Home | 10 ஆம் வகுப்பு | 10வது கணிதம் | பலவுள் தெரிவு வினாக்கள்

அளவியல் : கணக்கு - பலவுள் தெரிவு வினாக்கள் | 10th Mathematics : UNIT 7 : Mensuration

   Posted On :  13.11.2022 08:47 pm

10வது கணக்கு : அலகு 7 : அளவியல்

பலவுள் தெரிவு வினாக்கள்

கணக்கு : அளவியல் : பலவுள் தெரிவு வினாக்கள் விடைகள் / சரியான விடையை தேர்ந்தெடுத்து பதில்களுடன் எழுதுக - கணக்கு புத்தகத்திலுள்ள ஒரு மதிப்பெண் பயிற்சி வினா விடைகள்

பயிற்சி 7.5

பலவுள் தெரிவு வினாக்கள்


1. 15 செ.மீ உயரமும் 16 செ.மீ விட்டமும் கொண்ட ஒரு நேர்வட்டக் கூம்பின் வளைபரப்பு

(அ) 60 π ச.செ.மீ 

(ஆ)68 π ச.செ.மீ 

(இ) 120 π ச.செ.மீ 

(ஈ) 136 π ச.செ.மீ 



2. r அலகுகள் ஆரம் உடைய இரு சம அரைக்கோளங்களின் அடிப்பகுதிகள் இணைக்கப்படும் போது உருவாகும் திண்மத்தின் புறப்பரப்பு 

(அ) 4πr2 ச. அ 

(ஆ) 6πr2 ச. அ 

(இ) 3πr2 ச. அ 

(ஈ) 8πr2 ச. அ



3. ஆரம் 5 செ.மீ மற்றும் சாயுயரம் 13 செ.மீ உடைய நேர்வட்டக் கூம்பின் உயரம் 

(அ) 12 செ.மீ 

(ஆ) 10 செ.மீ 

(இ) 13 செ.மீ

(ஈ) 5 செ.மீ 



4. ஓர் உருளையின் உயரத்தை மாற்றாமல் அதன் ஆரத்தைப் பாதியாகக் கொண்டு புதிய உருளை உருவாக்கப்படுகிறது. புதிய மற்றும் முந்தைய உருளைகளின் கன அளவுகளின் விகிதம் 

(அ) 1:2 

(ஆ) 1:4 

(இ) 1:6

(ஈ) 1:8 



5. ஓர் உருளையின் ஆரம் அதன் உயரத்தில் மூன்றில் ஒரு பங்கு எனில், அதன் மொத்தப் புறப்பரப்பு 


விடை: (இ)



6. ஓர் உள்ளீடற்ற உருளையின் வெளிப்புற மற்றும் உட்புற ஆரங்களின் கூடுதல் 14 செ.மீ மற்றும் அதன் தடிமன் 4 செ.மீ ஆகும். உருளையின் உயரம் 20 செ.மீ எனில், அதனை உருவாக்கப் பயன்பட்ட பொருளின் கன அளவு 

(அ) 5600π க.செ.மீ 

(ஆ) 1120 π க.செ.மீ 

(இ) 56 π க.செ.மீ 

(ஈ) 3600 π க.செ.மீ



7. ஒரு கூம்பின் அடிப்புற ஆரம் மும்மடங்காகவும் உயரம் இரு மடங்காகவும் மாறினால் கன அளவு எத்தனை மடங்காக மாறும்?

(அ) 6 மடங்கு 

(ஆ) 18 மடங்கு 

(இ) 12 மடங்கு 

(ஈ) மாற்றமில்லை 



8. ஓர் அரைக்கோளத்தின் மொத்தப் பரப்பு அதன் ஆரத்தினுடைய வர்க்கத்தின் --------- மடங்காகும். 

(அ) π

(ஆ) 4 π 

(இ) 3 π

(ஈ) 2 π 



9. x செ.மீ ஆரமுள்ள ஒரு திண்மக் கோளம் அதே ஆரமுள்ள ஒரு கூம்பாக மாற்றப்படுகிறது எனில், கூம்பின் உயரம் 

(அ) 3x செ.மீ 

(ஆ) x செ.மீ

(இ) 4x செ.மீ 

(ஈ) 2x செ.மீ 



10. 16 செ.மீ உயரமுள்ள ஒரு நேர்வட்டக் கூம்பின் இடைக்கண்ட ஆரங்கள் 8 செ.மீ மற்றும் 20 செ.மீ எனில், அதன் கன அளவு

(அ) 3328π க. செ.மீ 

(ஆ) 3228π க. செ.மீ 

(இ) 3240π க. செ.மீ 

(ஈ) 3340π க. செ.மீ 



11. கீழ்க்காணும் எந்த இரு உருவங்களை இணைத்தால் ஓர் இறகுபந்தின் வடிவம் கிடைக்கும்.

(அ) உருளை மற்றும் கோளம் 

(ஆ) அரைக்கோளம் மற்றும் கூம்பு

(இ) கோளம் மற்றும் கூம்பு 

(ஈ) கூம்பின் இடைக்கண்டம் மற்றும் அரைக்கோளம்


 

12. r1 அலகுகள் ஆரமுள்ள ஒரு கோளப்பந்து உருக்கப்பட்டு r2 அலகுகள் ஆரமுடைய 8 சமகோள பந்துகளாக ஆக்கப்படுகிறது எனில், r1 : r2 

(அ) 2:1 

(ஆ) 1:2 

(இ) 4:1

(ஈ) 1:4 



13. 1 செ.மீ ஆரமும் 5 செ.மீ உயரமும் கொண்ட ஒரு மர உருளையிலிருந்து அதிகபட்சக் கன அளவு கொண்ட கோளம் வெட்டி எடுக்கப்படுகிறது எனில், அதன் கன அளவு (க. செ.மீ-ல்) 

(அ) 4/3 π

(ஆ) 10/3 π

(இ) π

(ஈ) 20/3 π



14. இடைக்கண்டத்தை ஒரு பகுதியாகக் கொண்ட ஒரு கூம்பின் உயரம் மற்றும் ஆரம் முறையே h1 அலகுகள் மற்றும் r1 அலகுகள் ஆகும். இடைக்கண்டத்தின் உயரம் மற்றும் சிறிய பக்க ஆரம் முறையே h2 அலகுகள் மற்றும் r2 அலகுகள் மற்றும் h2 : h1 = 1 : 2 எனில், r2 : r1 -ன் மதிப்பு 

(அ) 1 : 3 

(ஆ) 1 : 2 

(இ) 2 : 1

(ஈ) 3 : 1 



15. சமமான விட்டம் மற்றும் உயரம் உடைய ஓர் உருளை, ஒரு கூம்பு மற்றும் ஒரு கோளத்தின் கன அளவுகளின் விகிதம் 

(அ) 1:2:3 

(ஆ) 2:1:3 

(இ) 1:3:2

(ஈ) 3:1:2



விடைகள்:



Tags : Mensuration | Mathematics அளவியல் : கணக்கு.
10th Mathematics : UNIT 7 : Mensuration : Multiple choice questions Mensuration | Mathematics in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது கணக்கு : அலகு 7 : அளவியல் : பலவுள் தெரிவு வினாக்கள் - அளவியல் : கணக்கு : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது கணக்கு : அலகு 7 : அளவியல்