Home | 6 ஆம் வகுப்பு | 6வது அறிவியல் | அன்றாட வாழ்வில் தாவரங்கள்

பருவம் 3 அலகு 5 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - அன்றாட வாழ்வில் தாவரங்கள் | 6th Science : Term 3 Unit 5 : Plants in Daily Life

   Posted On :  21.09.2023 11:56 pm

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 5 : அன்றாட வாழ்வில் தாவரங்கள்

அன்றாட வாழ்வில் தாவரங்கள்

இயற்கையில் ஏராளமான தாவர வளங்கள் காணப்படுகின்றன. மனிதர்கள் உணவு, உடை, இருப்பிடம், மற்றும் மருத்துவம் போன்ற தங்கள் வாழ்வியல் தேவைகளுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாவரங்களைச் சார்ந்துள்ளனர்.

அலகு 5

அன்றாட வாழ்வில் தாவரங்கள்



 

கற்றல் நோக்கங்கள்

பல்வேறு வகையான தாவரங்களைப் பற்றியும் அவற்றின் பயன்கள் பற்றியும் அறிந்து கொள்ளுதல்

தாவரங்களின் பொருளாதார முக்கியத்துவத்தைப் பற்றிப் புரிந்து கொள்ளுதல்

தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் இடையே நடைபெறும் இடைவினைகளையும் அவற்றினால் ஏற்படும் பொருளாதார பயன்களையும் அறிந்து கொள்ளுதல்

 

அறிமுகம்

இயற்கையில் ஏராளமான தாவர வளங்கள் காணப்படுகின்றன. மனிதர்கள் உணவு, உடை, இருப்பிடம், மற்றும் மருத்துவம் போன்ற தங்கள் வாழ்வியல் தேவைகளுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாவரங்களைச் சார்ந்துள்ளனர்.

சுற்றுச்சூழல் சமன்பாட்டினைப் பேணுதல், வீட்டு உபயோகப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள் தயாரித்தல் மற்றும் வணிகப் பயன்பாடு ஆகியவற்றிற்காகவும் நாம் தாவரங்களைச் சார்ந்துள்ளோம்.

ஒரு நாட்டிற்குப் பெருமளவு பொருளாதார வளங்களைத் தாவரங்கள் அளிக்கின்றன. உண்மையில் எந்த ஒரு நாட்டின் பொருளாதாரமும் அந்நாட்டின் விவசாயத்தினையும் தாவரங்களிலிருந்து கிடைக்கும் பொருள்களையும் பெருமளவில் சார்ந்துள்ளது.

மனிதர்களுக்கும் தாவரங்களுக்கும் இடையேயான தொடர்பு மற்றும் தாவரங்களின் பொருளாதாரப் பயன்பாடு ஆகியவற்றைப் பற்றிப் படிக்கும் அறிவியல் பிரிவு பொருளாதாரத் தாவரவியல் எனப்படுகிறது.

பழங்காலத்தில் இருந்தே இந்தியாவின் பெரும்பான்மையான மக்கள் அரிசி, கேழ்வரகு, மற்றும் கம்பு போன்ற தானியங்களை முக்கிய உணவாகப் பயன்படுத்தி வந்தனர் எனப் பல்வேறு இடங்களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளின் மூலம் கிடைக்கப்பெற்ற தானியங்களின் எச்சங்கள் மற்றும் படிவுகள் மூலம் நாம் அறிய வருகிறோம். மேலும் பண்டைய இலக்கியக் குறிப்புகளின் வாயிலாக அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பல பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த தாவரங்களைப் பற்றி அறிந்து கொள்கிறோம்.

கீழே தரப்பட்டிருக்கும் படங்களைக் கவனமாகப் பாருங்கள். அப்படங்களில் உள்ளவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?


1. எதற்காக விவசாயிகள் நெல்லை அறுவடை செய்கிறார்கள்?

2 ஒரு பெண்மணி கயிறு திரித்துக் கொண்டிருக்கிறார். அந்த கயிற்றுக்குத் தேவையான மூலப்பொருள் எங்கிருந்து கிடைக்கிறது?

3. வேப்பமரத்தின் இலைகள் ஒரு தட்டில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. எதற்காக என்று யூகிக்க முடிகிறதா?

4. நாற்காலியைத் தயாரிக்க ஒருவர் எப்பொருளைப் பயன்படுத்துகிறார்?

இப்பாடத்தில் நாம் பலதரப்பட்ட தாவரங்களின் பொருளாதாரப் பயன்பாடுகள், அவை மனிதர்களுக்குப் பயன்படும் விதம் ஆகியவற்றைப் பற்றி விவாதிப்போம்.

தாவரங்களின் பொருளாதார மதிப்பு மற்றும் பயன்பாடுகளின் அடிப்படையில் தாவரங்களைக் கீழ்க்கண்டவாறு பிரிக்கலாம்.

1. உணவுத் தாவரங்கள்

2. நறுமணத் தாவரங்கள்

3. மருத்துவத் தாவரங்கள்

4. நார்த் தாவரங்கள்

5. மரக்கட்டை தரும் தாவரங்கள்

6. அலங்காரத் தாவரங்கள்



Tags : Term 3 Unit 5 | 6th Science பருவம் 3 அலகு 5 | 6 ஆம் வகுப்பு அறிவியல்.
6th Science : Term 3 Unit 5 : Plants in Daily Life : Plants in Daily Life Term 3 Unit 5 | 6th Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 5 : அன்றாட வாழ்வில் தாவரங்கள் : அன்றாட வாழ்வில் தாவரங்கள் - பருவம் 3 அலகு 5 | 6 ஆம் வகுப்பு அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 5 : அன்றாட வாழ்வில் தாவரங்கள்