வடிவியல் | முதல் பருவம் அலகு 5 | 7ஆம் வகுப்பு கணக்கு - பாடச்சுருக்கம் | 7th Maths : Term 1 Unit 5 : Geometry
பாடச்சுருக்கம்
● பொதுவான ஒரு முனை, பொதுவான கதிர் கொண்ட வெவ்வேறு உட்பகுதிகளைக் கொண்ட இரண்டு கோணங்கள் அடுத்துள்ள கோணங்கள் எனப்படும்.
● மிகை நிரப்பு கோணங்களாக இருக்கும் அடுத்துள்ள கோணங்கள் நேரிய கோண இணைகள் எனப்படும்.
● ஒரு கோட்டின் மீது ஏதேனும் ஒரு புள்ளியில் அமையும் கோணங்களின் கூடுதல் 180° ஆகும்.
● ஒரு புள்ளியில் அமையும் அனைத்துக் கோணங்களின் கூடுதல் 360° ஆகும்.
● இரு கோடுகள் ஒன்றை ஒன்று வெட்டிக்கொள்ளும்போது அமையும் அடுத்தமையாக் கோணங்கள் குத்தெதிர்க் கோணங்கள் எனப்படும்.
● இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட கோடுகளை ஒரு கோடு வெவ்வேறு புள்ளிகளில் வெட்டினால் அக்கோடு குறுக்கு வெட்டி எனப்படும்.
● இரு இணைகோடுகளைக் குறுக்குவெட்டி வெட்டும்போது
(i) ஒத்த கோணச் சோடிகள் சமம்.
(ii) ஒன்று விட்ட உட்கோணச் சோடிகள் சமம்.
(iii) ஒன்று விட்ட வெளிக்கோணச் சோடிகள் சமம்.
(iv) குறுக்கு வெட்டிக்கு ஒரே பக்கம் அமைந்த உட்கோணங்கள் மிகை நிரப்பு கோணங்கள்.
(v) குறுக்குவெட்டிக்கு ஒரே பக்கம் அமைந்த வெளிக்கோணங்கள் மிகை நிரப்பு கோணங்கள்.
இணையச் செயல்பாடு
செயல்பாட்டின் இறுதியில் கிடைக்கப் பெறுவது
படி -1:
கீழ்க்காணும் உரலி/விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி ஜீயோ ஜீப்ரா இணையப் பக்கத்தில் "ஏழாம் வகுப்பு” - வடிவியல் என்னும் பணித்தாளிற்குச் செல்லவும். இரண்டு செயல்பாடுகள் உள்ளன. அவை 1. நேரிய இணை - அடுத்துள்ள கோணங்கள் 2. இணைகோடுகள் மற்றும் குறுக்கு வெட்டிகள்.
படி - 2:
இரண்டாவது செயல்பாடான "இணைகோடுகள் மற்றும் குறுக்கு வெட்டி"யில் A மற்றும் B புள்ளிகளை நகர்த்துவதன் மூலம் குறுக்கு வெட்டியால் ஏற்படும் பல்வேறு கோணங்களை உற்று நோக்குக.
செயல்பாட்டிற்கான உரலி
வடிவியல் : https://ggbm.at/bbsgesah
அல்லது விரைவுக் குறியீட்டை ஸ்கேன் செய்க