அரசியல் அறிவியல் - இந்திய நீதித்துறையின் பரிணாம வளர்ச்சி | 12th Political Science : Chapter 4 : Indian Judiciary
இந்திய நீதித்துறையின் பரிணாம வளர்ச்சி
இந்தியா பல்வேறு இனங்கள், பண்பாடுகள், மொழிகள் மற்றும் அரசியல், சமூக அமைப்புகளை கொண்ட ஒரு துணைக்கண்டமாக இருக்கிறது. இந்தியாவின் பண்டைய காலத்திலும் மற்றும் இடைக்காலத்திலும் அரசு எந்த ஒரு ஆட்சித்துறையிலிருந்தும் நீதித்துறை பணிகளைப் பிரித்து வைக்கப்படவில்லை. வேதகாலத்தின் போது (குலபா (அ) குலபாடோ), குடும்பத் தலைவனின் அதிகாரமானது மன்னர் வழி குறுக்கீடுகளிலிருந்து பாதுகாக்கப்பட்டிருந்தது; அதேபோல் கிராமா, தோபா, வைசியா, ஜனம் மற்றும் கனம் போன்ற குலவகைப்பட்ட மற்றும் இனக்குழு அமைப்புகளும் தன்னாட்சி பெற்றுத் திகழ்ந்தன. பண்டைய இந்திய முடியாட்சிகளில் நீதித்துறை அதிகாரத்தில் அரசரே உயர்நிலையில் இருந்தார். அரசர் நினைத்ததே சட்டமாக இருந்தது, வழக்குகளில் அவர் வார்த்தையே உயர்ந்த நீதியாகவும் இறுதித் தீர்ப்பாகவும் இருந்தது.
எனினும்,கிராமப்புறங்களில் பெரும்பாலான வழக்குகள் சாதி அமைப்புகள் அல்லது உள்ளாட்சி நிர்வாக அமைப்புகளின் சட்டத்திட்டங்களின் மூலமாகவே தீர்க்கப்பட்டு வந்தன. தேசத் துரோகம் போன்ற மிகத் தீவிரமான வழக்குகள் மட்டும் அரசரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு முறையான சட்ட அமைப்பு இருந்ததில்லை. பெரும்பான்மையான நேரங்களில் குற்றம் சாட்டப்பட்டவர், தான் குற்றமற்றவர் என்பதை ஆதாரங்கள், சாட்சியங்கள் மூலமாக நிரூபிக்க வேண்டும். அல்லது தீக்குளித்தல், தண்ணீரில் மூழ்குதல், விஷம் அருந்துதல் போன்ற கடும் சோதனைகளுக்கு தன்னை ஆட்படுத்திக் கொள்ளுதல் மூலமாக தாம் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும். தண்டனைகள் மிகவும் கடுமையாக இருந்தது. மேலும், காட்டுமிராண்டித்தனம் கொண்டதாக இருந்தது. இதற்கு பரிகாரம் என்பது வழக்கத்தில் இல்லை . கசையடி, பிரம்படி, முழங்கால்களைத் துண்டித்தல், கழுமரத்தில் ஏற்றுதல், அடிமைப்படுத்துதல், சொத்துக்களை பறிமுதல் செய்தல், நாடு கடத்துதல், தலையை துண்டித்தல், யானை மூலம் தலையை இடரச்செய்தல் மற்றும் மிதிக்கச் செய்தல் போன்ற தண்டனைகள் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டன. அரசுகள் பிராமணர்களின் தாக்கத்தின் கீழ் வந்த பின்னர், ஸ்மிருதிகள் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு, தண்டனைகள் வழங்கப்பட்டன.
அக்காலத்தில் மனுஸ்மிருதி, நாரதர் ஸ்மிருதி, யக்ஞவாக்கியர் ஸ்மிருதி போன்றவை இருந்தன, அவற்றுள் "மனுஸ்மிருதி" அடிப்படையாக இருந்தது. இந்த ஸ்மிருதிகள் பொதுவாக வர்ணம். சாதிபடிநிலைச் சமூக அமைப்பை உயர்த்திப் பிடிப்பதாக இருந்தன. "சட்டத்தின் முன் அனைவரும் சமம்" என்ற கருத்து இருந்ததில்லை . பிராமணர்கள் பெரும்பாலும் தண்டனைகளிலிருந்து பாதுகாக்கப்பட்டிருந்தனர். எந்தவிதத்திலும் பிராமணர்கள், அவர்கள் கொடிய குற்றங்களை செய்துவிட்டாலும் உடல் ரீதியான துன்புறுத்தல், உறுப்பு நீக்கம் செய்தல், கழுமரத்தில் ஏற்றுவது, மரணதண்டனை ஆகியவற்றில் இருந்து விதிவிலக்கு செய்யப்பட்டிருந்தார்கள். மற்றொருபுறம் ஒடுக்கப்பட்ட சாதியினரை கடுமையான துன்பங்களுக்கும் மற்றும் உச்சபட்ச தண்டனைகளுக்கும் உள்ளாக்கப்பட்டனர். சாதி அடிப்படையிலான தொழில்களை மாற்றிக் கொள்வது என்பது மிகக் கொடிய குற்றமாக (Varna Sangraha) கருதப்பட்டது.
அர்த்த சாஸ்திரம் குற்றங்கள் நிகழ்வதை கட்டுப்படுத்துவது என்ற பெயரில் அளவுக்கு அதிகமான தண்டனைகளைப் பரிந்துரைத்தன. குற்றவாளிகள் மீது அபராதங்கள் விதிப்பது, சொத்துக்களை பறிமுதல் செய்வது முதன்மையான அரசு வருமானமாக இருந்தன. ஸ்மிருதிகள் பெண்களை கீழ்நிலை மனிதர்களாகவே நடத்தியது. வாரிசுரிமை விவகாரங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டுடன் தீர்ப்பளித்தனர். சூத்திரர்களும், பஞ்சமர்களும் நியாயமான விசாரணைக்கும், நியாயமான தண்டனைகளுக்கும் தகுதி இல்லாதவர்கள் ஆனார்கள். வர்த்தகத் தகராறுகள் பெரும்பாலும் வணிகக் குழு மூலம் தீர்க்கப்பட்டன. அதைப்போலவே ஒவ்வொரு கைவினைக் கலைஞர்கள் குழுவும் தங்களுடைய சொந்த பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ள கைவினைஞர்கள் சங்கத்தைத் தமக்குள் வைத்து கொண்டனர். பல்லவர், பாண்டிய, சோழர்கால மகாசபைகள் நீதி விசாரணை நடைமுறைகளிலிருந்து பிராமணர்களைப் பாதுகாத்தன. மகாசபைகளின் வாரியம் (தர்ம வாரியங்கள், நியாய வாரியம்) மகாசபைகளுக்குள் எழும்பிரச்சனைகளை தீர்த்து வைத்தன. உள்ளூர் அமைப்புகளான ஊர், ஊரார், நகரத்தார் போன்றவை அவர்களுக்கு உரிய நீதித்துறை ஏற்பாடுகளைக் கொண்டிருந்தனர்.
அசோகப் பேரரசு போன்ற புத்த பேரரசுகள் பெரும்பாலும் ஸ்மிருதி முறைகளை புறம்தள்ளின. நீதி வழக்குகளில் சமூகக் குழுக்களுக்கிடையே ஓரளவுக்குச் சமமாக நடத்தப்பட்டன. அசோகர் கொடிய தண்டனைகளை நீக்கினார். மேலும், அவர் தனது அதிகாரிகளிடம் கைதிகளிடத்தில் மிகவும் மனிதாபிமானம் உடையவர்களாகவும், கருணை உள்ளவர்களாகவும் இருக்கும்படி அறிவுறுத்தினார். சிலப்பதிகாரத்தில் கோவலன் தூக்கிலிடப்படும் சம்பவமானது
தராசு முறை:
ஒரு தராசில் ஒரு பக்கம் ஒரு பனை ஓலை கட்டு வைத்துவிட்டு இன்னொரு பக்கம் குற்றம் சாட்டப்பட்டவர் அமரும்படியாக செய்யப்பட்டு தராசு சமமாக இருக்கும்படி வேண்டிக் கொள்ளுப்படுகிறார்கள். வேண்டுதலுக்கு பிறகும் அவர் இருக்கும் தராசின் பகுதி கீழே வந்து விட்டால் அவர் குற்றம் என்று அறிவிப்பார்கள்.
நஞ்சு அருந்தும் சோதனை:
இம்முறையில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு நஞ்சு அருந்தும்படியாக செய்யப்படுவார், அந்த நபருக்கு எந்த தீய விளைவும் ஏற்படவில்லை என்றால் அவர் குற்றமற்றவர் என கருதப்படுவார்.
நெருப்பு சோதணை:
குற்றம் சாட்டப்பட்டவர் தீயின் நடுவே நடந்து வர செய்யப்படுவார். அந்த நபர் எந்த தீ காயமும் அடையவில்லை என்றால் மட்டுமே அவர் குற்றமற்றவராக கருதப்படுவார்.
குறுக்கல் சோதணை:
குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு தொகுப்பில் இருந்து ஒன்றை எடுத்து தரும்படி கேட்டுக் கொள்ளப்படுவார். அதில் அவருக்கு "தர்ம கட்டு" வந்திருந்தால் அவர் குற்றமற்றவராக கருதப்படுவார்.
தண்ணீர் முறை:
தெய்வ சிலையை சுத்தப்படுத்துவதற்கு உள்ள நீரை, குற்றம் கூறினால் குற்றம் சாட்டப்பட்டவர் அதை குடிக்கும்படி செய்யப்படுவார், அதனை தொடர்ந்து வரும் 14 நாட்களுக்குள் குடிக்கும்வரை அவருக்கு எந்த கேடான பாதிப்பும் ஏற்படவில்லை என்றால் அவர் குற்றமற்றவர் என கருதப்படுவார்.
அரிசி தானிய சோதனை:
இம்முறையில் குற்றம் சாட்டப்பட்டவர் உமி நீக்கப்படாத நெல் தானியத்தை மென்று சாப்பிடும் படியாக செய்யப்படுவார், அவருடைய வாயில் இரத்தக்கறை காணப்பட்டால் அவர் குற்றம் செய்தவர் என்று அறிவிக்கப்படுவார்.
ஊற்றநீர் சோதனை முறை: இங்கு குற்றம் சாட்டப்பட்டவர் நஞ்சு போன்ற நீரை குடிக்கும்படியாக செய்யப்படுவார், அவர் உளறினால் அவர் குற்றம் செய்தவராவார் அல்வது குற்றத்தை அந்த நபர் ஒத்துக் |கொண்டவராவார்.
நீதித்துறை செயல் முறையிலுள்ள குறைபாடுகளை வெளிப்படுத்துகிறது. நீதித்துறையில் உயர் அதிகாரிகள் அறநெறியுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று இலக்கியங்கள் வலியுறுத்தினாலும், நீதி வழக்கு விசாரணைகளில் வரம்பு மீறி நடந்து தண்டனையில் இருந்து விதிவிலக்கு கொடுப்பதோ அல்லது அநீதியான தண்டனைகளை வழங்கியிருப்பதையோ நாம் அடிக்கடி கண்டிருக்கிறோம். பண்டைய இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி அங்கு இருந்தது இல்லை, ஆனால் அதிகாரம் கொண்டோரின் ஆட்சியையே நாம் காண்கிறோம்.
இடைக்கால இந்தியாவில், முஸ்லீம் ஆட்சியாளர்கள் ஒருவித தனித்தன்மை கொண்ட சூழ்நிலையை எதிர்கொண்டனர். அங்கே அவர்கள் ஆட்சியின் கீழ் வாழ்ந்த மக்கள் பெரும்பான்மையானோர் முஸ்லிமல்லாதவர்கள். முஸ்லீம் மற்றும் முஸ்லீம் நலன்கள் சார்ந்த வழக்குகளில் இஸ்லாமிய சட்டங்களை பயன்படுத்தினர். அதேநேரம், முஸ்லீம் அல்லாதவர்களின் சமூக - மத விவகாரங்களில் தலையிடா கொள்கைக்கு முன்னுரிமை அளித்தனர். அங்கெல்லாம் கிராமப்புற பாரம்பரிய விசாரணை முறையை ஏற்றனர். முஸ்லீம் ஆட்சியாளர்கள் குடிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளை மிகவும் சரியாக வேறுபடுத்திக் காட்டியிருந்தனர். ஒவ்வொருவருக்கும் வேறுபட்ட முறைகளைக் கையாண்டனர். எனினும், இறைப்பழி போன்ற வழக்குகளில் மிகவும் கொடிய தண்டனைகளை குற்றம் சாட்டப்பட்டவருக்கு அளித்தனர்.