அன்றாட வாழ்வில் வேதியியல் | மூன்றாம் பருவம் அலகு 4 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - சுடர் | 7th Science : Term 3 Unit 4 : Chemistry in Daily Life

7 ஆம் வகுப்பு அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 4 : அன்றாட வாழ்வில் வேதியியல்

சுடர்

சுடர் என்பது, ஒரு வேதிவினை மற்றும் வாயுக்களின் கலவையாகும். சுடரானது ஒளி மற்றும் வெப்பத்தைத் தருகிறது. இது பருப்பொருள் அன்று, - ஆனால், நெருப்பு ஒரு பருப்பொருள். ஆவி நிலையிலுள்ள எரிபொருள், ஆக்ஸிஜன், கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, நீராவி மற்றும் பல எளிதில் ஆவியாகிற பொருள்கள் ஆகியவை சுடரின் வேதிவினையாக்க் கருதப்படுகின்றன.

சுடர்:


நெருப்பு ஒரு வாயுவா? ஒரு திரவமா, ஒரு திடப்பொருளா?

சுடர் என்பது, ஒரு வேதிவினை மற்றும் வாயுக்களின் கலவையாகும். சுடரானது ஒளி மற்றும் வெப்பத்தைத் தருகிறது. இது பருப்பொருள் அன்று, - ஆனால், நெருப்பு ஒரு பருப்பொருள். ஆவி நிலையிலுள்ள எரிபொருள், ஆக்ஸிஜன், கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, நீராவி மற்றும் பல எளிதில் ஆவியாகிற பொருள்கள் ஆகியவை சுடரின் வேதிவினையாக்க் கருதப்படுகின்றன. 

சுடர் மற்றும் அதன் அமைப்பு:

ஒளியின் திருவிழா எது? அந்த விழாவின் சிறப்பு என்ன? ஆம். வீடுகளை அலங்கரிக்க அதிக விளக்குகளை ஏற்றி வைப்போம் இல்லையா? இப்போது விளக்குகள் எவ்வாறு ஒளிர்கின்றன? ஆம், சுடருடன்.



வண்ண வண்ண சுடர் சோதனை செய்வோம் வாருங்கள் 

• வண்ண வண்ணச் சுடர் சோதனைசெய்வோம் வாருங்கள்: 

வெண்மை சுடர் – எப்சம் உப்பு

 ஊதா சுடர் - லித்தியம் உப்பு

இண்டிகோச சுடர் – பொட்டாசியம் குளோரைடு

நீல சுடர் - பிளீச்சிங்பவுடர் 

பச்சை சுடர் – போராக்ஸ்ப வுடர் 

மஞ்சள் சுடர் – கால்சியம் குளோரைடு 

ஆரஞ்சு சுடர் – சமையல் உப்பு 

சிவப்பு சுடர் – ஸ்டிரான்ஸ்யம் குளோரடு

ஆசிரியரின் உதவியுடன் மேற்கண்ட உப்பை ஆல்கஹால் கலவையுடன் எதாவது ஒரு சுடருடன் வண்ணமாக்கி மகிழலாம்.


சுடர் என்பது, எரியக்கூடிய பொருளின் எரிதல் மண்டலமாகும். எரியும்போது ஆவியாகும் பொருள்கள் சுடரை உருவாக்குகின்றன. எடுத்துக்காட்டு: மெழுகு, மண்ணெண்ணெய் போன்றவை ஆகும்.

ஆனால், சில பொருள்கள் சுடரை உருவாக்காது, ஏனெனில், அவை ஆவியாகாத பொருள்களைக் கொண்டுள்ளன. எ.கா.நிலக்கரி 


மெழுகு சுடரின் அமைப்பு :

ஒரு மெழுகுவர்த்திச் சுடர் மூன்று முக்கிய மண்டலங்களைக்

கொண்டுள்ளது, அவையாவன, 

l. சுடரின் வெளிப்புறப் பகுதி:

எரிபொருள் முழுமையான எரிதல் நடைபெறும் பகுதியாகும், இது நீலநிறத்தை கொண்ட வெப்பமான பகுதியாகும். இது சுடரின் ஒளிராத பகுதியாகும். 

II. சுடரின் நடுப்பகுதி:

எரிபொருள் குறைவாக எரிதல் நடைபெறும் பகுதியாகும், இது மஞ்சள் நிறத்தை கொண்ட வெப்பமான பகுதியாகும். இது சுடரின் ஒளிரும் பகுதி.

III. சுடரின் உட்புற பகுதி:

எரிபொருள் எரியாத வாயுக்களைக் கொண்ட பகுதியாகும். இது கருமை நிறம் கொண்ட மிக குறைந்த வெப்பப்பகுதியாகும். 


மெழுகுவர்த்தியின் மேலே உள்ள காற்று எரிவதால் மெழுகுவர்த்தி சுடர் உருவாகிறது. வெப்பசலனக் கொள்கையின்படி சுடரின் மேல் எரியக்கூடிய காற்றின் அடாத்தியானது சுற்றுப்புறத்தில் உள்ள காற்றின் அடாத்தியைவிட குறைவாக இருப்பதால் சுடரானது எப்போழுதும் மேல்நோக்கி இருக்கின்றது.


அன்றாட வாழ்வில் வேதியியலின் பங்கு



கலோரி மதிப்பு:

ஒரு கிலோ எரிபொருளானது முழுமையாக எரிதல் நடைபெற்று வெளியிடப்படும், வெப்ப ஆற்றலின் அளவு ஒரு கலோரிஃபிக் மதிப்பு என்று அழைக்கப்படுகிறது. கலோரிஃபிக் மதிப்பு = உற்பத்தி செய்யப்படும் வெப்பம் / எரிக்கப் பயன்படுத்தப்படும் எரிபொருளின் அளவு kJ / kg இல்

4.5 கிலோ எரிபொருள் முழுவதுமாக எரிந்து, உற்பத்தி செய்யப்படும் வெப்பத்தின் அளவு 1, 80,000 கி.ஜே. என அளவிடப்படுகிறது என்றால் அதன் கலோரிஃபிக் மதிப்பு என்ன?

கலோரிஃபிக் மதிப்பு = 1, 80,000 / 4.5 = 40,000KJ/Kg

பல்வேறு எரிபொருள்களின் கலோரிஃபிக் மதிப்பு



எரிபொருள் கலோரிஃபிக் மதிப்பு (kJ/kg)

மாட்டுச்சானம் 6000 - 8000

மரக்கட்டை 17000 - 22000

நிலக்கரி 25000 - 33000

பெட்ரோல் 5000

மண்எண்ணெய் 45000

டீசல் 450000

மீத்தேன் 500000

சி.என்.ஜி 50000

எல்.பி.ஜி 55000

பயோகேஸ் 35000 - 40000

ஹைட்ரஜன் 150000


சுற்றுச்சூழல் பாதிப்புகள்

CO - சுவாச பிரச்சனைக்கு வழிவகுக்கிறது

CO2 - உலக வெப்பமயமாதல் 

SO2 / NO2 - அமிலமழை





Tags : Chemistry in Daily Life | Term 3 Unit 4 | 7th Science அன்றாட வாழ்வில் வேதியியல் | மூன்றாம் பருவம் அலகு 4 | 7 ஆம் வகுப்பு அறிவியல்.
7th Science : Term 3 Unit 4 : Chemistry in Daily Life : Flame Chemistry in Daily Life | Term 3 Unit 4 | 7th Science in Tamil : 7th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 4 : அன்றாட வாழ்வில் வேதியியல் : சுடர் - அன்றாட வாழ்வில் வேதியியல் | மூன்றாம் பருவம் அலகு 4 | 7 ஆம் வகுப்பு அறிவியல் : 7 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 4 : அன்றாட வாழ்வில் வேதியியல்