பணவியல் பொருளியல் - பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் | 12th Economics : Chapter 5 : Monetary Economics
பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
கீன்ஸ் மற்றும் மில்டன் ப்ரீட்மேன் பணவீக்கத்தினை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை கருத்துக்களின் அடிப்படையில் மூன்றாக பிரிக்கலாம் என்கின்றனர். அவைகள்
1) பணவியல் முறைகள்;
2) நிதியியல் முறைகள்; (J.M. கீன்ஸ்); மற்றும்
3) இதர முறைகள்
1. பணவியல் முறைகள்
பணவியல் முறைகள் நாட்டின் மைய வங்கியினால் அமல்படுத்தப்படும் முறையாகும். அவைகள் :
i) வங்கி விகிதத்தை உயர்த்துதல்,
ii) வெளிச்சந்தையில் அரசு பத்திரங்களை விற்றல்,
ii) ரொக்க இருப்பு விகிதத்தை உயர்த்துதல் மற்றும் சட்டபூர்வ நீர்மை விகிதத்தை உயர்த்துதல்,
iv) நுகர்வோர் கடனை கட்டுப்படுத்துதல்,
v) கடன் விளிம்பு நிலையினை உயர்த்துதல்,
vi) மீள் வாங்கல் விகிதம் (Repo Rate) மற்றும் திருப்ப மீள் வாங்கல் விகிதம் (Reverse Repo Rate) ஆகியவற்றினை உயர்த்துதல் ஆகும்.
2. நிதியியல் நடவடிக்கைகள்
பணவீக்க சூழ்நிலையை கட்டுப்படுத்துவதில் நிதிக் கொள்கையும் அதன் கருவிகளும் முக்கிய பங்கு வகிப்பது உணரப்பட்டுள்ளது. பணவீக்கத்திற்கு எதிரான நிதியியல் நடவடிக்கைகளாவன அரசு செலவினங்களை குறைப்பது, பொதுமக்களிடமிருந்து கடன்களை பெறுவது மற்றும் வரிவிதிப்புகளை விரிவாக்குவது.
3. இதர நடவடிக்கைகள்
இதர நடவடிக்கைகள் குறுகியகால நடவடிக்கைகள் மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளன.
i) குறுகியகால நடவடிவக்கைகள்
குறுகியகால நடவடிக்கையாக பொதுவிநியோக முறையின்கீழ் நியாயவிலை கடைகளில் அத்தியாவசிய பொருட்களை பங்கீடு செய்து வழங்குதல் ஆகும். இந்தியாவில் எப்பொழுதெல்லாம் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் பொருட்களை இறக்குமதி செய்து விலையேற்றம் ஏற்படா வண்ணம் தடுக்கப்படுகிறது.
ii) நீண்டகால நடடிவக்கைகள்
நீண்டகால நடவடிக்கையாக பொருளாதார வளா;ச்சியை துரிதப்படுத்துவது, குறிப்பாக பொதுவிலைமட்டத்துடனும் வாழ்க்கைச் செலவுடனும் நேரடி தொடர்பைக் கொண்டிருக்கும் கூலிப் பொருட்களின் உற்பத்தியின் வளர்ச்சியை துரிதப்படுத்துவது ஆகும். நீண்டகால பொருளாதார வளர்ச்சியை அடையும் நோக்கினில் சேமிப்பு முதலீடுகளை மேம்படுத்தும் விதமாக நடப்பிலுள்ள சில நுகர்ச்சிகளை கட்டுப்படுத்துதலும் உள்ளடங்கும்.