பைத்தான் - வில்லைகள் | 12th Computer Science : Chapter 5 : Core Python : Python Variables and Operators

   Posted On :  22.08.2022 07:35 pm

12 வது கணினி அறிவியல் : அலகு 5 : Core பைத்தான் : பைத்தான் அறிமுகம்-மாறிகள் மற்றும் செயற்குறிகள்

வில்லைகள்

பைத்தான், நிரலில் இடம்பெறும் வரிகளை அடிப்படை சொற்களாக பிரிக்கிறது. இந்த கூறுகள் வில்லைகள் எனப்படும்

வில்லைகள்

பைத்தான், நிரலில் இடம்பெறும் வரிகளை அடிப்படை சொற்களாக பிரிக்கிறது. இந்த கூறுகள் வில்லைகள் எனப்படும் பொதுவாக வில்லைகளின் வகையான,

1) குறிப்பெயர்கள்

2) சிறப்புச் சொற்கள்

3) செயற்குறிகள்

4) வரம்புக்குறி மற்றும்

5) நிலைஉரு

வில்லைகளை பிரிப்பதற்கு வெற்று இடைவெளி கண்டிப்பாக இருத்தல் வேண்டும்.

1. குறிப்பெயர்கள்

மாறி, செயற்கூறு, இனக்குழு, தொகுதி அல்லது பொருளின் பெயர்களை குறிப்பெயர் என்று அழைக்கப்படுகிறது.

• குறிப்பெயர்கள் எழுத்துக்கள் (A...Z or a..z) அல்லது அடிக்கீறு ( _ ) கொண்டு தொடங்க வேண்டும்.

• குறிப்பெயர்கள் எண்கள் (0 .. 9) கொண்டிருக்கலாம்.

• பைத்தான் குறிப்பெயர்கள் எழுத்து வடிவுணர்வு கொண்டது. அதாவது ஆங்கில பெரியயெழுத்துகள் (uppercase) மற்றும் ஆங்கில சிறியயெழுத்துக்கள் (lowercase) வெவ்வேறாக கருதிக் கொள்ளும்.

• குறிப்பெயர்கள் பைத்தான் சிறப்புச் சொற்களாக இருக்க கூடாது.

• பைத்தானில் %,$, @ etc., போன்ற நிறுத்தற்குறிகள் குறிப்பெயர்களில் இடம் பெறக்கூடாது.

சரியான குறிப்பெயர்களின் எடுத்துக்காட்டு:

Sum, total_marks, regno, num1

தவறான குறிப்பெயர்களின் எடுத்துக்காட்டு :

12Name, name$, total-mark, continue


2. சிறப்புச் சொற்கள்

நிரலின் அமைப்பை அடையாளம் காண பைத்தான் மொழிப்பெயர்ப்பி சிறப்புச் சொற்களை பயன்படுத்துகிறது. சிறப்பு சொற்கள் மொழிபெயர்ப்பியில் குறிப்பிட்ட பொருள் கொண்டுள்ளதால் இவற்றை பிற பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடாது.


3. செயற்குறிகள்

கணிப்பொறி நிரலாக்க மொழியில் செயற்குறிகள் என்ற சிறப்பு குறியீடுகள் கணிப்பீடுகள், நிபந்தனை சோதிப்பு போன்ற செயல்பாடுகளை செய்ய பயன்படுகிறது. செயற்குறிகள் என்பவை குறியீடுகள் இவை செயலேற்பிகளில் உள்ள மதிப்புகளில் செயல்படும். கணித, ஒப்பீடு, தருக்க, மதிப்பிருத்தல் போன்று பல வகை செயற்குறிகள் உள்ளன. மதிப்புகள் மற்றும் மாறிகள் செயற்குறியுடன் பயன்படுத்தும் போது செயலேற்பிகள் என்று அழைக்கப்படுகிறது.

கணித செயற்குறிகள்

கணித செயற்குறிகள், இரு செயலேற்பிகள் ஏற்றுக் கொண்டு அதன் மீது கணித செயல்பாடுகளை செய்யும். அவை எளிய முறை கணித செயல்பாடுகளாக பயன்படுகிறது. பெரும்பான்மையாக கணிப்பொறி மொழிகள் இதுபோன்ற செயற்குறிகளை கொண்டிருக்கும், அவை சமன்பாடுகளை பயன்படுத்தி தொடர் கணிப்பீடுகளை செய்யப் பயன்படுகிறது.

பைத்தான் பின்வரும் கணித செயற்குறிகளை கொண்டுள்ளது



குறிமுறை 5.1 கணித செயற்குறியை செயல் விளக்கம்:

#Demo Program to test Arithmetic Operators

a=100

b=10

print ("The Sum = ",a+b)

print ("The Difference = ",a-b)

print ("The Product = ",a*b)

print ("The Quotient = “,a/b)

print ("The Remainder = ",a%30)

print ("The Exponent = "',a**2)

print ("The Floor Division =",a//30)

#Program End


வெளியீடு:

The Sum = 110

The Difference = 90

The Product = 1000

The Quotient = 10.0

The Remainder = 10

The Exponent = 10000

The Floor Division = 3

தொடர்புடைய அல்லது ஒப்பீடு செயற்குறிகள்

தொடர்புடைய செயற்குறிகள் ஒப்பீடு செயற்குறிகள் என்றும் அழைக்கப்படுகிறது. இது இரு செயலேற்பிகளுக்கு இடையேயான உறைமுறையை சோதித்தரிய உதவும். சோதனை சரியாக இருந்தால் விடை சரி என்றும், தவறெனில் தவறு என்ற விடையை தரும்.

பைத்தான் பின்வரும் ஒப்பீடு செயற்குறிகளை கொண்டுள்ளது


 

குறிமுறை 5.2 ஒப்பீடு செயற்குறி சோதித்தல்:

#Demo Program to test Relational Operators

a=int (input("Enter a Value for A:"))

b=int (input("Enter a Value for B:"))

print ("A = "',a," and B = ",b)

print ("The a==b = "',a==b)

print ("The a > b = ",a>b)

print ("The a <b =",a<b)

print ("The a >= b = "a>=b)

print ("The a <= b = "',a<=0)

print ("The a != b = "',a!=b)

#Program End


வெளியீடு:

Enter a Value for A:35

Enter a Value for B:56

A = 35 and B = 56

The a==b     = False

The a > b    = False

The a < b    = True

T he a >= b  = False

The a <= b   = False

The a != b   = True

 

தருக்க செயற்குறிகள் உள்ளன

பைத்தானில், தருக்க செயற்குறிகள் கொடுக்கப்பட்ட ஒப்பீடு கோவையின் மீது தருக்க செயல்பாடுகளை மேற்கொள்ள பயன்படுகிறது. and, or மற்றும் not ஆகிய மூன்று தருக்க செயற்குறிகள் உள்ளன.


மதிப்பிருத்து செயற்குறிகள்

பைத்தானில், = என்பது ஒரு மதிப்பிருத்தல் செயற்குறியாகும். இது மாறிகளுக்கு மதிப்பிருத்த பயன்படுகிறது. a = 5 மற்றும் b = 10 என்று கூற்று aயின் மதிப்பு 5 என்றும் , b-ன்மதிப்பு 10 என்று மதிப்பிருந்தும். இவ்விரு மதிப்பிருத்தல் கூற்றினை வேறுவிதமாக a,b=5,10 என்றும் கொடுக்கலாம், இதுவும் வலது பக்கம் இருக்கு 5 மற்றும் 10 என்ற மதிப்பினை a,b என்ற மாறிகளில் முறையே மதிப்பிருத்தும். பைத்தான், +=, -=, *=, /=, %=>**= மற்றும் //= போன்ற கூட்டு செயற்குறிகளையும் ஏற்கும்.



நிபந்தனை செயற்குறி

மும்ம செயற்குறி நிபந்தனை செயற்குறி என்றும் அழைக்கப்படுகிறது. இது சமன்பாடுகளின் நிபந்தனையை சரி அல்லது தவறா என்று சோதித்து செயல்படுத்தும், மும்ம செயற்குறி பல வரி if.else கூற்று போல் அல்லாது நிபந்தனைகளை ஒற்றை வரியில் சோதிக்க அனுமதிக்கிறது.

நிபந்தனைச் செயற்குறியின் தொடரியல்,

Variable Name = [on_true] if (Test expression] else (on_false]

எடுத்துக்காட்டு:

min= 50 if 49<50 else 70 // min = 50

min= 50 if 49>50 else 70 // min = 70

குறிமுறை 5.5 நிபந்தனை செயற்குறி (மும்ம செயற்குறி) சோதித்தல்:

# Program to demonstrate conditional operator

a, b = 30, 20

# Copy value of a in min if a < b else copy b

min = a if a < b else b

print ("The Minimum of A and B is "',min)

# End of the Program

வெளியீடு:

The Minimum of A and B is 20

 

4. வரம்புக்குறிகள்

பைத்தான், குறியீடு அல்லது குறியீடுகளின் தொகுப்பை, கோவை, பட்டியல், அகராதி மற்றும் சரங்களில் பயன்படுத்துகிறது. பின்வருவன பைத்தான் வரம்புக்குறிகளாகும்.



5. நிலைஉருக்கள்

நிலைஉருக்கள் என்பது மாறிகள் அல்லது மாறிலிகளுக்கு வழங்கப்படும் மூல தரவாகும். பைத்தானில் பல்வேறு வகையான நிலைஉருகள் உள்ளன.

1) எண்கள்

2) சரம்

3) பூலியன்

எண் நிலை உருக்கள்:

எண் நிலைஉருக்கள் எண்களை கொண்டிருக்கும். இவற்றை மாற்ற முடியாது. இவை முழு எண், மிதப்பு மற்றும் சிக்கலான என்று 3 வகையாக எண் நிலை உருக்களாக பிரிக்கப்படுகிறது.

 

நிரல் குறிமுறை 5.5 எண் இலக்கங்களை நிரூபித்தல்

# Program to demonstrate Numeric Literals

a = 0b1010   #Binary Literals

b = 100     #Decimal Literal

c = 00310    #Octal Literal

d = 0x12c   #Hexadecimal Literal

print ("Integer Literals :'',a,b,c,d)

#Float Literal

float_1 = 10.5

float_2 = 1.5e2

print ("Float Literals :'',float_1, float_2)

#Complex Literal

x = 1 + 3.14 j

print ("Complex Literals:'', x)

Print ("x = "', x , "Imaginary part of x = '', x.imag, "Real part of x = "', x.real)

#End of the Program


வெளியீடு:

Integer Literals : 10 100 200 300

Float Literals : 10.5 150.0

Complex Literals :

x = (1.3.14) Imaginary part of x = 3.14 Real part of x = 1.0

சர நிலையுருக்கள்

பைத்தானில், சர நிலையுருக்கள், குறியுருக்களின் தொடர், மேற்கோள் குறிக்குள் கொண்டிருக்கும். பைத்தானில், சரங்களை ஒற்றை, இரட்டை மற்றும் மூன்று மேற்கோள் குறிகளில் அடைக்கலாம். குறியுரு மதிப்பிருக்கள் ஒற்றை அல்லது இரட்டை மேற்குறியை கொண்டிருக்கும். பல வரி சர நிலையுருவை மூன்று மேற்கோள் “ “ குறிக்குள் கொடுக்கப்பட வேண்டும்.

 

குறிமுறை 5.7 சர நிலையுரு செயல் விளக்கம்:

# Demo Program to test String Literals

strings = "This is Python"

char = "C"

multiline_str = ''This is a multiline string with more than one line code.''

print (strings)

print (char)

print (multiline_str)

# End of the Program


வெளியீடு:

This is Python

C

This is a multiline string with more than one line code.

பூலியன் நிலையுருக்கள்

பூலியன் நிலையுருக்கள் சரி அல்லது தவறு ஆகிய இரு மதிப்புகளை கொண்டிருக்கும்.

குறிமுறை 5.8 பூலியன் மதிப்புரு சோதித்தல்:

# Demo Program to test String Literals

boolean_1 = True

boolean_2 = False

print ("Demo Program for Boolean Literals")

print ("Boolean Value1 :'',boolean_1)

print ("Boolean Value2 :'', boolean_2)

# End of the Program

வெளியீடு:

Demo program for Booken Literals

Boolean Value1 : True

Boolean Value2 : False

விடுபடு தொடர்

பைத்தானில், பின்சாய்வுகோடு ("\") ஆகிய சிறப்பு குறியீட்டை "விடுபடு" குறியுரு என்று அழைக்கிறோம். இது சில வெற்று இடைவெளியை குறிப்பிட பயன்படுகிறது. "\t" என்பது தத்தல், "\n" என்பது புதியவரி மற்றும் "\r" என்பது நகர்த்தி திரும்பலை (carriage return) குறிக்கிறது. எடுத்துக்காட்டு "It's raining" என்ற செய்தியை பின்வரும் பைத்தான் கட்டளை வெளியிடும்,

>>> print ("It\'s raining")

It's raining

பைத்தான் பின்வரும் விடுபடு தொடர்களை கொண்டுள்ளது.


Tags : Python பைத்தான்.
12th Computer Science : Chapter 5 : Core Python : Python Variables and Operators : Tokens Python in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது கணினி அறிவியல் : அலகு 5 : Core பைத்தான் : பைத்தான் அறிமுகம்-மாறிகள் மற்றும் செயற்குறிகள் : வில்லைகள் - பைத்தான் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது கணினி அறிவியல் : அலகு 5 : Core பைத்தான் : பைத்தான் அறிமுகம்-மாறிகள் மற்றும் செயற்குறிகள்