தேச கட்டமைப்பின் சவால்கள் | அரசியல் அறிவியல் - அருஞ்சொற்பொருள் | 12th Political Science : Chapter 7 : Challenges of Nation Building

   Posted On :  03.04.2022 01:48 am

12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 7 : தேச கட்டமைப்பின் சவால்கள்

அருஞ்சொற்பொருள்

அரசியல் அறிவியல் : தேச கட்டமைப்பின் சவால்கள்

அருஞ்சொற்பொருள்



பிரிட்டிஷ் காமன்வெல்த்: ஐக்கிய பேரரசு (பிரிட்டன்) தலைமையிலான கூட்டமைப்பு பெரும்பாலும் இக்கூட்டமைப்பின் உறுப்பு நாடுகள் முன்னாள் பிரிட்டிஷ் காலனிய நாடுகளாகும். விடுதலை பெற்ற பின்பு பிரிட்டனின் தலைமையில் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.


பண்பாடு ஓரினம்: ஒருமுக தன்மை வாய்ந்த சமுதாயம் தங்களுடைய பழக்கவழக்கங்களில் ஒன்றுக்கொன்று தொடர்பில் அமைந்து அதனை அரசின் மூலம் நிலைப்புத்தன்மை ஏற்படுத்துவது. கலாச்சாரத் துறையில் வேறுபாடுகள் நீங்கியதாக இருக்கும் நிலை.


அரசியல் நிர்ணயசபை: அரசமைப்பு வரையப்பட்டு பின்பு மக்கள் பிரதிநிதிகளால் விவாதிக்கப்பட்டு, பெரும்பான்மை கருத்துக்களால் இறுதி செய்யப்பட்ட மன்றமாகும். புதிய அரசாங்கத்தின் அடிப்படை கோட்பாடுகளை நிர்ணயம் செய்யப்பட்ட இடமாகும்.


டொமினியன்: பிரிட்டிஷ் காமன்வெல்த் அமைப்பின் கீழ் சுய ஆட்சி உரிமை பெற்ற நாடு. 


திராவிடர் கழகம்: இது ஒரு பகுத்தறிவுவாத அமைப்பாகும். தமிழர் வாழ்வு நிலை உயர்த்துவதற்காக குரல் கொடுத்து அவர்களை சுயமரியாதை உள்ள மனிதர்களாக திகழ வைப்பதை நோக்கமாக கொண்ட இயக்கம்.


பொதுச்சபை: பிரிட்டன் நாடாளுமன்றத்தின் கீழவையாகும். இந்த அவை உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாவர்.


மாநிலங்களுக்கு இடையேயான குழு: மாநிலங்களுக்கிடையே ஒத்துழைப்பையும், ஒருங்கிணைப்பையும் மேம்படுத்தி மத்திய அரசாங்கத்துடன் இணக்கமான போக்கினை பேணும் குழு.


மன்னராட்சி: அரசாங்கம் அரசு அல்லது அரசு பேரரசினை ஆள்வதாகும். அரசியல் சட்ட ரீதியாக அமைந்த மன்னராட்சி அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும். அதே சமயத்தில் முழுமையான மன்னர் ஆட்சி நடைபெறும் நாட்டில் மன்னருக்கு அதிகாரங்கள் வரம்பற்றதாக இருக்கும்.


ராஜதானி: பிரிட்டிஷ் காலனி ஆட்சியின் போது இருந்த பெரும் நிர்வாகப் பகுதி இப்பகுதி கவர்னர் ஜெனரல் என்ற பொறுப்பாளரால் ஆளப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியின் போது இந்தியாவில் பம்பாய், கல்கத்தா மற்றும் சென்னை ஆகிய மூன்று ராஜதானி இருந்தன.


சுதேச அரசுகள்: சுதேச அரசுகள் உள்ளூர் அரசு என்றும் அழைக்கப்படுகின்றது. சிறு சிறு பகுதிகளாக ஆட்சி செய்யப்பட்டது. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது இத்தகைய சிற்றரசர்களால் ஆளப்பட்ட சுதேச அரசுகள் காலனி ஆட்சியாளர்களுடன் இணக்கமான போக்கினை கடைபிடித்தனர்.


மாகாணங்கள்: பிரசிடென்சியை காட்டிலும் சிறிய நிர்வாக அமைப்புகள். இம்மாகாணங்கள் பிரிட்டனின் காலனி ஆட்சியின் கீழ் கட்டுப்பட்டிருந்தன. 


வட்டம்: சில தெற்காசிய நாடுகளில் உள்ள நிர்வாக அளவிலான ஒரு பகுதி. மாவட்டத்தின் கீழ் உள்ள நிர்வாக வடிவம் ஆகும்.


மத்திய நிதி நிலை அறிக்கை: இதனை வருடாந்திர நிதி நிலை அறிக்கை என்றும் கூறுவர். மத்திய அரசாங்கத்தின் நிதி ஆண்டின் கணக்கு அல்லது மதிப்பீடு குறித்த அறிக்கையாகும். மத்திய அரசாங்கத்தின் ஒரு வருடத்திய (நிதி ஆண்டு) நிதி நிலை பற்றிய விரிவான அறிக்கையாகும். நிதி ஆண்டானது ஒவ்வொரு ஆண்டு ஏப்ரல் முதல் நாள் ஆரம்பித்து அடுத்தாண்டு மார்ச் 31 அன்று முடிவடையும். இது இரண்டு வகையிலான அறிக்கை என வகைப்படுத்தப்படுகின்றது. ஒன்று வருவாய் நிதிநிலை அறிக்கை மற்றும் மூலதான நிதிநிலை அறிக்கை.


ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதிகள்: மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள நிர்வாக அமைப்புகளாகும். மாநிலங்கள் மறுசீரமைப்பு நடவடிக்கையின் போது சில நிர்வாக அமைப்புகள் பலம் குறைந்து, பொருளாதாரரீதியாக நிலையற்ற தன்மையிலும் இருந்தன. இவைகள் பூகோளரீதியாக சிறிய அளவில் இருந்தன. இவைகள் பிரெஞ்சு மற்றும் போர்ச்சுகீசிய காலனி ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாக இருந்து பின்பு விடுதலை அடைந்த நிலப்பகுதிகளாகும். 


வைஸ்ராய்: காலனிய ஆட்சியின்போது குறிப்பாக 1858-ஆம் ஆண்டியிலிருந்து பிரிட்டன் பேரரசின் பிரதிநிதியாக இந்தியாவில் ஆட்சி செய்தவர். கவர்னர் ஜெனரல் என்ற பதவி வைசிராய் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.


Tags : Challenges of Nation Building | Political Science தேச கட்டமைப்பின் சவால்கள் | அரசியல் அறிவியல்.
12th Political Science : Chapter 7 : Challenges of Nation Building : Glossary Challenges of Nation Building | Political Science in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 7 : தேச கட்டமைப்பின் சவால்கள் : அருஞ்சொற்பொருள் - தேச கட்டமைப்பின் சவால்கள் | அரசியல் அறிவியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 7 : தேச கட்டமைப்பின் சவால்கள்