Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | பாடச் சுருக்கம் - ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி

வரலாறு - பாடச் சுருக்கம் - ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி | 11th History : Chapter 8 : Harsha and Rise of Regional Kingdoms

11 வது வகுப்பு வரலாறு : அலகு 8 : ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி

பாடச் சுருக்கம் - ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி

குப்தர், வர்த்தனர் ஆகியோரது ஆட்சிக்கு இடைப்பட்ட காலத்தில் சுயேச்சையான அரசுகள் தோன்றின. வட இந்தியா வலுவான மையப்படுத்தப்பட்ட அதிகாரமின்றிக் காணப்பட்டது.

பாடச் சுருக்கம்

I ஹர்ஷர்

• குப்தர், வர்த்தனர் ஆகியோரது ஆட்சிக்கு இடைப்பட்ட காலத்தில் சுயேச்சையான அரசுகள் தோன்றின. வட இந்தியா வலுவான மையப்படுத்தப்பட்ட அதிகாரமின்றிக் காணப்பட்டது.

• ஹூணர், வல்லபியின் மைத்ரகர், கன்னோசியின் மௌகாரியர், மாண்டசோரின் வகடர், தானேஸ்வரத்தின் புஷ்யபூதி, மகதத்தின் பிற்கால குப்தர் ஆகியோர் பிரதேச முடியரசர்களாகத் திகழ்ந்தனர்.

• ஹர்ஷர், சீனாவுடன் நேசமான உறவைக் கொண்டிருந்தார். சீனப் பயணியான யுவான் சுவாங் அக்காலத்தில் நிலவிய மக்களின் சமூக, மத சூழ்நிலைகளைப் பற்றிய குறிப்புகளைப் பதிவு செய்திருந்தார்.

• ஹர்ஷர் பௌத்த மதத்திற்கு ஆதரவளித்தார். கன்னோசியிலும் பிரயாகையிலும் பௌத்த மதக் கூட்டங்களைக் கூட்டினார்.

II பாலர்கள்

• பாலர் வம்சத்தைத் தோற்றுவித்த கோபாலர் குறுநில மன்னர்களால் அரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

• தர்மபாலர், தேவபாலர், முதலாம் மஹிபாலர் ஆகியோர் திறமையுடன் ஆட்சி புரிந்து பல பகுதிகளைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

• விக்ரமசீலா, நாளந்தா பல்கலைக்கழகங்களுக்குப் பாலர்கள் அளித்த ஆதரவு பெளத்த, சமண, சமஸ்கிருத இலக்கியங்களின் வளர்ச்சிக்கு வழி வகுத்தது.

III ராஷ்டிரகூடர்கள்

• முதலாம் கிருஷ்ணர் முதல் மூன்றாம் கிருஷ்ணர் வரை வெற்றிகரமான ஆட்சியாளர்களின் காலத்தில் ராஷ்டிரகூடர்களின் அரசு வலிமை மிக்க அரசாக உருவானது.

• இலக்கியம் ராஷ்டிரகூடர்களின் ஆதரவைப் பெற்றிருந்தது. சமஸ்கிருத, கன்னட அறிஞர்கள் தழைத்தோங்கினர்.

• எல்லோராவிலும் எலிஃபண்டாவிலும் காணப்படும் கலை நுட்பம் இவர்களது பங்களிப்பே ஆகும்.

Tags : History வரலாறு.
11th History : Chapter 8 : Harsha and Rise of Regional Kingdoms : Summary - Harsha and Rise of Regional Kingdoms History in Tamil : 11th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 8 : ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி : பாடச் சுருக்கம் - ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி - வரலாறு : 11 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 8 : ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி