Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | பயிற்சிக் கணக்குகள்

எலக்ட்ரானியல் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள் (ELECTRONICS AND COMMUNICATION) | இயற்பியல் - பயிற்சிக் கணக்குகள் | 12th Physics : UNIT 10a : Semiconductor Electronics

   Posted On :  04.12.2023 03:30 am

12 ஆம் வகுப்பு இயற்பியல் : அலகு 10a : எலக்ட்ரானியல் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள் (ELECTRONICS AND COMMUNICATION)

பயிற்சிக் கணக்குகள்

12 ஆம் வகுப்பு இயற்பியல் : அலகு 10 : எலக்ட்ரானியல் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள் (ELECTRONICS AND COMMUNICATION) : பயிற்சிக் கணக்குகள், பல்வேறு வினாக்களுக்கான கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்.

IV  பயிற்சிக் கணக்குகள்


1. தரப்பட்டுள்ள மின்சுற்றில் இரண்டு நல்லியல்பு டையோடுகள் படத்தில் காட்டியுள்ளவாறு இணைக்கப்பட்டுள்ளன. மின்தடை R1 வழியே பாயும் மின்னோட்டத்தைக் கணக்கிடுக.


தீர்வு: D1 பின்னோக்கு சார்பில் உள்ளதால் மின்னோட்டம் அதன் வழியே செல்லாது

D2 முன்னோக்கு சார்பு 

எனவே மொத்த மின்தடை 2Ω + 2Ω = 4 Ω

மின்னழுத்தம் V = 10V 

R1 வழியே பாயும் மின்னோட்டம் 

I = V/R = 10/4 =2.5A

[விடை: 2.5 A]



2. பின்வரும் படத்தில் உள்ளவாறு நான்கு சிலிக்கான் டையோடுகள் மற்றும் ஒரு 10 Ω மின்தடை ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு டையோடும் 1 Ω மின்தடை கொண்டவை எனில் 10 Ω மின்தடை வழியாகப் பாயும் மின்னோட்டத்தினைக் கணக்கிடுக.

 

தீர்வு:

● D1 மற்றும் D4 டையோடுகள் பின்னோக்கு சார்பில் அமைந்துள்ளதால், திறந்த சுற்றாக செயல்படும். மின்னோட்டத்தைக் கடத்தாது.

● D2 மற்றும் D3 டையோடுகள் முன்னோக்கு சார்பில் உள்ளன. மூடிய சாவியாக செயல்படுகின்றன. எனவே மின்தடை இல்லை.


சிலிக்கானுக்கு மின்னழுத்த அரணின் மதிப்பு 0.7 V என்பது நாம் அறிந்ததே.

ஃ இச்சுற்றில் உள்ள மின்னழுத்தம்

= 3V - 0.7 V - 0.7 V = 1.6 V

ஆகவே, மொத்த மின்தடை

= 1 + 10  +1 = 12Ω

10 Ω மின்தடை வழியாக பாயும் மின்னோட்டம்,

I = V/R = 1.6/12 = 0.13 A

[விடை: 0.13 A]


3. VCEsat = 0.2 V எனவும் β = 50 எனில், பின்வரும் படத்தில் காட்டியுள்ள டிரான்சிஸ்டரைத் தெவிட்டிய நிலைக்குக் கொண்டுசெல்ல தேவைப்படும் சிறும அடிவாய் மின்னோட்டத்தைக் (IB) கணக்கிடுக.



 [விடை: 56 µA]


4. பின்வரும் படத்தில் காட்டப்பட்ட மின்சுற்றில் உள்ள இருமுனை சந்தி டிரான்சிஸ்டரின் மின்னோட்ட பெருக்கம் β = 50 என்க. VEB = 600 mV என்ற உமிழ்ப்பான்-அடிவாய் மின்னழுத்த வேறுபாட்டிற்கு ஏற்ற, உமிழ்ப்பான்-ஏற்பான் மின்னழுத்த வேறுபாட்டினை VEC வோல்ட்டில் கணக்கிடுக.


தீர்வு:

β = 50

VEB = 600 × 10−3V

RB = 60 kῼ, RC = 500 kῼ

VB = VE − VEB 

= 3 − 0.6 = 2.4V

IB = VB /RB = 2.4 /(60 × 103) = 0.04 × 10−3

IB = 40 μA 

Ic = β IB

= 50 × 40 × 10−6

Ic = 2mA

Vc = Ic Rc = 500IC 

= 500 × 2 × 10−3

VEC = VE − VC

= 3 − 1

= 2V

[விடை: 2 V]


5. பின்வரும் மின்சுற்றில் 3Ω மற்றும் 4Ω மின்தடைகள் வழியாக பாயும் மின்னோட்டங்களை கண்டுபிடி. D1 மற்றும் D2 நல்லியல்பு டையோடுகள் எனக் கொள்க.


தீர்வு. கொடுக்கப்பட்டவை:

D1 & D2 இரண்டும் நல்லியல்பு டையோடுகள். D1 என்பது முன்னோக்கு சார்பில் உள்ளதால், இது கடத்தி போல செயல்படும். எனவே இது சுழி மின்னழுத்த அரண் கொண்ட மூடிய சாவியாக செயல்படும்.

D2 என்பது பின்னோக்கு சார்பில் உள்ளது. இது ஒரு திறந்த சாவியாக செயல்படும். ஆகவே, D2 வழியே மின்னோட்டம் பாயாது.

D1 வழியே மின்னோட்டம், I = V/R

R = R1 + R2  =  2 + 4 = 6 Ω

V = 12 V

I = 12/6 = 2 A

D1 வழியே மின்னோட்டம் I = 2A

D2 வழியே மின்னோட்டம் I = 0

[விடை: 0 மற்றும் 2A]


6. பூலியன் இயற்கணிதத்தின் விதிகள் மற்றும் தேற்றங்களைப் பயன்படுத்தி பின்வரும் பூலியன் சமன்பாடுகளை நிரூபி.





7. கொடுக்கப்பட்ட பூலியன் சமன்பாட்டை உண்மை அட்டவணையைக் கொண்டு நிரூபி



8. பின்வரும் மின்னழுத்தச் சீரமைப்பான் மின்சுற்றில் 15 V முறிவு மின்னழுத்தம் உள்ள செனார் டையோடு பயன்படுத்தப்பட்டுள்ளது. பளு மின்தடை வழியாகப் பாயும் மின்னோட்டம், மொத்தம் மின்னோட்டம், மற்றும் டையோடு வழியாகப் பாயும் மின்னோட்டம் ஆகியவற்றைக் கண்டுபிடி. நல்லியல்பு டையோடு எனக் கொள்க.



[விடை: 5mA; 20 mA; 15 mA]


9. கொடுக்கப்பட்ட மின்சுற்றில் வெளியீடு Yக்கான பூலியன் சமன்பாடு மற்றும் அதன் உண்மை அட்டவணையும் தருக.



[விடை: ]



Tags : with Answers, Solution | Semiconductor Electronics | Physics எலக்ட்ரானியல் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள் (ELECTRONICS AND COMMUNICATION) | இயற்பியல்.
12th Physics : UNIT 10a : Semiconductor Electronics : Exercise Numerical Problems with Answers, Solution | Semiconductor Electronics | Physics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு இயற்பியல் : அலகு 10a : எலக்ட்ரானியல் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள் (ELECTRONICS AND COMMUNICATION) : பயிற்சிக் கணக்குகள் - எலக்ட்ரானியல் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள் (ELECTRONICS AND COMMUNICATION) | இயற்பியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு இயற்பியல் : அலகு 10a : எலக்ட்ரானியல் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள் (ELECTRONICS AND COMMUNICATION)