வரலாறு - பாடச் சுருக்கம் - இந்தியாவில் பக்தி இயக்கம் | 11th History : Chapter 13 : Cultural Syncretism: Bhakti Movement in India
பாடச் சுருக்கம்
•
வைதீக வேத குருமார்களின், பூசாரிகளின் அதிகாரத்தை பௌத்தமும் சமணமும் எவ்வாறு எதிர்த்தன என்பதும், எவ்வாறு மதம் சாதி, பாலினப் பாகுபாடுகளை மீறி அனை வருக்குமானதாக மாற்றப்பட்ட தென்பதும் விவரிக்கப்பட்டுள்ளது.
• அரச ஆதரவோடு சமணர்கள் ஒடுக்கப்பட்டது விளக்கப்பட்டுள்ளது.
• பௌத்த சமண மதங்களோடு மோதுகிறபோதே வேதமதத்துக்குள் ஏற்பட்ட மாற்றங்களும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
• பக்தி இயக்கம் வட இந்தியாவில் பரவியதும் அதன் முக்கியக் கூறுகளும் பகுத்தாய்வு செய்யப்பட்டுள்ளன.
• சூபியிஸம் இஸ்லாமின் மீது ஏற்படுத்திய தாக்கம், ஒரு கடவுள் தத்துவத்தைக் கொண்ட மதங்கள் - குறிப்பாக சீக்கிய மதம் உருவானதில் அது செலுத்திய செல்வாக்கு - ஆகியன பகுத்தாய்வு செய்யப்பட்டுள்ளன.
• வடஇந்தியாவில் பக்தி இயக்கத்தை முன்னெடுத்தவர்கள், அவர்கள் மேற்கொண்ட பணிகளின் தாக்கம் ஆகியவை சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.