Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணினி அறிவியல் | உள்ளீடு மற்றும் வெளியீடு செயற்கூறுகள்

பைத்தான் - உள்ளீடு மற்றும் வெளியீடு செயற்கூறுகள் | 12th Computer Science : Chapter 5 : Core Python : Python Variables and Operators

   Posted On :  22.08.2022 07:33 pm

12 வது கணினி அறிவியல் : அலகு 5 : Core பைத்தான் : பைத்தான் அறிமுகம்-மாறிகள் மற்றும் செயற்குறிகள்

உள்ளீடு மற்றும் வெளியீடு செயற்கூறுகள்

ஒரு நிரல் பயனர் விரும்பிய பணியை நிறைவேற்றுவதற்கு பயனருடன் தொடர்பு கொள்ள வேண்டும். இதற்கு உள்ளீடு - வெளியீடு செயற்கூறுகள் பயன்படுகிறது.

உள்ளீடு மற்றும் வெளியீடு செயற்கூறுகள்

ஒரு நிரல் பயனர் விரும்பிய பணியை நிறைவேற்றுவதற்கு பயனருடன் தொடர்பு கொள்ள வேண்டும். இதற்கு உள்ளீடு - வெளியீடு செயற்கூறுகள் பயன்படுகிறது. input () செயற்கூறு, ஓர் நிரலை இயக்கும் பொழுது தரவுகளை உள்ளீடு செய்யவும், print () என்ற வெளியீடு செயற்கூறு நிரலின் தீர்வுகளை திரையில் காண்பிக்க உதவுகிறது.

1. Print() செயற்கூறு

பைத்தானில், print() செயற்கூறு நிரலை இயக்கும் பொழுது தரவுகளை வெளியிட பயன்படுகிறது.

print() செயற்கூறின் தொடரியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Print (“string to be displayed as output” )

Print (variable)

Print (“string to be displayed as output”,variable)

Print (“stringl ”,variable, ”string2”,variable, ”string3” …..)


எடுத்துக்காட்டு 

>>> print ("Welcome to Python Programming”)

Welcome to Python Programming

>>> x = 5

>>> y = 6

>>> z = x + y

>>> print (z)

11

>>> print (“The sum = '”, z)

The sum = 11

>>> print ("The sum of”, x, " and”, y," is”, z)

The sum of 5 and 6 is 11


வெளியீடு:

Welcome to Python programming

11

The sum = 11

The sum of 5 and 6 is 11

print() செயற்கூறு தீர்வுகளை திரையில் காண்பிக்கும் முன் கோவையை மதிப்பீடு செய்யும். print() செயற்கூறினுள் கொடுக்கப்படும் முழு கூற்றினையும் திரையில் காட்டும். காற்புள்ளி(,) கொண்டு print() செயற்கூறினுள் ஒன்றுக்கு மேற்பட்ட உருப்புகளை பிரிக்கலாம்.

2. input()

பைத்தானில், input() செயற்கூறு நிரலை இயக்கும் பொழுது தரவுகளை உள்ளீடாக பெற்றுக் கொள்ளப் பயன்படுகிறது . input() செயற்கூறின் தொடரியல்,

Variable = input ("prompt string”)

இந்த தொடரியலில் உள்ள "prompt string” பயனர் கொடுக்கப்பட வேண்டிய உள்ளீடு எதுவென்பதை உணர்த்தும் கூற்று அல்லது செய்தியை கொண்டிருக்கும்.

input() கட்டளை அமைப்பில் உள்ள "prompt string” திரையில் தோன்றும், பயனர் இதை படித்து உள்ளீடு சாதனத்திலிருந்து எதிர்பார்க்கப்படும் தரவுகளை கொடுக்கலாம். input() செயற்கூறு, விசைப்பலகையின் மூலம் தட்டச்சு செய்தவற்றை மாறியில் சேமித்து வைக்கும். "prompt string” கொடுக்கப்படவில்லையெனில் திரையில் எந்த தகவலும் தோன்றாது. இதனால் பயனர் எவற்றை உள்ளீடு செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள முடியாது.

 

எடுத்துக்காட்டு 1:  "prompt string” கொண்டுள்ள input() செயற்கூறு

>>> city=input (“Enter Your City: ")

Enter Your City: Madurai

>>> print ("I am from “; city)

I am from Madurai

 

எடுத்துக்காட்டு 2: "prompt string” இடம்பெறாத input( ) செயற்கூறு

>>> city=input()

Rajarajan

>>> print (I am from", city)

I am from Rajarajan

 

மேலே உள்ள எடுத்துக்காட்டு 2ல், input( ) செயற்கூற்றில் "prompt string" இடம்பெறவில்லை . எனவே, எவற்றை உள்ளீடாக தர வேண்டும் என்பது பயனர் புரிந்து கொள்ள இயலாது. நிரலுக்கு தொடர்பில்லாத தரவுகளை உள்ளிட்டால், தவறான தீர்வை வெளியிடும். எனவே பயனர் நிரலை உரிய முறையில் இயக்க, "prompt string” input() செயற்கூறில் பயன்படுத்த வேண்டும்.

input( ) செயற்கூறு அனைத்து தரவுகளையும் சரங்கள் அல்லது குறியுருவாக ஏற்றுக் கொள்ளும், எண்களாக அல்ல. பயனர் எண்களை மதிப்புகளாக உள்ளீடு செய்யும் போது, அவை வெளிப்படையாக எண்வகை தரவுகளாக மாற்றப்பட வேண்டும். int() செயற்கூறு சரவகை தரவை எண்வகை தரவாக வெளிப்படையாக மாற்ற உதவுகிறது. இது போன்ற மற்ற செயற்கூறுகளை பின்வரும் பாடங்களில் படிக்கலாம்.

எடுத்துக்காட்டு 3:

X = int (input("Enter Number 1:''))

y = int (input(“Enter Number 2: "))

print ("The sum = '', x+y)

வெளியீடு:

Enter Number 1: 34

Enter Number 2: 56

The sum = 90


எடுத்துக்காட்டு 4: மேலே காணும் நிரலுக்கு ஒரு மாற்று முறை

x,y=int (input("Enter Number 1 :")),int(input("Enter Number 2:"))

print ("X = "',x," Y = ",y)

வெளியீடு:

Enter Number 1:30

Enter Number 2:50

X = 30 Y = 50

Tags : Python பைத்தான்.
12th Computer Science : Chapter 5 : Core Python : Python Variables and Operators : Input and Output Functions Python in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது கணினி அறிவியல் : அலகு 5 : Core பைத்தான் : பைத்தான் அறிமுகம்-மாறிகள் மற்றும் செயற்குறிகள் : உள்ளீடு மற்றும் வெளியீடு செயற்கூறுகள் - பைத்தான் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது கணினி அறிவியல் : அலகு 5 : Core பைத்தான் : பைத்தான் அறிமுகம்-மாறிகள் மற்றும் செயற்குறிகள்