இந்தியாவில் பக்தி இயக்கம் - பக்தி இயக்கத்தின் தாக்கங்கள் | 11th History : Chapter 13 : Cultural Syncretism: Bhakti Movement in India
பக்தி இயக்கத்தின் தாக்கங்கள்
முக்தி என்பது வர்ணாஸ்ரமக் கொள்கையின்படி முதல் மூன்று படி நிலைகளைச் சேர்ந்த மக்களுக்கு மட்டுமே உரியது என்ற நம்பிக்கையை மாற்றி அது அனைவருக்கும் உரியது என்ற கருத்தை முன்வைத்தது. பக்தி இயக்கம் பெண்களுக்கும் சமூகத்தின் அடித்தட்டிலிருந்த மக்களுக்கும் சேர்த்து ஆன்ம விடுதலைக்கான வழியைக் காட்டியது. பிராந்திய மொழிகளில் எழுதப்பட்ட பக்தி இலக்கியங்கள் எண்ணிக்கையில் பெருகின. பக்தி இயக்கத்தைச் சேர்ந்த துறவிகள் தத்துவ ஞானத் துறையில் சிறந்து விளங்கி துவைதம், அத்வைதம் ஆகிய தத்துவக் கோட்பாடுகளை வழங்கினர். இக்காலத்தில் பிராந்திய அளவில் நடைமுறையிலிருந்த பண்பாட்டுப் பழக்கங்களான, அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுவது பண்டிகைகள், விழாக்கள் நடத்துவது, புனிதப் பயணங்கள் செல்வது, சைவ, வைணவச் சடங்குகளை செய்வது ஆகியன இன்றுவரை நடைமுறையில் உள்ளன.