கண்ணாடித் தகடுகளைத் தயாரித்தலும், செயல்முறைகளும் - தாவரவியல் செய்முறைகள் - மகரந்தப்பையின் குறுக்குவெட்டுத் தோற்றம் | 12th Botany : Practicals
கண்ணாடித் தகடுகளைத் தயாரித்தலும், செயல்முறைகளும்
சோதனை எண் 1: மகரந்தப்பையின் குறுக்குவெட்டுத் தோற்றம்
நோக்கம்
: கொடுக்கப்பட்ட கண்ணாடித் தகட்டைக் கண்டறிதல் - மகரந்தப்பையின் குறுக்குவெட்டுத் தோற்றம்
கொள்கை
: மகரந்தத்தாள் வட்டம் மகரந்தத்தாள்களால் ஆனது. ஒவ்வொரு மகரந்தத்தாளும் ஒரு மகரந்தப்பையையும்,
ஒரு மகரந்தக்கம்பியையும் கொண்டது. மகரந்தப்பை மகரந்தத்துகள்களைக் கொண்டுள்ளது. இது
ஆண் கேமீட்டகத் தாவரத்தைக் குறிக்கிறது.
தேவையானவை:
தற்காலிகக் கண்ணாடித்தகடு தயாரிக்க டாட்டூரா மெட்டலின் மகரந்தப்பை, கிளிசரின், சாப்ரனின்,
கண்ணாடித் தகடு, கண்ணாடி வில்லை, பிளேடு, தூரிகை, பிடி கொண்ட ஊசி, கூட்டு நுண்ணோக்கி,
மகரந்தப்பையின் குறுக்குவெட்டுத் தோற்றம் கொண்ட நிரந்தரக் கண்ணாடித் தகடு
டாட்டூரா மெட்டலின் மொட்டு மற்றும் மலர்களைச் சேகரிக்கவும். மகரந்தத்தாளிலிருந்து
மகரந்தப்பையை தனிமைப்படுத்தி மெல்லிய சீவல்களாக்கி நுண்ணோக்கியில் அதன் அமைப்பை உற்று
நோக்கவும். மகரந்தப்பையின் பல்வேறு வளர்ச்சி நிலைகளை உற்றுநோக்கிப் பதிவு செய்யவும்.
• முதிர்ந்த மகரந்தப்பை இரு மடல்களைக் கொண்டது.
இணைப்புத்திசு இருமடல்களும் இணைப்புத்திசுவால் இணைக்கப்பட்டுள்ளன.
• ஒவ்வொரு மகரந்த மடலும் இரு மகரந்த அறைகளைக் கொண்டுள்ளது. இதனுள் மகரந்தத்துகள் உருவாகின்றன.
• நுண்வித்தகம் அல்லது மகரந்த அறை நான்கு சுவர்
அடுக்குகளால் சூழப்பட்டுள்ளது. அவை புறத்தோல், எண்டோதீசியம், மைய அடுக்கு மற்றும் டபீட்டம்
ஆகும்.
• நுண் வித்தகத்தின் மையப்பகுதி ஒருமடிய மகரந்தத்துகள்களால்
நிறைந்திருக்கும்.