Home | 12 ஆம் வகுப்பு | 12வது அரசியல் அறிவியல் | மாநிலங்கள் மறுசீரமைப்புக்கு பிறகு இந்தியா

தேச கட்டமைப்பின் சவால்கள் | அரசியல் அறிவியல் - மாநிலங்கள் மறுசீரமைப்புக்கு பிறகு இந்தியா | 12th Political Science : Chapter 7 : Challenges of Nation Building

   Posted On :  03.04.2022 01:26 am

12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 7 : தேச கட்டமைப்பின் சவால்கள்

மாநிலங்கள் மறுசீரமைப்புக்கு பிறகு இந்தியா

பிரிட்டனின் காலனி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது இங்கு சுமார் 600 நிர்வாக அமைப்புகள் சுதேச அரசுகள் என்ற பெயரில் இருந்தன.

மாநிலங்கள் மறுசீரமைப்புக்கு பிறகு இந்தியா


1947-க்கும் பின்னர் சுதந்திர இந்தியா

பிரிட்டனின் காலனி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது இங்கு சுமார் 600 நிர்வாக அமைப்புகள் சுதேச அரசுகள் என்ற பெயரில் இருந்தன. நிலவியல் அமைப்பு, கலாச்சார, மத முன்னுரிமையில் மக்கள் இந்தியாவிலோ அல்லது பாகிஸ்தானிலோ இருந்து கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டது. இதற்கிடையே பூட்டான் போன்ற சில நாடுகள் உருவானது. தற்போது உள்ள நிர்வாக அமைப்பு 1947- க்கும் 1950-க்கும் இடையே அமைக்கப்பட்டதாகும். ஒரு சில பகுதிகள் அதாவது மைசூர், ஹைதராபாத், போபால் ஆகியவை பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்தே தங்களது எல்லைகளை மாற்றம் செய்யாமல் தக்கவைத்துக் கொண்டன.

மத மோதல்களுக்கு மத்தியில் விடுதலைக்குப் பின்னர் இந்தியா இரண்டு நாடுகளை அதாவது இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உருவாவதைக் கண்டன. இந்திய விடுதலை காலனி ஆட்சிக்கு முடிவுகட்டி, மாநிலங்கள் மறுசீரமைப்புக்கு வழிவகுத்தது. அது பெரும்பாலும் மொழி அடிப்படையில் அமைந்தது. நிலவியல் அடிப்படையிலும், கலாச்சார அடிப்படையிலும் சில மாநிலங்கள் அமைந்தன. இவ்வாறு புதிய இந்தியா மறு கட்டமைக்கப்பட்டு மறு சீரமைப்பும் மேற்கொள்ளப்பட்டது. இதனால் ஆட்சியும், நிர்வாகமும் எளிமைப் படுத்தப்பட்டது. புதிதாக மறுசீரமைக்கப்பட்ட இந்தியா, கலாச்சார பன்முகத்தன்மை, மொழிகள், உன்னத பாரம்பரியம் ஆகியவற்றை பராமரித்து வருகிறது. இந்திய மக்களிடையே, ஒற்றுமை உணர்வையும், இந்த நாடு நமது என்ற மனப்பாங்கினையும் ஊட்டுகின்ற பொறுப்பு இந்திய அரசாங்கத்திற்கு உள்ளது. விடுதலை இயக்கத்தின் போது, மக்களை அணி திரட்ட மாநில / வட்டார மொழிகள் ஆற்றல் மிக்க சக்தியாகத் திகழ்ந்தன என்பதனை காங்கிரசு இயக்கம் கவனத்தில் எடுத்துக் கொண்டது.

காலனிய ஆட்சியில் இந்திய வரைபடமானது உள்ளூர் மொழிகள், வரலாறு மற்றும் கலாச்சாரபன்மைத்துவநிலப்பகுதியை கணக்கில் கொள்ளாது அமையப் பெற்றிருந்தது. தற்போது மாநிலங்கள் உள்ளாட்சி அரசாங்கத்துடன் சீரமைக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் மறுசீரமைப்பு என்பது மாநிலங்களின் சுயாட்சியை பாதுகாப்பதுடன் மத்திய - மாநில அரசுகளுக்கிடையில் அதிகார சமநிலையை நிலவச் செய்தது. இருந்த போதிலும் மொழிவழிப் போராட்டங்கள் பல நடந்ததன் விளைவாக மாநில அரசுகளைக் காட்டிலும் மத்திய அரசு வலிமையானதாக இருக்க வேண்டியிருந்தது. இதனால், தேசக் கட்டமைப்புப் பணிகள் புதிய சோதனையை எதிர் கொண்டது. மாநிலங்கள் அதிக அதிகாரங்களுடன் சுயாட்சி அந்தஸ்துடன் தங்களின் மொழி, இனம், நில எல்லைகள், மொழியை அடிப்படையாகக் கொண்ட அரசியல் ஆகியவனவற்றையே விரும்பின.


ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் பட்டேல் உள்ளிட்ட தலைவர்கள் தேசக் கட்டமைப்புக்கு வழிவகுத்தனர். நாடு பிரிவினையைத் தொடர்ந்து எழுந்த வேதனைமிக்க சூழ்நிலைகள் அவர்களுக்குக் கடும் வலியை ஏற்படுத்தின. எனவே, நாடு மேலும் துண்டாடப்படுவதை விரும்பவில்லை. ஏனெனில், மேலும் ஒற்றுமை கொண்ட நாட்டினை உருவாக்கும் கனவு கொண்டிருந்தனர். எனவே, மொழி, இனம், மதம் அடிப்படையில் மக்கள் மத்தியில் மேலும் பிரிவினையோ, அடையாளப் பிரச்சனையோ உருவாகுவதை விரும்பவில்லை. கடந்த கால அனுபவத்தின் அடிப்படைகளைக் கணக்கில் கொண்டு மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். முன்பு காலனி ஆட்சிக்கு உட்பட்ட மாகாணங்கள் இன்று தனிச்சிறப்பு வாய்ந்த கலாச்சார அடையாளம், தனித்தன்மை வாய்ந்த மொழி, பொருளாதார, நிலவியல் அமைப்பு, அரசியல் மேம்பாடு, நிர்வாக வசதி பெற்ற மாநிலங்களாக அமைந்துள்ளன.


சவால்களும் பேச்சு வார்த்தைகளும்

பல மாநிலங்கள் உருவாக்கப்பட்ட பின்பும், சில தனி மாநில கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன. இந்திய அரசியல் மற்றும் நிர்வாக வரலாறானது மாநிலங்கள், மக்களாட்சி பிரதிநிதித்துவப்படுத்தலுக்கான இடத்தினை வழங்குகிறது. அரசமைப்பு சட்டப்படி அரசியல் தன்னாட்சிக்கான சட்ட ரீதியான உரிமையை கொண்டிருக்கிறது. புதிதாக மாநிலங்கள் அமைக்கப்பட்ட பிறகு, வளங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதும் அவ்வளங்களை பெறுவதற்கான உரிமைகளை அடைவதும் முன்னுரிமைப் பணியாக இருந்தன. பல மாநிலங்கள் பெரிதாகவும், சில மாநிலங்கள் சிறிய அளவிலும் இருந்தன. சில மாநிலங்கள் பெரிதோ, சிறிதோ ஆனால் பிற மாநிலங்களோடு ஒப்பிடும் போது அதிக வலுவுடன் திகழ்ந்தன. வளர்ந்த மாநிலங்களுக்கும், வளர்ச்சி குறைந்த மாநிலங்களுக்கும் இடையே சமநிலைப் படுத்துதலை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டியிருந்தது. மாநிலங்களுக்கான முதலீடு செய்வது, வளர்ச்சி திட்டங்கள், வேலை வாய்ப்புகள் ஆகியவற்றில் முன்னுரிமையுடன் பாரபட்சமாக பகிர்வதன்மூலம் இச்சமநிலை உறுதி செய்யப்பட்டது. இருந்தபோதும் மாநிலங்கள் பல அளவுகளில் இருப்பதால் பெரிய மாநிலங்கள் வளங்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முயலும் என்பதால் சிறிய மாநிலங்கள் வளங்களை அணுகும் உரிமைகள் பறிக்கப்படும் என சிறிய மாநிலங்கள் குரல் எழுப்பின. இதனால் ஒருவித வெறுப்புணர்ச்சி, பொருளாதார ஏற்றத்தாழ்வு, வளங்களை பயன்படுத்திக் கொள்வதில் முறையற்ற தன்மை ஆகிய மனப்பான்மை மாநிலங்களுக்கிடையே உருவாகியது.

விடுதலைக்குப் பிறகு குறிப்பிட்ட அரசியல் காரணங்களுக்காக சமூக கலாச்சார, அரசியல், பொருளாதார மற்றும் மொழி அடிப்படையில் கட்டமைப்பு செயல்பாடுகள் செயல்படுத்தப்பட்டன. மறு கட்டமைப்பு ஏற்பாடுகள் மொழி அடிப்படையில் மட்டும் செய்யப்படவில்லை. ஏனென்றால் இது தேச ஒருமைப்பாடு வழியில் நின்றது. சில மொழிகள் மற்ற மொழிகளைக் காட்டிலும் சிறப்பு நிலையில் இருந்தது. இது மற்ற மொழிகள் பேசும் மக்களிடையே ஆதிக்கம் செய்யும் நிலையும் இருந்தது. ஆகவே மாநில கட்டமைப்பு நடவடிக்கைகளுக்கு மொழியை அடிப்படையாகக் கொள்வது குறித்த விவாதங்கள் நடைபெற்றன.

தேசிய அடையாள மற்றும் மொழி, கலாச்சார அடையாளங்களுக்கிடையே உள்ள நிலை பற்றி இவ்விவாதங்கள் நடைபெற்றன. அஸ்ஸாமின் போட்டோ -வும் கர்நாடக கூர்க்கும் இதற்கு உதாரணமாக கூறலாம். ஒரே மொழி பேசும் இரண்டு மாநிலம் அருகருகே இருந்தாலும் அம்மாநிலங்களில் இருந்த சாதி, மத மற்றும் இன வேறுபாடுகள் தேசிய அடையாளம் பெறுவதற்கு பிரச்சினைகளாக இருந்தன. எனினும் 1950ஆம் ஆண்டு 12 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டன. பிறகு 22 மொழிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இது மொழிகலாச்சார சமுதாயங்களின் இடையே அரசியல் அடையாள கோரிக்கைகள் அதிகரித்து வருவதைக் காட்டுகிறது.


எல்லைகள்

விடுதலைக்கு முன்பு இந்த நாடு மாகாணங்கள், சுதேச அரசுகள், ராஜதானிகள் எனப் பிரிக்கப்பட்டிருந்தன. மாநிலங்கள் அமைப்பு அறிவிக்கப்பட்டவுடன் அதன் எல்லைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. குறிப்பாக கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா, மற்றும் குஜராத், அரியானா மற்றும் பஞ்சாப், ஒரிசா மற்றும் மேற்கு வங்கம், ஆந்திரா பிரதேசம் மற்றும் சென்னை மாகாணம் ஆகியவற்றிற்கிடையே எல்லைகள் குறித்து பேச்சு வார்த்தைகள் நடந்தன.

பல்வேறு வேறுபாடுகளைத் தாண்டி மொழியால் ஆதிக்கம் செலுத்தக் கூடிய சமுதாயங்கள் தங்களுக்கான தனித்த பிராந்திய மற்றும் கலாச்சார வடிவங்களை வலியுறுத்தினர். இந்த கலாச்சார மற்றும் மொழி ரீதியிலான அடையாளங்களை அந்த மாநில மக்கள் ஆதரித்தனர். இங்கே கலாச்சார, மொழி ரீதியிலான சிறுபான்மையினர் பேசும் மொழிகளும் அனுமதிக்கப்பட வேண்டியிருந்தது.

எதிர்பார்க்கப்பட்டதைப் போல மொழி அடிப்படையில் அமைந்த பெரும்பான்மை சமூகம், மொழி சிறுபான்மை சமூகத்தின் மீது நிர்வாகம், கல்வி, வேலைவாய்ப்பு, நீதி மற்றும் பொருளாதார துறைகளில் ஆதிக்கம் செலுத்தியதன் மூலம் பெரும்பான்மை சமுதாய மக்கள் ஆதிக்கம் செலுத்தினர். காலாச்சார ஆதிக்கத்தன்மை, மேம்பாடு குறித்த பிரச்சனைகள், மற்றும் வட்டார சமத்துவமின்மை ஆகியன தீர்க்கப்பட வேண்டியிருந்தன. மாநிலங்கள் அனைத்து பகுதி மக்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு நிரந்தரமான யுக்தியை கையாள வேண்டியிருந்தது. அரசாங்கம் இதனை நீக்க சீரான ஒற்றைத்தன்மை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டதில், மேல்தட்டு மக்கள் சாதாரண பொதுமக்கள் என இரு பிரிவுகள் தோன்றிவிட்டன.


மண்டலக் கட்சிகளின் தோற்றம்

நாடு முழுவதும் மண்டலக் கட்சிகள் தோன்ற ஆரம்பித்தன. ஏனென்றால் தங்களின் சொந்த மண்ணின் மீதான விசுவாசமும் மண்டல அடிப்படையிலான அடையாள இயக்கங்களும் இத்தகைய மண்டலக் கட்சிகள் உருவாகுவதற்கு காரணங்களாக அமைந்தன. பெரும்பாலான கட்சிகள் உள்ளூர் அளவில் பலம் பெற்றன. மண்டலக் கட்சிகளின் தொடக்கம் மத்திய அரசாங்கத்திற்கு பெரும் சவாலாக அமைந்தது. ஏனென்றால் பிரச்சனைகளின் ஆணிவேர் நாடு முழுவதும் ஒரே விதமாக இல்லை .


மாநிலங்கள் உருவாக்கம்

அண்மைக்கால பொருத்தப்பாட்டில் ஒரு மாநிலத்தின் குறிப்பிட்ட நிலப்பகுதியைப் பிரிப்பதன் மூலம் நாடாளுமன்றம் புதிய மாநிலங்களை உருவாக்க முடியும். பெயர் மாற்றம் செய்வது, எல்லைகளை மாற்றியமைப்பது உள்ளிட்ட அதிகாரங்கள் நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இருந்தாலும், இவை நாடாளுமன்றத்தில் முன்வரைவு மூலம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத்தலைவரின் ஒப்புதலை பெற வேண்டும். இது தொடர்புடைய மாநில அரசாங்கத்தின் கருத்துக்களும், அந்த மாநில அரசாங்கத்தின் சட்டமன்றத் தீர்மானமும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. மாநில அரசாங்கம் இது தொடர்பாக முன்வரைவு நிறைவேற்றி குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பும் போது, குடியரசுத்தலைவர் இது தொடர்பான தனி முன்வரைவு ஒன்றினை நாடாளுமன்றத்தில் இயற்ற பரிந்துரை செய்வார். பிறகு நாடாளுமன்றத்தில் முன்வரைவு இயற்றி தனக்கு அனுப்பப்படும் போது குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளிப்பார். பின்பு தான் புதிய மாநிலங்கள் உருவாகும்.


செயல்பாடு

அரசியல் கட்சி உருவாக்குவது

இந்திய அரசமைப்புச் சட்ட விதிகளின்படி ஓர் அரசியல் கட்சியினை தொடங்குவது குறித்து மாணாக்கர் குழு அமைத்து கேள்விகள் எழுப்பவும். 

ஓர் அரசியல் கட்சி உருவாக்குவது, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வது, தேர்தல்களில் போட்டியிடுவது ஆகியவற்றிற்கான செயல்முறைகள் குறித்து கேள்விகள் கேட்கவும்.


Tags : Challenges of Nation Building | Political Science தேச கட்டமைப்பின் சவால்கள் | அரசியல் அறிவியல்.
12th Political Science : Chapter 7 : Challenges of Nation Building : India after Reorganisation Challenges of Nation Building | Political Science in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 7 : தேச கட்டமைப்பின் சவால்கள் : மாநிலங்கள் மறுசீரமைப்புக்கு பிறகு இந்தியா - தேச கட்டமைப்பின் சவால்கள் | அரசியல் அறிவியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 7 : தேச கட்டமைப்பின் சவால்கள்