Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | பயிற்சி 4.1 (நீளம்)

அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 5 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 4.1 (நீளம்) | 5th Maths : Term 1 Unit 4 : Measurements

   Posted On :  16.10.2023 10:11 pm

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள்

பயிற்சி 4.1 (நீளம்)

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள் : பயிற்சி 4.1 (நீளம்) : புத்தக வினாக்கள் கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 4.1

 

1. கோடிட்ட இடத்தை நிரப்புக.

) 7 மீ 5 செ.மீ = ----------- செ.மீ

விடை:

7 மீ 5 செ.மீ = 7 × 100 + 5 செ.மீ

= 700 + 5

= 705 செ.மீ

 

) 326 மீ = ------------- செ.மீ

விடை:

326 மீ = 326 × 100

= 32600 செ.மீ

 

) 5 கி.மீ 30 மீ = ------------- மீ

விடை:

5 கி.மீ 30 மீ = 5 × 1000 + 30

= 5000 + 30

= 5030 மீ

 

) 505 மி.மீ = ------------- செ.மீ ------------ மி.மீ

விடை:

505 மி.மீ = 505 ÷ 100

= 50 செ.மீ 5 மி.மீ

 

) 650 செ.மீ = ------------- மீ -------------- செ.மீ

விடை:

650 செ.மீ = 650 ÷ 100

= 6 மீ 50 செ.மீ

 

2. சரியா / தவறா?

) 600 மீ என்பது 6 மி.மீ. [தவறு]

) 7000 மீ என்பது 7 கி.மீ. [சரி]

) 400 செ.மீ என்பது 4 கி.மீ. [தவறு]

ஈ) 770 மி.மீ என்பது 77 செ.மீ. [சரி]

) 9000 மீ என்பது 90 மி.மீ. [தவறு]

 

3. கீழ்க்காண்பவற்றின் கூடுதல் காண்.

) 17 மீ 45 செ.மீ + 52 மீ 30 செ.மீ

) 75 கி.மீ 400மீ + 37 கி.மீ 300 மீ + 52 கி.மீ 750 மீ

) 4 செ.மீ 8 மி.மீ + 5 செ.மீ 9 மி.மீ

விடை


 

கீழ்க்காண்பவற்றை கழிக்க.

) 15 கி.மீ 450 மீ - 13 கிமீ 200 மீ.

) 750 மீ 840 மி.மீ - 370 மீ 480 மி.மீ.

) 5 கிமீ 400 மீ - 3 கிமீ 350 மீ

விடை


 

5. கீழ்க்காண்பவற்றை பெருக்குக.

) 350 மீ 45 செமீ × 7

] 25 கி.மீ 300 மீ × 6

) 37 மீ 350 மி.மீ × 8

விடை :


 

6. கீழ்க்கண்டவற்றை வகுக்க:

) 950 கி.மீ 800 மீ ÷ 5

) 49 மீ 770 மி.மீ ÷ 7

) 172 மீ 48 செ.மீ ÷ 4

விடை :


 

7. கீழ்க்கண்டவற்றிற்கு விடையளி:

) சரவணன் என்பவர் புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு தன்னுடைய வாகனத்தை பயன்படுத்தி செல்ல முடிவு செய்தார். வர் செல்ல வேண்டிய பயண தூரம் 165 கி.மீ. ஆகும். அவர் வாகனத்தை இயக்க ஆரம்பிக்கும் போது ஓடோமீட்டர் 000157 கி.மீ எனக் காட்டியது எனில் அவர் சென்னையை அடையும்போது ஓடோமீட்டர் எத்தனை கி.மீ காட்டும்?

விடை:

புதுச்சேரி மற்றும் சென்னைக்கு இடைப்பட்ட தூரம் = 165 கி.மீ

ஓடோமீட்டர் காட்டிய தூரம் = 000157 கி.மீ.

சென்னையை அடையும் போது ஓடோமீட்டர் காட்டும் தூரம்

= 165 கி.மீ + 000157 கி.மீ

= 000322 கி.மீ.

 

) கார்த்திக் ராஜா என்பவர் A லிருந்து புறப்படத் தீர்மானித்தார். அவர் கிழக்குப் பக்கமாக நகர்ந்தால் B யை அடைவார் பின்பு அவர் 2 கி.மீ வடக்குப்பக்கமாக நகர்ந்தால் C யை அடைவார், அதன் பின்பு அவர் 1 கி.மீ மேற்குப் பக்கமாக நகர்ந்தால் D யை அடைவார், பிறகு 2 கி.மீ தெற்கு பக்கமாக நகர்ந்தால் அவர் எந்த இடத்தை அடைவார். சரியான படத்தை வரைந்து ஆராய்ந்துபார் மேலும் அவர் புறப்பட்ட இடத்தை அடைய எவ்வளவு தூரம் பயணம் செய்ய வேண்டும்?

விடை:


கார்த்திக் A யை அடை மொத்த தூரம்

= 1 + 2 + 1 + 2 = 6 கி.மீ

 

) சங்கீதா என்பவர் பூந்தோட்டத்துடன் கூடிய புதுவீட்டை தற்போது கட்டி முடித்துள்ளார். பூந்தோட்டத்தை அவள் அளந்து பார்த்தால் 6 மீ × 6 மீ பரப்பு உடையதாக இருந்தது. அப்பகுதியை வேலியிட ஒவ்வொரு 1 மீ இடைவெளியில் தூண் அமைத்தால் எத்தனைத் தூண்கள் தேவைப்படும்? ஒவ்வொரு தூணும் 1.5 மீ உயரம் உடையதாக இருந்தால் முழுப் பகுதியையும் வேலியிட தேவைப்படும் தூண்களின் மொத்த உயரம் எவ்வளவு?

விடை:

தேவைப்படும் மொத்த கம்பங்கள் = 20

முழு பகுதியை வேலியிட ஆகும் மொத்த நீளம் = 20 × 1.5

= 30 மீ

 

) ஒரு மாணவனுக்கு மேல் சட்டை தைக்க 1 மீ 25 செ.மீ துணி தேவை எனில் 22 மாணவர்களுக்கு மேல் சட்டை தைக்க எவ்வளவு துணி தேவைப்படும்?

விடை:

ஒரு மாணவனுக்கு மேல் சட்டை தைக்க தேவையான துணி = 1 மீ 25 செ.மீ

22 மாணவர்களுக்கு தேவையான துணி = 1 மீ 25 செ.மீ × 22


= 27 மீ 50 செ.மீ

 

) A என்ற கிராமத்திற்கும் B என்ற கிராமத்திற்கும் இடையே உள்ள தூரம் 3 கி.மீ 450 மீ ஆகும். B என்ற கிராமத்திற்கும் C என்ற கிராமத்திற்கும் இடையே உள்ள தூரம் 5 கி.மீ 350 மீட்டர் ஆகும். A கிராமத்திலிருந்து C கிராமத்திற்கு சாலை அமைக்கப்பட்டால், சாலையின் நீளம் எவ்வளவு?

விடை:

A க்கும் B க்கும் இடையேயுள்ள தூரம் = 3 கி.மீ 450 மீ

B க்கும் C க்கும் இடையேயுள்ள தூரம் = 5 கி.மீ 350 மீ

A க்கும் C க்கும் இடையேயுள்ள மொத்த தூரம் = 3 கி.மீ 450 மீ + 5 கி.மீ 350 மீ


= 8 கி.மீ 800 மீ

 

இவற்றை முயல்க

கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களிலிருந்து கதைக் கணக்குகள் உருவாக்குக.


Tags : Measurements | Term 1 Chapter 4 | 5th Maths அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 1 Unit 4 : Measurements : Exercise 4.1 (Length) Measurements | Term 1 Chapter 4 | 5th Maths in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள் : பயிற்சி 4.1 (நீளம்) - அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள்