இந்தியாவில் பக்தி இயக்கம் - பக்தி இயக்கத்தின் சிறப்பியல்புகள் | 11th History : Chapter 13 : Cultural Syncretism: Bhakti Movement in India
பக்தி இயக்கத்தின் சிறப்பியல்புகள்
1. பக்தி இயக்கச் சீர்த்திருத்தவாதிகள் ஒரு கடவுள் கொள்கையைப் போதித்தனர்.
2. பிறப்பு இறப்பு எனும் சுழற்சியிலிருந்து விடுபட முடியும் என நம்பினர். இறைவனிடம் ஆழமான பற்றும் நம்பிக்கையும் கொள்வதன் மூலம் முக்தி அடைய முடியும் எனும் கருத்தை முன்வைத்தனர்.
3. இறைவனுடைய அருளைப் பெற அர்ப்பணிப்பை வற்புறுத்தினர்.
4. குருவானவர் வழிகாட்டியாகவும் ஆசிரியராகவும் இருத்தல் வேண்டும்.
5. உலக சகோதரத்துவம் எனும் கொள்கையைப் போதித்தனர்.
6. உருவ வழிபாட்டை விமர்சனம் செய்தனர்.
7. ஆழ்ந்த பக்தியுடன் பாடல்கள் பாட வேண்டுமென வலியுறுத்தினர்.
8. மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களும் கடவுளின் குழந்தைகளே எனக் கூறினர். பிறப்பின் அடிப்படையில் மக்களைப் பிரித்துவைக்கும் சாதிமுறையைக் கண்டனம் செய்தனர்.
9. சடங்குகள், சம்பிரதாயங்கள், புனிதயாத்திரைகள், நோன்புகள் ஆகியவற்றைக் கண்டனம் செய்தனர்.
10. எந்த மொழியையும் புனிதமான மொழி என அவர்கள் கருதவில்லை. மக்களின் மொழிகளில் பாடல்கள் இயற்றினர்.