Home | 11 ஆம் வகுப்பு | 11வது அரசியல் அறிவியல் | கலைச்சொற்கள்(Glossary) : தமிழக அரசியல் சிந்தனைகள்

அரசியல் அறிவியல் - கலைச்சொற்கள்(Glossary) : தமிழக அரசியல் சிந்தனைகள் | 11th Political Science : Chapter 14 : Tamil Nadu Political Thought

   Posted On :  04.10.2023 07:18 am

11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 15 : தமிழக அரசியல் சிந்தனைகள்

கலைச்சொற்கள்(Glossary) : தமிழக அரசியல் சிந்தனைகள்

தேசிய இயக்கம்: இந்த இயக்கம் ஒரு சமூக மற்றும் அரசியல் இயக்கமாகும். இது தேசிய அடையாளத்துடனும் மற்றும் சுதந்திரமாக இருப்பதற்காக மக்கள் ஒரு கூட்டமாக/ இயக்கமாக தேசத்தில் இதன் உறுப்பினர்களை கொண்டு செயல்படுவதாகும்.

கலைச்சொற்கள்: Glossary


அரசியல் இயக்கம் : இது ஒரு சமூக கூட்டம் இது அரசியல் இலக்குகளை ஒன்றிணைத்து செயல்படுத்துவதற்காக ஏற்படுத்தப் பட்டதாகும்


சமூக இயக்கம் : இது ஒரு வகையான சமூக கூட்டத்தின் செயல்பாடு ஆகும். ஒரு சமூகத்தில் உள்ள மக்கள் அனைவருமோ அல்லது ஒரு பிரிவினரோ ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைவதற்காக ஒன்றிணைந்து செயல்படுவது


திராவிட இயக்கம் : திராவிட இயக்கம் சென்னை மாகாணத்தில் ஏற்படுத்தப்பட்டது. இது தென் இந்தியாவின் நான்கு முக்கிய இனம், மொழி உள்ளடக்கிய ஒரு பிரிவு ஆகும்


சுயமரியாதை இயக்கம் : சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்ட அனைத்து சாதியினரும் தங்களுக்கென்று சயமரியாதையுடனும் உரிமைகளுடனும் வாழ்வதற்கு ஏற்படுத்தப்பட்ட இயக்கம்


தொழிளாலர் இயக்கம்: பணியாளர் / தொழிளாலர்களின் நல்வாழ்வுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு ஆகும்


நீதிக்கட்சி: இது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சென்னை மாகாணத்தில் தோன்றிய அரசியல் கட்சியாகும். இது பிராமணரல்லோதோரை பிரதிநிதிப்படுத்துவதற்காக தோன்றியது


தனி தமிழ் இயக்கம்: இந்த இயக்கம், ஒரு இயக்கமாக செயல்பட்டு தமிழ் மொழியை அன்னியநாட்டு மொழியின் தாக்கத்திலிருந்து தமிழ் மொழியை சுதந்திரமாக இருக்க செய்ய தோன்றியதாகும், குறிப்பாக சமஸ்கிருதத்தின் வார்த்தையின் தாக்கத்திலிருந்து விடுதலை பெறுவதற்காக தோன்றியதாகும்


தன்னாட்சி இயக்கம்: 1916 மற்றும் 1918ம் ஆண்டுகளுக்கு இடையேயான இந்திய சுதந்திர இயக்கம் ஆகும். இது அன்னிபெசன்ட் அம்மையரால் துவங்கப்பட்டது


பாகுபாடு: சாதி, மத இன அடிப்படையில் ஒருவரை அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களை சமமாக நடத்தாமை மற்றும் அவர்களுக்கான வாய்ப்புகளை மறுத்தல் 


தேசிய இயக்கம்: இந்த இயக்கம் ஒரு சமூக மற்றும் அரசியல் இயக்கமாகும். இது தேசிய அடையாளத்துடனும் மற்றும் சுதந்திரமாக இருப்பதற்காக மக்கள் ஒரு கூட்டமாக/ இயக்கமாக தேசத்தில் இதன் உறுப்பினர்களை கொண்டு செயல்படுவதாகும்.

Tags : Political Science அரசியல் அறிவியல்.
11th Political Science : Chapter 14 : Tamil Nadu Political Thought : Glossary in Tamil Nadu Political Thought Political Science in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 15 : தமிழக அரசியல் சிந்தனைகள் : கலைச்சொற்கள்(Glossary) : தமிழக அரசியல் சிந்தனைகள் - அரசியல் அறிவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 15 : தமிழக அரசியல் சிந்தனைகள்