அரசியல் அறிவியல் - இந்திய நீதித்துறை | 12th Political Science : Chapter 4 : Indian Judiciary
இந்திய நீதித்துறை
கற்றலின் நோக்கங்கள்
* இந்திய நீதித்துறையின் இயல்பு மற்றும் முக்கியத்துவம் குறித்து விவாதித்தல்.
* இந்திய நீதித்துறை உருவாக்கம் குறித்து அறிதல்.
* இந்திய நீதித்துறை அம்சங்களை ஆய்வு செய்தல்.
* நீதித்துறை பங்கை மதிப்பீடு செய்தல்.
* நீதித்துறையின் சுதந்திரத்தை மேம்படுத்தும் காரணிகளை விவாதித்தல்.
* நீதிமன்றச் சீராய்வு, பொது நலன் வழக்கு மற்றும் நீதித்துறை செயல்முறை ஆகியவற்றின் தன்மை மற்றும் முக்கியத்துவத்தை விளக்குதல்.
* அரசமைப்பு, நிர்வாகச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் தன்மை குறித்து தெரிந்து கொள்ளல்.
* இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தின் அமைப்பு, அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளை விளக்குதல்.
* உயர் நீதிமன்றங்கள் மற்றும் கீழமை நீதிமன்றங்களின் அமைப்பு, அதிகாரங்கள், செயல்பாடுகள் குறித்து தெரிந்து கொள்ளல்.
நீதித்துறை சரியாக இயங்குகிறது என்றால் என்ன?
மக்கள், சட்டமன்றங்கள், ஆட்சித்துறையைவிட நீதித்துறையின் மீதே அதிகம் நம்பிக்கை கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். எப்பொழுதெல்லாம் அவர்களுடைய உரிமைகள் மீறப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் அவர்களுடைய உரிமைகளும், தனிச்சலுகைகளும் பாதுகாக்கப்படும் என நீதித்துறை நோக்கி வருவதால் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர்.
இந்திய உச்ச நீதிமன்றம் -
"உச்ச நீதிமன்றம், அனைத்து இந்திய நீதிமன்றமாகும், கட்சி அரசியலில் இருந்தும், அரசியல் கோட்பாடுகளில் இருந்தும் உறுதியாக தனித்து நிற்கும். அது அரசுகள் மாறுவதைக் குறித்து அக்கறை கொள்வதில்லை. - நீதிமன்றமானது, நடைமுறையில் இருக்கும் சட்டத்தின்படி, நிற்கிறது. அனைவரின் மீதும் பரிவு, நன்மதிப்பு கொண்டுள்ளது. எனினும் அது யாருடனும் அணி சேர்வது இல்லை" - மாண்புமிகு திரு ஹரிலால் ஜே. கனியா, இந்திய முதல் தலைமை நீதிபதி.
நீதித்துறையானது அரசாங்கத்தின் மூன்று உறுப்புகளில் ஒன்றாகும், மற்ற இரண்டு சட்டமன்றமாகவும், ஆட்சித்துறையாகவும் இருக்கின்றன. நீதித்துறையானது சட்டங்களுக்கு விளக்கம் அளிப்பதையும், அரசமைப்பை பாதுகாப்பதையும் பணியாகக் கொண்டிருக்கிறது. அது நீதித்துறை நிர்வாகத்தை உறுதிப்படுத்துகின்றது. தனி மனித உரிமைகள், முன்னுரிமைகள் ஆகியவற்றின் மீது அரசு மற்றும் தனிமனிதர்களால் மேற்கொள்ளப்படும் மீறல்களில் இருந்து பாதுகாப்பு அளிப்பதை உறுதிப்படுத்துகிறது. சுதந்திரமான மற்றும் பாகுபாடற்ற நீதித்துறையை உருவாக்குவது ஒரு
திருக்குறள்
1. பிணையாக திருக்குறள் ஒப்புவித்தல்.
கைகலப்பில் ஈடுபட்ட மூன்று கல்லூரி மாணவர்களுக்கு பிணையாக 100 திருக்குறள் களை தொடர்ந்து 10 நாட்கள் அப்பகுதியிலுள்ள குறிப்பிட்ட தமிழாசிரியர் முன்பு ஒப்புவிக்க வேண்டுமென்று நிபந்தனை விதித்து தமிழ்நாடு நீதிமன்றம் பிப்ரவரி 2019 அன்று உத்தரவிட்டது.
ஒரு நபர் மீது தாக்குதல் நடத்தியதாக மூன்று கல்லூரி மாணவர்களுக்கு மேட்டுபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, அவர்கள் சார்பில் பிணைக் கோரப்பட்டது. பிணையின் நிபந்தனையாக அப்பகுதி அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியர் முன்பு தினமும் 100 திருக்குறள்கள் ஒப்புவிக்க வேண்டுமென்று நீதிபதி கூறினார்.
இவ்வாறு தொடர்ந்து 10 நாட்கள் திருக்குறள் ஒப்புவித்தப் பின்பு இறுதி நாளில் அந்த மாணாக்கர்களுக்கு சான்றிதழ் வழங்கும்படியும் நீதிபதி அப்போது உத்தரவிட்டார்.
2. திருக்குறளை ஆழமாகக் கற்பதற்கு வழிவகுத்த மதுரை உயர் நீதிமன்ற கிளை
சென்னை உயர் நீதிமன்றத்தில் மதுரை கிளை வழங்கிய தீர்ப்புகளில் தமிழக பள்ளிகளில் திருக்குறளை ஆழமாகக் கற்க வழிவகுத்து அளித்தத் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். மதுரைகிளை கடந்த 2017ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறைக்கு அளித்த உத்தரவில் பள்ளிப் பாடத்திட்டத்தில் திருக்குறளின் 133 அதிகாரங்களில் 108 அதிகாரங்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. இதன்மூலம் 2017-18 கல்வியாண்டிலிருந்து மாணவர்கள் 1050 திருக்குறள்களையும் கற்கும் வகையில் தமிழ்நாடு அரசு ஆணைப் பிறப்பிப்பதற்கு மதுரைகிளையின் உத்தரவு வழிவகுத்தது. 6 முதல் 12ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்கள் முன்கூறிய திருக்குறள் பாக்கள் அனைத்தையும் கற்பதுடன் அதன் பொருளினையும் தெளிவாகப் புரிந்து கொள்வதை உத்தரவாதம் செய்யும்படியும் அது கூறியது. இதன்மூலம் தற்போது பள்ளிக் கல்வி மாணவர்கள் திருக்குறள் பாக்களை கற்று ஆழமாகப் புரிந்து வருகிறார்கள்.
தமிழில் பண்டைய இலக்கியங்களில் உலகின் 60-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட இலக்கியம் திருக்குறள் ஒன்றேயாகும்.
நாகரிக அரசு செயல்படுவதற்கு முன் நிபந்தனையாகும். இந்தியா போன்ற கூட்டாட்சி அரசு முறை கொண்ட நாடுகளில் கூட்டாட்சியின் பாதுகாவலனாகவும், மத்திய, மாநில அரசாங்கங்களுக்கிடையே எழும் அதிகார வரம்பு கருத்துவேறுபாடுகளுக்குத் தீர்வு காண்பதாகவும் நீதித்துறை விளங்குகிறது.
குழு செயல்பாடு
இந்த பாடப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள மூன்று வழக்கு ஆய்வுகளை கவனமாகப் படித்த பிறகு ஒரு நீதிபதியின் தகுதி குறித்து விவாதிக்கவும். எப்படிபட்ட நபர் ஒரு நல்ல நீதிபதியாக உருவாக முடியும்? ஒரு நீதிபதியை நியமனம் செய்வதற்கு முன் அவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதை ஐந்து உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழுவை உருவாக்கி கலந்துரையாடி அதனை 250 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதி அதனை வகுப்பறை அறிவிப்பு பலகையில் காட்சிப்படுத்தவும்.