பன்னாட்டுப் பொருளியல் - வாணிகம் - பொருள் விளக்கம் | 12th Economics : Chapter 7 : International Economics
வாணிகம் - பொருள் விளக்கம்
வாணிகம் என்பது ஒரு சக்தி வாய்ந்த நாடுகளை இணைக்கும் கருவியாகும். பொருட்கள் மற்றும் பணிகளை மக்கள் தங்களுக்குள் பரிமாறிக் கொள்வதையே வாணிகம் என்கிறோம்.
வாணிகத்தை,
அ) உள்நாட்டு வாணிகம்
ஆ) பன்னாட்டு வாணிகம் என இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம்.
1. உள்நாட்டு வாணிகம்
பொருட்கள் மற்றும் பணிகளை ஒரு நாட்டின் அரசியல் மற்றும் புவி எல்லைகளுக்குள் பரிமாறிக்கொள்வதை உள்நாட்டு வாணிகம் எனலாம். இதனை உள்ளூர் வாணிகம் அல்லது ஒரு நாட்டின் பகுதிகளுக்கிடையிலான வாணிகம்' என்றும் அழைக்கலாம்.
2. பன்னாட்டு வாணிகம்
பொருட்கள் மற்றும் பணிகளை இரு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகள் பரிமாறிக்கொள்வதை பன்னாட்டு வாணிகம் எனலாம். இது நாடுகளின் எல்லைகளை கடந்து நடைபெறும் வாணிகம். இதை வெளிவர்த்தகம், அல்லது 'அயல் வாணிகம்' அல்லது மண்டலங்களுக்கிடையிலான வாணிகம் என்றும் அழைக்கலாம்.
3. உள்நாட்டு வாணிகத்துக்கும் பன்னாட்டு வாணிகத்துக்குமிடையிலான வேறுபாடுகள்
உள்நாட்டு வாணிகம்
1. ஒரு நாட்டிற்குள் மக்கள் மற்றும் நிறுவனங்களுக்கிடையே நடைபெறும் வாணிகம்
2. உழைப்பு மற்றும் மூலதனம் ஒரு நாட்டின் பகுதிகளுக்கிடையே தடையில்லாமல் இடம் பெயர்தல்
3. பொருட்கள் மற்றும் பணிகள் இடம் பெயர்தலில் தடை ஏதுமில்லை
4. விற்றல் வாங்கலில் ஒரே ஒரு பணம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது
5. புவி அமைப்பு மற்றும் கால நிலை சூழல் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும்
6. வாணிகம்மற்றும் நிதி நடைமுறைகள் ஒரே மாதிரியானவை
7. அரசைமைப்பு முறை மக்களின் பழக்க வழக்கங்கள் மற்றும்அரசின் கொள்கைகளில் வேறுபாடில்லை
பன்னாட்டு வாணிகம்
1. பல நாட்டின் மக்கள் மற்றும் நிறுவனங்களுக்கிடையிலான வாணிகம்
2. உழைப்பு மற்றும் மூலதனம் நாடுகளுக்கிடையே இடம் பெயர்தல் தடைகளுக்குட்பட்டது
3. பொருட்கள் மற்றும் பணிகள் இடம் பெயர்தலை சுங்கவரி மற்றும் பங்களவு போன்ற தடைகள் கடினமாக்குகின்றன.
4. பல நாட்டு பணங்கள் பயன்படுத்தப்படுகிறது.
5. புவி அமைப்பு மற்றும் கால நிலை வேறுபடும் இயல்பு கொண்டவை
6. வாணிகம்மற்றும் நிதி நடைமுறைகள் வேறுபடும் போக்குக் கொண்டவை
7. அரசைமைப்பு முறை மக்களின் பழக்க வழக்கங்கள் மற்றும்அரசின் கொள்கைகளில் வேறுபாடுகளிருக்கும்