Home | 6 ஆம் வகுப்பு | 6வது அறிவியல் | தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் இடையேயான உறவுமுறை

அன்றாட வாழ்வில் தாவரங்கள் | பருவம் 3 அலகு 5 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் இடையேயான உறவுமுறை | 6th Science : Term 3 Unit 5 : Plants in Daily Life

   Posted On :  22.09.2023 12:17 am

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 5 : அன்றாட வாழ்வில் தாவரங்கள்

தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் இடையேயான உறவுமுறை

விலங்குகள் தனது உணவு, வசிப்பிடம் உள்ளிட்ட தேவைகளுக்குத் தாவரங்களைச் சார்ந்திருக்கின்றன. இந்த தொடர்பினால் விலங்குகள் மட்டுமின்றித் தாவரங்களும் பயனடைகின்றன. இத்தகைய தொடர்பு பொருளாதார ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது.

தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் இடையேயான உறவுமுறை


விலங்கு - தாவர இடைவினைகள்

விலங்குகள் தனது உணவு, வசிப்பிடம் உள்ளிட்ட தேவைகளுக்குத் தாவரங்களைச் சார்ந்திருக்கின்றன. இந்த தொடர்பினால் விலங்குகள் மட்டுமின்றித் தாவரங்களும் பயனடைகின்றன. இத்தகைய தொடர்பு பொருளாதார ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது.

உதாரணமாகப் பட்டுப்புழுக்கள் மல்பெரி இலையை உணவாக எடுத்துக்கொண்டு மல்பெரி தாவரத்தில் வசிக்கின்றன. ஒரு புழுவிற்கும் தாவரத்திற்குமான இந்தத் தொடர்பு பொருளாதார ரீதியில் நமக்குப் பட்டு உற்பத்திக்குப் பயன்படுகின்றது.


தாவரங்களின் அயல் மகரந்தச்சேர்க்கைக்கு விலங்குகள், பூச்சிகள், மற்றும் பறவைகளின் பங்கு மிக அவசியமாகும்.

மலர்களின் பிரகாசமான வண்ணங்கள், மணம் மற்றும் தேன் ஆகியவை பூச்சிகளை ஈர்க்கின்றன. ஒரு பூவிலிருந்து மற்றொரு பூவிற்கு இப்பூச்சிகள் செல்லும்போது தங்கள் உடலில் ஒட்டியுள்ள மகரந்தத்தூள்களை விட்டுவிட்டுச் செல்கின்றன. இதனால் மகரந்தச்சேர்க்கை நடைபெற்றுக் காய்கறிகள் மற்றும் பழங்கள் உருவாகின்றன.


சிறந்த விளைச்சலைப் பெற இத்தகைய மகரந்தச்சேர்க்கைச் செய்யும் பூச்சிகளையும், பறவைகளையும் பாதுகாத்தல் அவசியமாகும்.

தேனீக்கள்  அயல்மகரந்தச்சேர்க்கைக்கு உதவுவதோடு,  தேனையும் நமக்கு அளிக்கின்றன.


கடலில் பவளப்பாறைகளில் வாழும் பாசிகளும் தாவரங்களும் பெரும்பான்மையான மீன்களின் உணவாக இருக்கின்றன. அப்பகுதிகளில் மீன்பிடித்தொழில் நடைபெறுகின்றது.



பல்வேறு தாவரங்களின் விதைகள் பரவ விலங்குகளும் பறவைகளும் முக்கியப் பங்காற்றுகின்றன. பறவைகளின் வயிற்றில் உள்ள செரிமான என்சைம்கள் விதைகளின் மேலுறையை மிருதுவாக்கி அவைகளை எளிதாகமுளைக்கத் தகுந்ததாக மாற்றுகின்றன.

விலங்குகளுக்கும் தாவரங்களுக்குமான இத்தகைய இயற்கையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. தொடர்புகள் பாதிப்படையும்போது பொருளாதாரரீதியாகவும்

 

தாவரங்களின் பிற பயன்பாடுகள்


1. மண் வளத்தைப் பாதுகாத்தல்

தாவரங்கள் மண்வளத்தை அதிகரிக்கின்றன. தாவர இலைகள், மலர்கள் மற்றும் பிற பாகங்கள் மண்ணில் உதிர்கின்றன. இவை மண்ணில் சிதைவடைந்து வளமான மட்கிய உரத்தை உருவாக்குகின்றன. மட்கிய உரமானது, மண்ணின் வளத்தை அதிகரிக்கச் செய்கிறது. நீலப் பச்சைப் பாசி, பாக்டீரியா, சூடோமோனாஸ் ஆகியவை வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் நிலை நிறுத்தி மண்வளத்தை அதிகரித்து, விவசாயத்திற்கு உதவுகின்றன.

2. மண் அரிப்பைத் தடுத்தல்

அடர்த்தியாக வளரும் தாவரங்கள் மற்றும் அவற்றின் வேர்கள் மண் அரிப்பைத் தடுக்கின்றன. வேகமாகக் காற்று வீசும்போதோ, நீர் பாயும்போதோ நிலத்தின் மேற்பரப்பில் உள்ள வளமான மண் அடித்துச் செல்லப்படுகிறது. அத்தகைய இடங்களில் தாவரங்களை வளர்ப்பதால் மண் அரிப்பு தடுக்கப்படுகிறது,

3. உயிரி - எரிபொருள்

சில தாவரங்கள் உயிரி எரிபொருள்களுக்காக வளர்க்கப்படுகின்றன. இந்த எரிபொருள்கள் மிகக் குறைந்த அளவு நச்சுச்தன்மை கொண்டவை. இவை தீங்கு விளைவிக்கும் வாயுக்களை உருவாக்குவதில்லை. (எ.கா) காட்டாமணக்கு. தாவரக் கழிவுகளிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. (எ.கா) சர்க்கரை ஆலைக் கழிவுகள்.

பாலக்கீரை

மூட்டு முடக்குவாதம் என்பது அனைத்து வயதினருக்கும் மூட்டு மற்றும் முழங்கால் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு நோயாகும். இந்த நோய்க்கான மருந்தினை பாலக்கீரையிலிருந்து தற்போது மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவன (CDRI - Central Drug Research Institute - Lucknow) விஞ்ஞானிகள் நானோ உருவாக்கத்தின் (nano formulation) மூலம் உருவாக்கியுள்ளனர்.

4. ரப்பர் மற்றும் இயற்கை நெகிழிகள்

ரப்பர் மரத்திலிருந்து கிடைக்கும் பாலில் இருந்து ரப்பர் தயாரிக்கப்படுகிறது. வாகனச்சக்கரங்கள், மின்கம்பிகள், இருக்கைகள் தயாரிப்பில் பயன்படுகிறது. இயற்கை நெகிழிகள் தாவரங்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இவை உயிரினச் சிதைவிற்கு உள்ளாகக் கூடியவை.


5. வேப்ப எண்ணெய் பூசப்பட்ட யூரியா

இந்திய விவசாயிகள் பயிர் வளர்ச்சியைப் பெருக்க யூரியாவினை உரமாகப் பயன்படுத்தி வருகின்றனர். வேப்ப எண்ணெய் பூசப்பட்ட யூரியாவினை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இது நைட்ரஜனை மெதுவாக வெளியிடுவதால் தாவரங்கள் அதிக அளவு நைட்ரஜனை எடுத்துக் கொள்கின்றன. இது யூரியாவினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பையும் குறைக்கிறது.

Tags : Plants in Daily Life | Term 3 Unit 5 | 6th Science அன்றாட வாழ்வில் தாவரங்கள் | பருவம் 3 அலகு 5 | 6 ஆம் வகுப்பு அறிவியல்.
6th Science : Term 3 Unit 5 : Plants in Daily Life : Interrelationship between plants and animals Plants in Daily Life | Term 3 Unit 5 | 6th Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 5 : அன்றாட வாழ்வில் தாவரங்கள் : தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் இடையேயான உறவுமுறை - அன்றாட வாழ்வில் தாவரங்கள் | பருவம் 3 அலகு 5 | 6 ஆம் வகுப்பு அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 5 : அன்றாட வாழ்வில் தாவரங்கள்