைகள் அமைக்கப்படுகின்றன.

3. மனித சக்தி (Labour): தொழிலாளர் சார்ந்த தொழில்களுக்கு மலிவான மற்றும் திறமையான தொழிலாளர்கள் அவசியமாகும். எடுத்துக்காட்டு தேயிலை தொழிற்சாலை.

4. போக்குவரத்து (Transport): மூலப்பொருட்களைத் தொழிலகங்களுக்குக் கொண்டு செல்வதற்கும் முடிக்கப்பட்ட பொருட்களை மீண்டும் சந்தைக்கு அனுப்பவும் போக்குவரத்துத் தேவைப்படுகிறது. எப்பொழுதும் எளிதான போக்குவரத்துத் தொழிலகங்களின் அமைவிடத்தைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே நீர்வழிகள், சாலை வழிகள் மற்றும் இருப்புப் பாதைகளின் வலைப்பின்னல் கொண்ட பகுதிகள் சிறந்த தொழில் மையங்களாகத் திகழ்கின்றன.

5. சேமிப்பு மற்றும் கிடங்கு (Storage and Warehousing):

உற்பத்தியின் முடிவில் முடிவுற்ற பொருள்கள் சந்தையைச் சென்றடைய வேண்டும். எனவே முடிக்கப்பட்ட பொருட்கள் சந்தைக்கு எடுத்துச் செல்லும் வரை பொருத்தமான கிடங்குகளில் சேமித்து வைக்க வேண்டும்.

6. நிலத்தோற்றம் (Topography): ஒரு தொழிற்சாலையை நிறுவுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் சமமானதாக இருக்க வேண்டும். இது பல்வேறு போக்குவரத்து சாதனங்களைப் பயன்படுத்தி கொள்ள ஏதுவாக இருக்கும்.

7. காலநிலை (Climate): ஒரு பகுதியில் நிலவும் காலநிலை, தொழிலகங்களின் அமைவிடத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாகும். தொழிற்சாலை வளர்ச்சிக்கு தீவிர காலநிலை பொருத்தமானது அல்ல. மேலும் ஒவ்வொரு தொழிலகங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட காலநிலை தேவைப்படுகிறது.

எடுத்துக்காட்டாக பருத்தி நெசவாலை தொழிலுக்குக் குளிர் - ஈரப்பத காலநிலை சிறந்ததாகும். எனவே கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் போன்ற பகுதிகளில் இவ்வகையான காலநிலை நிலவுவதால் பருத்தி நெசவு தொழிலகங்கள் இம்மண்டலத்தில் அமைந்துள்ளன.

8. நீர்வளம் (Water Resources): நீர்வளம் தொழிற்சாலைகளின் அமைவிடத்தை நிர்ணயிக்கும் மற்றொரு முக்கியமான காரணியாகும். இக்காரணத்தினால் ஆறுகள், கால்வாய்கள் மற்றும் ஏரிகளுக்கு அருகே பல தொழிலகங்கள் நிறுவப்பட்டுள்ளன. இரும்பு மற்றும் எஃகு தொழிற்சாலை, ஜவுளி தொழிற்சாலை மற்றும் இரசாயன தொழிற்சாலைகளின் செயல்பாட்டிற்கு ஏராளமான நீர் தேவைப்படுகிறது.

கண்டறிக 

இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகள் சீரற்ற பரவலை கொண்டுள்ளன. காரணங்களைக் கண்டறியவும்.


II. புவியியல் அல்லா காரணிகள்

1. மூலதனம் (Capital): தொழிலகங்கள் நிறுவுவதற்கு மூலதனம் அல்லது அதிக முதலீடு தேவைப்படுகிறது. மூலதனம் இல்லாமல் எந்த ஒரு தொழிற்சாலையையும் நிறுவ முடியாது.

2. கடன்வசதி (AvailabllityofLoans): பெரும்பாலும் தொழில் முதலீட்டாளர்களுக்கு தொழில் தொடங்க போதுமான நிதி இருக்க வாய்ப்பில்லை. எனவே தொழிற்சாலை தொடங்கும் பொருட்டு முதலீட்டாளர்கள் கடன் வசதியை நாடுவர். எனவே கடன் மற்றும் காப்பீடு வழங்கும் நிறுவனங்களின் சேவை தேவைப்படுகிறது.

3. அரசாங்கக் கொள்கைகள் / விதிமுறைகள் (Government Policies / Regulations): தொழிலகங்களின் அமைவிடத்தை நிர்ணயிக்கும் மற்றொரு முக்கிய காரணி அரசாங்கக் கொள்கைகள் ஆகும். பிராந்திய ஏற்றத்தாழ்வுகளைப் குறைப்பதற்கும் அதிகமான மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்கும் பெருநகரங்களில் மிகுதியான தொழிலகங்களைத் தவிர்ப்பதற்கும், தொழிற்சாலையை நிறுவுவதற்கும், நிலம் ஒதுக்கீடு செய்வதில் சில கட்டுப்பாடுகளை அரசாங்கம் விதிக்கிறது. எனவே அரசாங்கக் கொள்கைகள் மற்றும் விதிமுறைகள் தொழிலகங்களின் அமைவிடத்தைத் தீர்மானிக்கின்றன.

 


செயல்பாடுகள்

கரும்பலகை சுண்ணக்கட்டிகளை நினைவில் கொள்.

1. இதன் உற்பத்திக்கு பயன்படும் மூலப் பொருட்களின் பெயர்களைக் குறிப்பிடுக

2. இவை உற்பத்தி செய்யப்படும் இடங்களைக் கண்டறிக.

3. சுண்ணக்கட்டிகளின் உற்பத்தி எந்த வகை தொழிலகங்களின் வகைப்பாட்டில் உள்ளது என்பதைக் குறிப்பிடுக.

Tags : Industries | Chapter 6 | Geography | 8th Social Science தொழிலகங்கள் | அலகு 6 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்.
8th Social Science : Geography : Chapter 6 : Industries : Factors responsible for location of Industries Industries | Chapter 6 | Geography | 8th Social Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 6 : தொழிலகங்கள் : தொழிலக அமைவிட காரணிகள் - தொழிலகங்கள் | அலகு 6 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 6 : தொழிலகங்கள்