அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 5 ஆம் வகுப்பு கணக்கு - நீளம் | 5th Maths : Term 1 Unit 4 : Measurements

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள்

நீளம்

நீளம் மற்றும் தூரத்தை மெட்ரிக் அளவை பயன்படுத்தி அளக்கிறோம்.

அலகு - 4

அளவைகள்


 

நீளம்

 

1. நீளம் தொடர்பான வாழ்வியல் கணக்குகள்.

அறிமுகம்

அன்றாட வாழ்வில் நாம் பல பொருள்களை திட்ட அலகாலும் தரப்படுத்தப்படாத அலகாலும் அளக்கின்றோம். ஆனால் தூரத்தை எவ்வாறு அளப்பது?


நீளம் மற்றும் தூரத்தை மெட்ரிக் அளவை பயன்படுத்தி அளக்கிறோம்

"நான் பானு நான் பின்வருவனவற்றை அளக்க விரும்புகிறேன்:


1. மேசையின் நீளம் என்ன?

2. என்னுடைய உயரம் என்ன?

3. என்னுடைய பள்ளிக்கூடம் என் வீட்டிலிருந்து எவ்வளவு தொலைவில் இருக்கிறது?

மேற்கண்ட அளவுகளை எப்படி நான் அளப்பது என்று சொல்ல முடியுமா?"

பொன்னி, "பொருள்கள் எவ்வளவு நீளமானவை. எவ்வளவு உயரமானவை, எவ்வளவு தூரமானவை என்பவைகள் நீட்டலளவைக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்." என்று பானுவுக்கு விவரித்தாள்.

. மில்லிமீட்டர்

நீளத்தின் மிகச்சிறிய அலகு மில்லிமீட்டர் ஆகும். ஒரு மில்லிமீட்டர் என்பது ஒரு பிளாஸ்டிக் அடையாள அட்டை அல்லது பற்று / கடன் அட்டையின் தடிமன் ஆகும்.

நீளத்தின் மிகச்சிறிய அலகு மில்லிமீட்டர் ஆகும்.


. சென்டிமீட்டர்:

1 சென்டிமீட்டர் என்பது 10 மில்லிமீட்டருக்கு சமம்

10 மில்லிமீட்டர் நீளமுடைய ஒரு பொருள் உன்னிடம் இருந்தால் அதை 1 சென்டிமீட்டர் எனக் கூறலாம்.

1 சென்டிமீட்டர் = 10 மில்லிமீட்டர்


நாம் நம்முடைய உயரத்தை அல்லது மேசையின் அகலம் ஆகியவற்றை மில்லிமீட்டர் மற்றும் சென்டிமீட்டர்களை கொண்டு அளக்கலாம்.

அளவு கோலில் 5 மில்லிமீட்டரை உன்னால் குறிக்க இயலுமா?

4 மில்லிமீட்டரை சிவப்பு நிறத்திலும், 10 மில்லிமீட்டரை பச்சை நிறத்திலும் உன்னால் குறிக்க முடியுமா?


உன்னால் 1 சென்டிமீட்டர் மற்றும் 3 மில்லிமீட்டரை குறிக்க இயலுமா?


10 மில்லிமீட்டர் = 1சென்டிமீட்டர்

10 சென்டிமீட்டர் = 1 டெசிமீட்டர்

10 டெசிமீட்டர் = 1 மீட்டர்

10 மீட்டர் = 1 டெகாமீட்டர்

10 டெகாமீட்டர் = 1 ஹெக்டாமீட்டர்

10 ஹெக்டாமீட்டர் = 1 கிலோமீட்டர்


. மீட்டர்

ஒரு மீட்டர் என்பது 100 சென்டிமீட்டருக்கு சமம்.

ஒரு வீட்டின் நீளம் அல்லது விளையாட்டு மைதானத்தின் நீளத்தை மீட்டர்களை பயன்படுத்தி அளக்கலாம்.

1 மீட்டர் = 100 சென்டிமீட்டர்

ஒரு அளவை நாடாவில் சென்டிமீட்டர் மற்றும் மீட்டர் அலகுகள் குறிக்கப்பட்டிருக்கும் அளவை நாடாக்கள் துணிகளின் நீளத்தை அளக்கவும் அல்லது அதிகளவு வீட்டு சாமான்களான மரச்சாமான்கள் மற்றும் அறைகளின் நீளத்தை அளக்கவும் பயன்படும்.


. கிலோமீட்டர்

ஒரு கிலோமீட்டர் என்பது 1000 மீட்டருக்குச் சமமாகும்.

ஒரு இடத்திலிருந்து மற்றோர் இடத்தின் தூரத்கை அறிந்து கொள்ள கிலோமீட்டரைப் பயன்படுத்துகின்றோம்.

ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு அல்லது ஒரு விமானம் எவ்வளவு தூரம் பயணிக்கிறது என்பதைக் கண்டறிய கிலோமீட்டர் பயன்படுகிறது. நாம் ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு செல்ல இரண்டு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனம் பயன்படுத்துகின்றோம். இந்த தூரத்தை ஓடோமீட்டர் என்ற அளவுமானியால் குறிப்பிடுகிறோம்.

1 கிலோமீட்டர் = 1000 மீட்டர்


குறிப்பு:

மேற்குறிப்பிட்ட தரவுகளை பெரியவர்களின் துணைக்கொண்டு சேகரிக்கவும்.

Tags : Measurements | Term 1 Chapter 4 | 5th Maths அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 1 Unit 4 : Measurements : Length Measurements | Term 1 Chapter 4 | 5th Maths in Tamil : 5th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள் : நீளம் - அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள்