மக்கள்தொகை புவியியல் - கலைச்சொற்கள் | 12th Geography : Chapter 1 : Population Geography
கலைச்சொற்கள்
1. ஆயுட்காலம்
எதிர்பார்ப்பு: ஒருவர் சராசரியாக வாழப்போகும் ஆண்டுகள்.
2. உலக
வெப்பமயமாதல்: வளிமண்டத்தின் அசாதாரண வெப்பநிலை.
3. சாகுபடி
நிலம்: பயிரிடக்கூடிய நிலம்.
4. சமூக
நெறிமுறைகள்: அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட நடத்தை மாதிரி.
5. அதீத
மக்கள் தொகை: சுற்றுச்சூழலின் தாங்கும் திறனைக் காட்டிலும் அதிகமான
மக்கள் தொகை.
6. வோல்டோமீட்டர்: அதிகாரப்பூர்வ
அமைப்பிடமிருந்து பெரும் புள்ளிவிவரங்கள் மற்றும் கணிப்பு காட்டும் மதிப்பீடு செய்யப்பட
எண்ணிக்கை.
7. மக்கள்
தொகைக் கணக்கெடுப்பு: மக்கள்தொகைப் பற்றிய அதிகாரப்பூர்வ எண்ணிக்கை மற்றும்
கணக்கெடுப்பு.
8. பாலினச்
சமநிலை: ஆண்களும் பெண்களும் சமமாக நடத்தப்பட வேண்டிய நிலை.
9. பேணத்தகுந்த
மேம்பாடு: வருங்கால தலைமுறையைப் – பாதிக்காதவகையில் வளங்களைப் பயன்படுத்துதல்.
10. மக்கள்
தொகை வெடிப்பு:திடீரென மிகப் பெரிய அளவில் மக்கள் தொகை அதிகரித்தல்.
மக்கள்தொகை புவியியல்
இந்த செயல்பாட்டை செய்வதன்
மூலம் மாணவர்கள் மக்கள் தொகை பெருக்கம் மற்றும் அதன் விகிதாசாரம் பற்றி நன்கு அறிந்து
கொள்ள முடியும். இதில் அநேக விருப்பப் பட்டியல்கள் உள்ளது. எனவே மாணவர்கள் அனேக காரியங்களைத்
தேடித் தெரிந்து கொள்ள முடியும். எ.டு. அவர்கள் பிறந்த வருட மக்கள் தொகை போன்றவை
படிகள்
படி 1: URL அல்லது QR குறியீட்டினைப்
பயன்படுத்தி இச்செயல்பாட்டிற்கான இணையப்பக்கத்திற்கு செல்க. அங்கு ஒரு பக்கம் மூன்று
விருப்பத் தேர்வுகளுடன் திறக்கும். அவற்றில் உங்களுக்கு பிரியமான விளையாட்டைத் தேர்வு
செய்க.
படி 2: அதை நாம் தொடும்
போது ஒரு பக்கம் ஐந்து விருப்ப பட்டியலை காண்பிக்கும். அதில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு
செய்க. "Population and Me" என்பதற்கான விளக்கம் கொடுக்கப் பட்டு இருக்கும்.
படி 3: இது அடுத்த பக்கத்திற்குச்
செல்லும். அதில் "Let's Go" எனும் வார்த்தையை தெரிவு செய்க.
படி 4: இதை நாம் தெரிவு
செய்யும் போது உலக வரைபடம் மூன்று விருப்பத் தெரிவுகளுடன் தோன்றும்.
உரலி
https://www.ined.fr/en/everything about
population/population-games/tomorrowpopulation/
*படங்கள் அடையாளத்திற்கு
மட்டுமே.