Home | 12 ஆம் வகுப்பு | 12வது பொருளாதாரம் | பணத்தின் பொருள் மற்றும் வரையறைகள்

பணவியல் பொருளியல் - பணத்தின் பொருள் மற்றும் வரையறைகள் | 12th Economics : Chapter 5 : Monetary Economics

12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 5 : பணவியல் பொருளியல்

பணத்தின் பொருள் மற்றும் வரையறைகள்

பொருட்கள் மற்றும் பணிகளை வாங்குவதற்கும், கடன்களை திரும்பச் செலுத்துவதற்கும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு இடையீட்டு கருவியே பணம் ஆகும்.

பணம்

1. பொருள்

பொருட்கள் மற்றும் பணிகளை வாங்குவதற்கும், கடன்களை திரும்பச் செலுத்துவதற்கும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு இடையீட்டு கருவியே பணம் ஆகும். பொது இடையீட்டுக் கருவி என்பது மேற்கண்ட பரிமாணங்களில் அனைவராலும் தயக்கமின்றி பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் ஒன்று ஆகும். உலகநாடுகளில் அண்மைக்காலமாக கடனின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. காசோலைகள், மாற்றுச் சீட்டுகள் போன்ற கடன்கருவிகள் அதற்காக பெருமளவில் பயன்படுத்தப்பட்டுவருகிறது. இருந்தபோதிலும், பணமே அனைத்து கடன்களுக்கான அடிப்படை என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.



2. இலக்கணங்கள்

பணத்திற்கு பல பொருளியல் அறிஞர்கள் இலக்கணம் வகுத்துள்ளனர் அவைகளில் வாக்கர் மற்றும் கிரௌதர் ஆகிய இரு அறிஞர்களின் இலக்கணம் கீழே தரப்பட்டுள்ளது.

“பணம் எதைச் செய்கிறதோ, அதுவே பணம்" ("Money is what money does")

- வாக்கர். 

“பரிவர்த்தனைகளில் பொது ஏற்புத்தன்மை கொண்ட ஒரு இடையீட்டுக்கருவியாகவும், மதிப்பளவை மற்றும் மதிப்பினை இருப்பு வைத்தல் ஆகியவற்றினைச் செய்யும் ஒன்றாகவும் இருப்பது பணம் ஆகும்"

- கிரௌதர்.
Tags : Monetary Economics பணவியல் பொருளியல்.
12th Economics : Chapter 5 : Monetary Economics : Meaning and Definitions of Money Monetary Economics in Tamil : 12th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 5 : பணவியல் பொருளியல் : பணத்தின் பொருள் மற்றும் வரையறைகள் - பணவியல் பொருளியல் : 12 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 5 : பணவியல் பொருளியல்