பருவம் 2 அலகு 2 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - மின்னியல் | 6th Science : Term 2 Unit 2 : Electricity

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 2 : மின்னியல்

மின்னியல்

நம் அன்றாட வாழ்வில் நாம் மின்சாரத்தைப் பயன்படுத்துகிறோம். நமக்கு இம்மின்சாரம் எங்கிருந்து கிடைக்கிறது, அது எவ்வாறு வேலை செய்கிறதென என்றாவது வியந்திருக்கிறோமா? மின்சாரம் இல்லாத ஒரு நாளை நம்மால் கற்பனை செய்து பார்க்க இயலுமா?

அலகு 2

மின்னியல்



 

கற்றல் நோக்கங்கள்

மின்சாரத்தின் மூலங்களை அறிந்து கொள்ளுதல்

மின்சாரத்தால் இயங்கும் பொருள்களை அறிந்து கொள்ளுதல்

மின்கலன்களின் பல்வேறு வகைகளை அறிந்து, அவற்றின் பயன்பாடுகளைப் புரிந்து கொள்ளுதல்

வெவ்வேறு பயன்பாடுகளுக்கு உகந்த மின்கலன்களைக் கண்டறிந்து பயன்படுத்துதல்

மின்சாதனங்களின் குறியீடுகளை அறிந்து அவற்றை வெவ்வேறு மின்சுற்றுகளில் பயன்படுத்துதல்

மின்கடத்திகள் மற்றும் அரிதிற் கடத்திகளை இனங்காணுதல்

எளிய பொருள்களைக் கொண்டு மின்கலன்களைத் தாமாகவே உருவாக்கும் திறன் பெறுதல்

 

அறிமுகம்

நம் அன்றாட வாழ்வில் நாம் மின்சாரத்தைப் பயன்படுத்துகிறோம். நமக்கு இம்மின்சாரம் எங்கிருந்து கிடைக்கிறது, அது எவ்வாறு வேலை செய்கிறதென என்றாவது வியந்திருக்கிறோமா? மின்சாரம் இல்லாத ஒரு நாளை நம்மால் கற்பனை செய்து பார்க்க இயலுமா? உன் தாத்தாவிடம் வினவினால் மின்சாரம் கண்டுபிடிக்கப்படாத காலகட்டத்தை, நீ அறிந்து கொள்ளலாம். நம் முன்னோர்கள் வெளிச்சத்திற்காக இரவில் எண்ணெய் விளக்குகளைப் பயன்படுத்தினார்கள். மேலும் விறகு அல்லது கரியை எரிபொருளாகப் பயன்படுத்தி, உணவு சமைத்தனர். இன்றோ! மின்சாரத்தின் உபயோகத்தால் வேலைகள் எல்லாம் சுலபமாயிருக்கின்றன. உலகமே நம் கையில் வந்துள்ளது. மின்சாரத்தால் இயங்கும் மின்சாதனங்கள் எவை? மின்சாரத்தைத் தங்களின் வழியே கடத்தும் பொருள்கள் எவை? மின்சுற்றுஎன்றால் என்ன? மின்கலன் மற்றும் மின்கல அடுக்கு என்றால் என்ன? வாருங்கள் இப்பாடத்தினுள் மின்சாரம் பற்றி விரிவாகக் காண்போம்.

 

செயல்பாடு 1: உங்களது வீட்டில் உள்ள மின்சாதனங்களைப் பட்டியலிடுக

Tags : Term 2 Unit 2 | 6th Science பருவம் 2 அலகு 2 | 6 ஆம் வகுப்பு அறிவியல்.
6th Science : Term 2 Unit 2 : Electricity : Electricity Term 2 Unit 2 | 6th Science in Tamil : 6th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 2 : மின்னியல் : மின்னியல் - பருவம் 2 அலகு 2 | 6 ஆம் வகுப்பு அறிவியல் : 6 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 2 : மின்னியல்