Home | 6 ஆம் வகுப்பு | 6வது அறிவியல் | நினைவில் கொள்க

அன்றாட வாழ்வில் தாவரங்கள் | பருவம் 3 அலகு 5 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - நினைவில் கொள்க | 6th Science : Term 3 Unit 5 : Plants in Daily Life

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 5 : அன்றாட வாழ்வில் தாவரங்கள்

நினைவில் கொள்க

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 5 : அன்றாட வாழ்வில் தாவரங்கள் : நினைவில் கொள்க

நினைவில் கொள்க

❖ மனிதர்கள் உணவு, உடை, இருப்பிடம், மற்றும் மருத்துவம் போன்ற தங்கள் வாழ்வியல் தேவைகளுக்குநேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ  தாவரங்களைச் சார்ந்துள்ளனர்.

❖ மனிதர்களுக்கும்  தாவரங்களுக்கும் இடையேயான தொடர்பு மற்றும் தாவரங்களின் பொருளாதாரப் பயன்பாடு ஆகியவற்றைப் பற்றிப் படிக்கும் அறிவியல் பிரிவு பொருளாதாரத் தாவரவியல் எனப்படுகிறது.

❖ மனிதர்களுக்கு முக்கிய உணவு ஆதாரமாகத் தாவரங்கள் விளங்குகின்றன. நமக்கு உணவு தரும் தாவரங்களை நாம் உணவுத் தாவரங்கள் என்கிறோம்.

❖ அவரைக் குடும்பத்தைச் சார்ந்த உண்ணக்கூடிய விதைகளே பருப்புகள் எனப்படுகின்றன.

❖ நறுமணப் பொருள்கள் உணவிற்குச் சுவையூட்டவும், நிறமூட்டியாகவும், உணவுப் பொருள்களைப் பாதுகாக்கவும் பயன்படுகின்றன.

❖ சில தாவரங்களில் காணப்படும் சிலவகையான வேதிக்கூட்டுப்பொருள்கள் பூச்சிகள், பூஞ்சைகள் மற்றும் சில நோய்க்கிருமிகளுக்கு எதிராக சிறப்பாகச் செயல்படுகின்றன. இத்தகைய தாவரங்கள் மருத்துவ தாவரங்கள் எனப்படுகின்றன.

❖ நார்கள் பயன்பாட்டின் அடிப்படையில் நெசவு நார்கள், கயிறு நார்கள் மற்றும் நிரப்பும் நார்கள் எனப் பிரிக்கப்படுகின்றன.

❖ வணிகரீதியாகப் மரக்கட்டைகள் அதன் பயன்படும் வலிமை மற்றும் அடர்த்தியின் அடிப்படையில் வன்கட்டைகள் மற்றும் மென்கட்டைகள் என் இரண்டு பிரிக்கப்படுகின்றன.

❖ அழகியல் வகைகளாகப் காரணங்களுக்காக வளர்க்கப்படும் தாவரங்கள் அலங்காரத் தாவரங்கள் எனப்படுகின்றன.

❖ விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு இடையேயான தொடர்புகள் இயற்கையான பாதிப்படையும்போது பொருளாதாரரீதியாகவும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

 

 

இணையச்செயல்பாடு

மருந்தா? நஞ்சா?

செயல்பாட்டின் மூலம் தாவரங்களின் மருத்துவப் பண்பினை அறிவோமா!


படி 1: கீழ்க்காணும் உரலி/ விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி 'Kill? or Cure?' செயல்பாட்டின் பக்கத்திற்குச் செல்லவும்.

படி 2: இச்செயல்பாட்டினைத் தொடங்க 'PLAY' என்னும் பொத்தானை சொடுக்கவும். பின்பு 'START' என்பதை சொடுக்கவும்.

படி 3: இப்பொழுது திரையில் தோன்றும் மருத்துவர் உருவம் தரும் குறிப்புகளைக் கொண்டு சரியான மருந்தினை தரும் தாவரத்தினை கண்டறிய வேண்டும்.

படி 4: கீழே தரப்பட்டுள்ள படங்களில் சுட்டியின் உதவியால் சொடுக்கி சரியான தாவரத்தினை தேர்ந்தெடுக்கவும், கூடுதல் விவரங்களைப் பெற செயல்பாட்டு சாளரத்தின் வலது மேற்புரம் உள்ள ''என்னும் குறியீட்டை சொடுக்கவும்.


மருந்தா? நஞ்சா? உரலி:

http://www.rigb.org/education/games/natural-world/kill-or-cure

*படங்கள் அடையாளத்திற்காக மட்டுமே.

Tags : Plants in Daily Life | Term 3 Unit 5 | 6th Science அன்றாட வாழ்வில் தாவரங்கள் | பருவம் 3 அலகு 5 | 6 ஆம் வகுப்பு அறிவியல்.
6th Science : Term 3 Unit 5 : Plants in Daily Life : Points to remember Plants in Daily Life | Term 3 Unit 5 | 6th Science in Tamil : 6th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 5 : அன்றாட வாழ்வில் தாவரங்கள் : நினைவில் கொள்க - அன்றாட வாழ்வில் தாவரங்கள் | பருவம் 3 அலகு 5 | 6 ஆம் வகுப்பு அறிவியல் : 6 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 5 : அன்றாட வாழ்வில் தாவரங்கள்