Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி

வரலாறு - ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி | 11th History : Chapter 8 : Harsha and Rise of Regional Kingdoms

   Posted On :  15.03.2022 10:30 pm

11 வது வகுப்பு வரலாறு : அலகு 8 : ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி

ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி

குப்தர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் வட இந்தியா பல சிற்றரசுகளாகச் சிதறுண்டது.

ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி

 

கற்றல் நோக்கங்கள்

I ஹர்ஷர்

ஹர்ஷரின் முன்னோர்கள் மற்றும் அவரது சமகாலத்தவரைப் பற்றி அறிதல்

ஹர்ஷரின் படையெடுப்புகளைப் பற்றி அறிதல்

ஹர்ஷரின் நிர்வாக முறையைப் புரிந்துகொள்ளுதல்

ஹர்ஷரின் மதக் கொள்கையைப் பற்றி அறிதல

சீனப் பயணி யுவான் சுவாங்கின் குறிப்புகள் மூலமாக இந்திய மக்களின் சமூக பண்பாட்டு வாழ்க்கையை அறிதல்

II பாலர்கள்

கிழக்கு இந்தியாவில் பிரதேச சக்தியாக வலுவான ஆட்சியதிகாரம் கொண்டு விளங்கிய பாலர்களின் வரலாற்றை அறிதல்

பாலர்களில் முக்கியமான ஆட்சியாளர்களாக விளங்கிய தர்மபாலர், தேவபாலர், முதலாம் மகிபாலர் ஆகியோர் நிர்வாகத்திற்கு ஆற்றிய பங்கு குறித்து அறிதல்

கங்கைச் சமவெளியில் மகாயான புத்தமதத்தைப் பரப்பியதில் பாலர்களின் குறிப்பிட்ட பங்கினைப் புரிந்துகொள்வது

இலக்கியம், கலை, கட்டடக் கலை ஆகியவற்றுக்குப் பாலர்கள் ஆற்றிய பங்கினை அறிதல்

III ராஷ்டிரகூடர்கள்

ராஷ்டிரகூடர்களின் சிறப்பை அறிதல்

முதலாம் கிருஷ்ணர் முதல் மூன்றாம் கிருஷ்ணர் வரை திறமையாக அரசாண்ட ராஷ்டிரகூட அரசர்கள் வடதிசை நோக்கிய பல்லவ அரசின் விரிவாக்கத்தைத் தடுத்தனர் என்பதை அறிதல்

ராஷ்டிரகூட அரசர்களின் ஆதரவில் கன்னட இலக்கியத்தின் வளர்ச்சி குறித்து அறிதல்

 

I ஹர்ஷர்

அறிமுகம்

குப்தர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் வட இந்தியா பல சிற்றரசுகளாகச் சிதறுண்டது. ஹூணர்கள் ஆட்சி செய்த பகுதிகளைத் (தற்கால பஞ்சாப், ராஜஸ்தான், மாளவம்) தவிர பல சிற்றரசுகள் தோன்றியதின் வாயிலாக பிராந்திய வட்டார அடையாளங்கள் வெளிப்பட்டன. மைத்ரேயர்கள் சௌராஷ்டிரத்தில் (குஜராத்) வல்லபியை தலைநகராகக் கொண்டு பலம் மிக்க அரசை உருவாக்கியிருந்தனர். ஆக்ராவும் அயோத்தியும் மௌகரியர்களால் சுதந்திரமான இறையாண்மை மிக்க அரசாக உருவாக்கப்பட்டது. மேற்கு தக்காணத்தில் வாகாடகர்கள் தங்களது ஆட்சியதிகாரத்தை மீட்டெடுத்திருந்தனர். இந்த அரசுகளுக்கிடையில் அரசியல் போட்டிகளும் மோதல்களும் இருந்து வந்த போதிலும் தில்லிக்கு வடக்கே சட்லஜ், யமுனை நதிகளுக்கிடையில் இருந்த தானேஸ்வரம் புஷ்யபூதிகளால் சுதந்திரமான ஆட்சியதிகாரம் கொண்ட அரசாக உருவாக்கப்பட்டது. ஹர்ஷரின் ஆட்சியில் அது முக்கியத்துவத்தை அடைந்தது. குப்தர்களின் அரசிற்கு இணையாக இருந்த பெரிய அரசை ஹர்ஷர் பொ.. 606 முதல் 647 வரை ஆட்சி செய்தார்.

சான்றுகள்

இலக்கியச் சான்றுகள்

பாணரின் ஹர்ஷ சரிதம்

யுவான் சுவாங்கின் சியூகி

செப்புப் பட்டயம், கல்வெட்டுச் சான்றுகள்

மதுபன் செப்புப் பட்டயக் குறிப்புகள்

சோன்பட்டு செப்பு முத்திரைக் குறிப்புகள்

பன்ஸ்கெரா செப்புப் பட்டயக் குறிப்புகள்

நாளந்தா களிமண் முத்திரைக் குறிப்புகள்

ஐஹோல் கல்வெட்டு

உங்களுக்குத் தெரியுமா?

பாணரின் ஹர்ஷ சரிதம் ஒரு அரசரின் முதல் வாழ்க்கை வரலாற்று நூலாகும். அது இந்தியாவில் புதிய இலக்கிய வகையைத் தொடங்கி வைத்தது.

Tags : History வரலாறு.
11th History : Chapter 8 : Harsha and Rise of Regional Kingdoms : Harsha and Rise of Regional Kingdoms History in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 8 : ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி : ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி - வரலாறு : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 8 : ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி