ஒலியியல் | அலகு 6 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - இசைக் கருவிகள் | 8th Science : Chapter 6 : Sound
இசைக் கருவிகள்
சில ஒலிகள் செவிக்கு நிறைவு தந்து நம்மை மகிழ்விக்கின்றன. செவிக்கு
மகிழ்ச்சியான உணர்வைத் தரும் ஒலி இசை என்று அழைக்கப்படுகிறது. சீரான அதிர்வுகளால் இசை
உருவாக்கப்படுகிறது. இசைக்கருவிகள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
.• காற்றுக் கருவிகள்
• நாணல் கருவிகள்
• கம்பிக் கருவிகள்
• தாள வாத்தியங்கள்
காற்றுக்
கருவிகள்
ஒரு காற்றுக் கருவியில் வெற்றிடக் குழாயில் ஏற்படும் காற்றின்
அதிர்வுகளால் ஒலி உருவாகிறது. இவற்றில், அதிர்வுறும் காற்றுத் தம்பத்தின் நீளத்தை மாற்றுவதன்
மூலம் அதிர்வெண் மாற்றப்படுகிறது. எக்காளம், புல்லாங்குழல், ஷெஹ்னாய் மற்றும் சாக்ஸபோன்
ஆகியவை நன்கு அறியப்பட்ட சில காற்றுக் கருவிகள் ஆகும்.
நாணல்
கருவிகள்
நாணல் கருவியில் ஒரு நாணல் காணப்படும். ஊதப்படும் காற்றின் காரணமாக
கருவியில் உள்ள நாணல் அதிர்வுக்கு உட்படுகிறது இது குறிப்பிட்ட ஒலியை உருவாக்குகிறது.
நாணல் கருவிகளுக்கு எடுத்துக்காட்டு ஹார்மோனியம் மற்றும் வாயிசைக்கருவி (mouth
organ) ஆகும்.
கம்பிக்
கருவிகள்
கம்பிக் கருவிகளில் அதிர்வுகளை உருவாக்க கம்பி அல்லது இழைகள்
பயன்படுகின்றன. இந்தக் கருவிகளில் அதிர்வுகளை வெற்றிடப் பெருக்கமடையச் பெட்டிகள் காணப்படுகின்றன.
இவை கம்பிகளால் உருவாகும் செய்ய உதவுகின்றன. அதிர்வுறும் கம்பியின் நீளத்தை மாற்றுவதன்
மூலம் ஒலியின் அதிர்வெண் மாற்றப்படுகிறது. வயலின், கித்தார் மற்றும் சித்தார் ஆகியவை
கம்பிக் கருவிகளுக்கு உதாரணமாகும்.
தாள வாத்தியங்கள்
தாள வாத்தியங்கள் தட்டும்போதும், அடிக்கும் போதும், உரசும்போதும் அல்லது மோதும் போதும் ஒரு குறிப்பிட்ட ஒலியை உருவாக்குகின்றன. இவையே மிகப் பழமையான இசைக்கருவிகள் ஆகும். உலகெங்கிலும் பல அற்புதமான தாள வாத்தியங்கள் உள்ளன. மத்தளம் மற்றும் தபேலா போன்ற தாள வாத்தியங்கள் தோலால் ஆன சவ்வைக் கொண்டிருக்கின்றன, அவை (ரெசனேட்டர்) எனப்படும் வெற்றுப் பெட்டியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளன. சவ்வு தட்டப்படும்போது அது அதிர்வடைந்து ஒலியை உருவாக்குகிறது.