Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | பாடச் சுருக்கம் - குப்தர்

வரலாறு - பாடச் சுருக்கம் - குப்தர் | 11th History : Chapter 7 : The Guptas

11 வது வகுப்பு வரலாறு : அலகு 7 : குப்தர்

பாடச் சுருக்கம் - குப்தர்

மௌரியப் பேரரசிற்குப் பின்னர், குப்தப் பேரரசு பெரும் ஆற்றல் மிக்கதாக உருவானது.

பாடச் சுருக்கம்

• மௌரியப் பேரரசிற்குப் பின்னர், குப்தப் பேரரசு பெரும் ஆற்றல் மிக்கதாக உருவானது.

• ஸ்ரீகுப்தர், குப்தப் பேரரசைத் தோற்றுவித்தார்.

• சமுத்திரகுப்தர் (335-375) பல பகுதிகளைக் கைப்பற்றி, பேரரசை ஒருங்கிணைத்தார்.

• இரண்டாம் சந்திரகுப்தர் தனது படையெடுப்புகளின் மூலமும் திருமண உறவுகள் மூலமும், பேரரசை மேலும் விரிவாக்கினார்.

• குமாரகுப்தர் நாளந்தா பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தார்.

• ஸ்கந்தகுப்தர் ஹுணர்களை விரட்டியடித்தார். ஆனால் இப்போரின் காரணத்தால் அவரது அரசுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டது.

• குப்த அரசர்கள் தாம் தெய்வாம்சம் படைத்தவர்கள் என்று கூறிக் கொண்டனர். அவர்களுக்கு அமைச்சர்கள் குழுவும், அதிகாரிகள் குழுவும் உதவி செய்தன.

• குப்த அரசர்கள் கலை, இலக்கியம், அறிவியல் ஆகியவற்றை ஆதரித்தனர். அவர்களது அவையைக் காளிதாசர், அரிசேனர், அமரசிம்மர், தன்வந்திரி, வராகமிகிரர் போன்றோர் அலங்கரித்தனர்.

• ஹுணர்களின் படையெடுப்பால் கருவூலம் காலியானது, பிற்கால குப்த அரசர்கள் வலிமை குன்றியது ஆகியன குப்தப் பேரரசின் வீழ்ச்சிக்குக் காரணங்களாயின.

Tags : History வரலாறு.
11th History : Chapter 7 : The Guptas : Summary on Guptas History in Tamil : 11th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 7 : குப்தர் : பாடச் சுருக்கம் - குப்தர் - வரலாறு : 11 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 7 : குப்தர்