அலகு 2
மனிதக் குடியிருப்புகள்
அலகு கண்ணோட்டம்
1.
அறிமுகம்
2.
குடியிருப்புகளின் தோற்றம் மற்றும் வளர்ச்சி
3.
தலம் மற்றும் சூழலமைவு
4.
கிராமப்புறக் குடியிருப்பின் வடிவங்கள்
5.
கிராமப்புறக் குடியிருப்பின் வகைகள்
6.
நகரக் குடியிருப்புகள்
7.
மைய மண்டல கோட்பாடு
8.
நகரமயமாதல் - உலகம் மற்றும் இந்தியா
2.9
நகரமயமாதலால் எற்படும் பிரச்சனைகள்
• பல்வேறு கிராம குடியிருப்புகளின் வகைகளை அடையாளம்
காணுதல்.
• தலம் மற்றும் சூழல் அமைப்பினிடையே உள்ள வேறுபாட்டை
அறிதல்
• இந்தியாவில் காணப்படும் பல்வேறு குடியிருப்புகளைப்
பற்றி புரிந்து கொள்ளுதல்
• நிலத்தோற்றம், காலநிலை மற்றும் கட்டுமானப் பொருட்கள்
அடிப்படையில் அமைந்துள்ள குடியிருப்பின் வகைகளுக்கிடையிலுள்ள தொடர்பினை நிலைநாட்டுதல்
• கிராமப்புறக் மற்றும் நகர்ப்புறக் குடியிருப்புகளின்
பரவல் முறைகளை ஆராய்தல்
• நகர்ப்புற நிலப்பயன்பாடு மாதிரிகளை புரிந்துகொள்ளுதல்
முகப்பிலுள்ள
படத்தில் காணப்படும் பாலைவனச்சோலையைப் பாருங்கள். இது பெரு நாட்டில் இகா (Ica) நகரிலுள்ள
ஹுவாகாசீனா (Huacachina) பாலைவனச் சோலை. இது லிமா (Lima) நகருக்கு 300 கிலோ மீட்டர்
தெற்கில் உள்ளது. இது இங்குள்ள ஏரியைச் சுற்றி வாழும் 96 மக்களுக்கான குடியிருப்பாக
உள்ளது.
இப்போது நாம் பின்வரும் வினாக்களை
விவாதிப்போம்.
1. ஏன்
பெரும்பாலான பாலைவனச் சோலைகளில் 100 அல்லது அதற்குக் குறைவான மக்களே வசிக்கின்றனர்?
2. பாலைவனச்
சோலைகளில் வாழ்கின்ற மக்கள் இரவில் எவ்வாறுதிசையைக்கண்டறிகிறார்கள்?
3. பாலைவனச்
சோலையில் வாழும் மக்கள் அனுபவிக்கும் வசதிகள் மற்றும் அசௌகரியங்கள் யாவை?
4. குடியிருப்புக்கான
சில சாதகமான காரணிகளை பட்டியலிடவும்.
எளிமையாகக் கூற வேண்டுமானால் குடியிருப்பு என்பது தனித்த வீடு
முதல் பெரிய மாநகரம் வரை ஏதேனும் ஒரு வடிவில் இருக்கும் மனித வாழிடமாகும்.
ஏறக்குறைய நிரந்தர வசிப்பிடத்தை குடியிருப்பு என்கிறோம். இது
நாம் வாழக்கூடிய அல்லது பயன்படுத்தக்கூடிய கட்டிடங்கள் மற்றும் பயணம் செய்யும் தெருக்கள்
ஆகியவற்றை உள்ளடக்கியது. இது வேட்டைக்காரர்கள் மற்றும் மேய்ச்சல்காரர்களின் தற்காலிக
முகாம்களையும் உள்ளடக்கியது. மனிதக் குடியிருப்பு என்பது சில வசிப்பிடங்களை கொண்ட குக்கிராமங்களையும்
கட்டிடங்களின் தொகுப்பைக் கொண்ட மாநகரங்களையும் உள்ளடக்கியது.