Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணினி அறிவியல் | பைத்தான் நிரலாக்கம்
   Posted On :  22.08.2022 07:33 pm

12 வது கணினி அறிவியல் : அலகு 5 : Core பைத்தான் : பைத்தான் அறிமுகம்-மாறிகள் மற்றும் செயற்குறிகள்

பைத்தான் நிரலாக்கம்

பைத்தான் நிரலை, ஊடாடும் முறைமை அல்லது ஸ்கிரிப்ட் முறைமைகளில் எழுதலாம்.

பைத்தான் நிரலாக்கம்

பைத்தான் நிரலை, ஊடாடும் முறைமை அல்லது ஸ்கிரிப்ட் முறைமைகளில் எழுதலாம். ஊடாடும் முறைமை பைதான் தூண்டுகுறியில் (>>>) நிரலை எழுத உதவும். ஸ்கிரிப்ட் முறைமையில் நிரல் குறிமுறை தனி கோப்பாக, .py என்ற நீட்டிப்புடன் சேமிக்கப்பட்டு இயக்கப்படும். ஸ்கிரிப்ட் முறைமை பைதான் மூல நிரலை உருவாக்கவும், பதிப்பாய்வு செய்யவும் பயன்படுகிறது.


1. ஊடாடும் முறைமை நிரலாக்கம்

ஊடாடும் முறைமையில் பைத்தான் குறிமுறையை நேரடியாக தூண்டுகுறியில் உள்ளீடப்பட்டவுடன், மொழிப்பெயர்ப்பி தீர்வுகளை உடனடியாக காட்டும். ஊடாடும் முறைமை ஒரு எளிய முறை கால்குலேட்டரை போல் பயன்படுத்தலாம்.

பைத்தான் IDLEயை தொடங்குதல்

பின்வரும் கட்டளையை கொண்டு விண்டோஸ் இயக்க அமைப்பில்பைத்தான் IDLEயை துவக்கலாம்.

Start –> All Programs –> Python 3.x –> IDLE (Python3.x)

(அல்லது)

முகப்பு திரையில்  என்ற குறும்படம் இருப்பின் அதை கிளிக் செய்து தொடங்கலாம்.


>>> என்ற தூண்டுகுறி பைதான் மொழிப்பெயர்ப்பி கட்டளைப் பெற்றுக் கொள்ள தயார் நிலையில் இருப்பதை குறிக்கிறது. அதாவது IDLE திரையில் தோன்றும் தூண்டுகுறி ஊடாடும் முறைமையில் இருப்பதை குறிக்கிறது. இப்பொழுது ஒரு எளிய முறை கால்குலேட்டரில், கணக்கீடு கோவையை செய்து பார்க்கலாம்.

எடுத்துக்காட்டு 1:

>>>5 + 10

15

>>>5 + 50 *10

505

>>>5**2

25 


எடுத்துக்காட்டு 2:

>>>print ("Python Programming Language”)

>>>x=10

>>>y=20

>>>z=x + y

>>>print (“The Sum”, z)



2 பைத்தான் ஸ்கிரிப்ட் நிரலாக்கம்

அடிப்படையாக, ஒருஸ்கிரிப்ட் என்பதுபைத்தான் கட்டளைகளை கொண்ட ஒரு உரை ஆவணத்தைக் குறிக்கிறது. பைத்தான் ஸ்கிரிப்ட் குறிமுறையை மறுபயனாக்கம் செய்துக் கொள்ளலாம். ஒரு முறை ஸ்கிரிப்ட் கோப்பை எழுதிவிட்டால் பல முறை இயக்கிக் கொள்ளலாம் மீண்டும் அந்த ஸ்கிரிப்டை உருவாக்க தேவையில்லை. ஸ்கிரிப்ட் பதிப்பாய்வு செய்ய கூடியவை.

பைத்தான் ஸ்கிரிப்ட் எழுதுதல்

1. பைத்தான் shell சாளரத்தில் File –> New File அல்லது Ctrl + N என்பதை அழுத்தவும்.


2. படம் 5.3(அ) வில் காணப்படுவதைப்போல, பெயரிடப்படாத Untitled வெற்று ஸ்கிரிப்ட் Text editor தோன்றும்.


3. பின்வரும் கட்டளைகளை ஸ்கிரிப்ட் editorல் உள்ளிடவும்.

a =100

b =350

c =a+b

print(“The Sum=”,c)


பைத்தான் ஸ்கிரிப்ட்யை சேமித்தல்

(1) File –> Save கட்டளையை தேர்ந்தெடுக்கவும் அல்லது Ctrl + S அழுத்தவும்.


(2) இப்பொழுது, படம் 5.6 காணப்படும் Save As உரையாடல் பெட்டி திரை தோன்றும்.


(3) Save As உரையாடல் பெட்டியில், கோப்பு சேமிக்கப்பட வேண்டிய இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் கோப்பின் பெயரை File Name பெட்டியில் உள்ளிட வேண்டும். முன்னியல்பாக பைதான் கோப்புகள் .py என்ற நீட்டிப்புடன் சேமிக்கப்படுகிறது. எனவே, பைத்தான் ஸ்கிரிப்ட் editor-ல் கோப்புகளுக்கு பயனர் நீட்டிப்பை குறிப்பிட வேண்டிய அவசியமில்லை.

(4) இறுதியாக Save பொத்தானை தேர்ந்தெடுத்து, பைத்தான் ஸ்கிரிப்ட்டை கோப்பை சேமிக்கலாம்.

Executing பைத்தான் ஸ்கிரிப்ட்டை இயக்க

(1) Run –> Run Module அல்லது F5 யை தேர்ந்தெடுக்கவும்.


(2) குறிமுறையில் பிழைகள் இருப்பின் அவை சிகப்பு நிறத்தில் IDLE திரையில் காண்பிக்கப்பட்டு, பைத்தான் பிழைக்கான காரணத்தை விளக்கும். பிழைகளை திருத்துவதற்கு, ஸ்கிரிப்ட் editorக்கு சென்று, பிழைகளைத் திருத்தி, கோப்பை Ctrl + S அல்லது File –> Save கட்டளைக் கொண்டு சேமித்தபின் மீண்டும் இயக்க வேண்டும்.

(3) பிழைகள் இல்லாத பைத்தான் குறிமுறையை இயக்கியவுடன் அதன் வெளியீடு பைத்தான் IDLE திரை 5.8 -ல் உள்ளது போன்று தோன்றும்.


12th Computer Science : Chapter 5 : Core Python : Python Variables and Operators : Programming in Python in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது கணினி அறிவியல் : அலகு 5 : Core பைத்தான் : பைத்தான் அறிமுகம்-மாறிகள் மற்றும் செயற்குறிகள் : பைத்தான் நிரலாக்கம் - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது கணினி அறிவியல் : அலகு 5 : Core பைத்தான் : பைத்தான் அறிமுகம்-மாறிகள் மற்றும் செயற்குறிகள்