மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் - பல்கூட்டு அல்லீல்கள் | 12th Zoology : Chapter 4 : Principles of Inheritance and Variation
Posted On : 13.05.2022 05:11 pm
12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 4 : மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள்
பல்கூட்டு அல்லீல்கள்
மெண்டலிய மரபுக் கடத்தலின் படி அனைத்து மரபணுக்களும் இருமாற்று வடிவங்களை கொண்டுள்ளன. அவை ஓங்கிய மற்றும் ஒடுங்கிய அல்லீல்கள் ஆகும்.
பல்கூட்டு அல்லீல்கள் (Multiple Alleles)
மெண்டலிய மரபுக் கடத்தலின் படி அனைத்து மரபணுக்களும் இருமாற்று வடிவங்களை கொண்டுள்ளன. அவை ஓங்கிய மற்றும் ஒடுங்கிய அல்லீல்கள் ஆகும். (எ. கா.) நெட்டை (T) மற்றும் குட்டை (t). இதில் ஓங்கிய அல்லீல்கள் இயல்பானவை மற்றும் ஒடுங்கிய அல்லீல்கள் திடீர்மாற்றம் அடைந்தவை. ஒருமரபணு பலமுறை திடீர்மாற்றமடைந்து பல மாற்று வடிவங்களை உருவாக்குகிறது. ஒரு குறிப்பிட்ட உயிரினத்தின் ஒத்த குரோமோசோம்களின் ஒரே மட்டத்தில், ஒரு குறிப்பிட்ட பண்பை கட்டுப்படுத்துகின்ற மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட அல்லீல்கள் காணப்பட்டால் அவை பல்கூட்டு அல்லீல்கள் என்றும் இவை கடத்தப்படுதல் பல்கூட்டு மரபுக்கடத்தல் (Multiple allelism) என்றும் அழைக்கப்படுகிறது.
Tags : Principles of Inheritance and Variation மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள்.
12th Zoology : Chapter 4 : Principles of Inheritance and Variation : Multiple alleles Principles of Inheritance and Variation in Tamil : 12th Standard
Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer.
12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 4 : மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் : பல்கூட்டு அல்லீல்கள் - மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் : 12 ஆம் வகுப்பு
புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.