Home | 12 ஆம் வகுப்பு | 12வது புவியியல் | மக்கள்தொகை புவியியல்
   Posted On :  21.07.2022 06:52 pm

12 வது புவியியல் : அலகு 1 : மக்கள்தொகை புவியியல்

மக்கள்தொகை புவியியல்

மனித இனம் சுற்றுபுறச்சூழலின் ஒரு முக்கியப் பகுதியாக விளங்குகிறது. இதன் பரிணாமம் இரண்டு மில்லியன் வருடங்களுக்கு முன்பு தான் தோன்றியதால் அனேகமாக புவியை ஆக்கிரமித்த சமீபத்திய ஒன்றாகும்.

அலகு 1

மக்கள்தொகை புவியியல்



அலகு கண்ணோட்டம்

1. அறிமுகம்

2. உலக மக்கள்தொகைப் பரவல்

3. மக்கள்தொகை அடர்த்தி

4. உலக மக்கள்தொகை வளர்ச்சி

5. மக்கள்தொகைக் கூறுகள்

6. இடம் பெயர்தல்

7. அதீத மக்கள் தொகை

8. மக்கள்தொகை அதிகரிப்பைக் கட்டுப்படுத்தும் முறைகள்

 

கற்றல் நோக்கங்கள்

• மக்கள் தொகையின் பண்புகளை புரிந்து கொள்ளுதல்.

• உலக மக்கள் தொகைப் பரவலைப் புரிந்து கொள்ளுதல்.

• மக்கள் தொகை வளர்ச்சியின் காரணி மற்றும் விளைவுகளைத் தீர்மானித்தல்.

• அதீத மக்கள் தொகையினால் ஏற்படக் கூடிய சிக்கல்களை மதிப்பீடு செய்தல்.

• குடிப்பெயர்தலுக்கான உந்து மற்றும் இழுவைக் காரணிகளை தெளிவுபடுத்துதல்.

 

அறிமுகம்

உலகில் ஒவ்வொரு நாளும் 3,60,000 பேர் பிறக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? உலகில் ஒரு நொடிக்கு நான்கு குழந்தைகள் பிறக்கின்றன. 'மனித இனம் தொடர்ந்து வாழவேண்டுமென்றால் புதிய கோளைக் கண்டுபிடித்து 100 வருடத்திற்குள் குடியேறவேண்டும்' என பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் கூறுகிறார் என்பதை பி பி சி உறுதி செய்தது.

காலநிலை மாற்றம், கடந்தகாலத்தில் குறுங்கோள்களின் தாக்குதல், தொற்று நோய்கள் மற்றும் மக்கள்தொகை அதிகரிப்பு போன்றவற்றால் நமது கோள் நிலையற்றதாக மாறிவருகிறது என தொடர்ந்து செய்தி வெளிவருகிறது.

மனித இனம் சுற்றுபுறச்சூழலின் ஒரு முக்கியப் பகுதியாக விளங்குகிறது. இதன் பரிணாமம் இரண்டு மில்லியன் வருடங்களுக்கு முன்பு தான் தோன்றியதால் அனேகமாக புவியை ஆக்கிரமித்த சமீபத்திய ஒன்றாகும். மக்கள் தொகைப் பரவல் மற்றும் வளர்ச்சி இயற்கைச் சூழலால் தூண்டப்பட்டாலும் மனித இனம் இயற்கைச் சூழலை மாற்றியமைக்கும் வல்லமைப் பெற்றதாகும். மக்களியல் (Demography) என்பது மக்கள் தொகைப்பற்றி விளக்கும் ஒரு புள்ளிவிவரப் படிப்பாகும். மக்கள்தொகையின் அளவு, அமைப்பு மற்றும் பரவல் பற்றியும் பிறப்பு, இடம் பெயர்வு, முதுமை மற்றும் இறப்பு சார்ந்த காலம் மற்றும் அமைவிட மாற்றத்தைப் பற்றியும் இது விளக்குகிறது. மக்கள் தொகை வெடிப்பு என்பது இன்று நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாகும்.

12th Geography : Chapter 1 : Population Geography : Population Geography in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது புவியியல் : அலகு 1 : மக்கள்தொகை புவியியல் : மக்கள்தொகை புவியியல் - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது புவியியல் : அலகு 1 : மக்கள்தொகை புவியியல்