Home | 8 ஆம் வகுப்பு | 8வது அறிவியல் | மாணவர் செயல்பாடுகள்

ஒலியியல் | அலகு 6 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - மாணவர் செயல்பாடுகள் | 8th Science : Chapter 6 : Sound

   Posted On :  28.07.2023 03:29 am

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 6 : ஒலியியல்

மாணவர் செயல்பாடுகள்

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 6 : ஒலியியல் : கேள்வி பதில்களுடன் மாணவர் செயல்பாடுகள், தீர்வு

செயல்பாடு 1

ஒரு வெற்றுத் தீப்பெட்டியின் அட்டையை எடுத்து, அதைச் சுற்றி ஒரு நெகிழிப் பட்டையைக் கட்டவும். பின்னர், நீட்டப்பட்ட நெகிழிப் பட்டையை உங்கள் ஆள்காட்டி விரலால் இழுத்து விடவும். நீங்கள் என்ன  உணர்கிறீர்கள்? ஏதேனும் ஒலி கேட்கிறதா?


செயல்பாடு 2

ஒரு உள்ளீடற்ற உலோகப் பாத்திரத்தை எடுத்து, எதையும் தொடாத வகையில் வசதியான இடத்தில் அதைத் தொங்க விடவும். இப்போது, அதை ஒரு குச்சியால் தட்டவும். உங்கள் ஆள்காட்டி விரலால் மெதுவாக பாத்திரத்தைத் தொடவும். அதிர்வுகளை நீங்கள் உணர்கிறீர்களா? குச்சியால் மீண்டும் அதைத் தட்டி, உங்கள் கைகளால் இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் இன்னும் ஒலியைக் கேட்கிறீர்களா?


செயல்பாடு 3

ஒரு உலோகத் தட்டை எடுத்து, அதில் சிறிது தண்ணீர் ஊற்றவும். அதன் விளிம்பில் கரண்டியால் தட்டவும். ஏதேனும் ஒலி கேட்கிறதா? மீண்டும் தட்டைத் தட்டி அதைத் தொடவும். தட்டு அதிர்வுறுவதை நீங்கள் உணர முடிகிறதா? இப்பொழுது நீரின் மேற்பரப்பைப் பாருங்கள். நீரின் மேற்பரப்பில் ஏதேனும் அசைவைக் காண்கிறீர்களா? இப்போது, தட்டைக் கையில் பிடிக்கவும். நீரின் மேற்பரப்பில் என்ன மாற்றத்தை நீங்கள் கவனிக்கிறீர்கள்?


செயல்பாடு 4

ஒரு மணி ஜாடி மற்றும் அலைபேசியை எடுத்துக் கொள்ளவும். அலைபேசியில் இசையை இசைக்கச் செய்து அதை ஜாடியின் உள்ளே வைக்கவும். இப்போது, ஒரு வெற்றிடப் பம்பைப் பயன்படுத்தி மணி ஜாடியிலிருந்து காற்றை வெளியேற்றவும். ஜாடியிலிருந்து மேலும் மேலும் காற்று அகற்றப்படும்போது, அலைபேசியிலிருந்து வரும் ஒலி குறைந்து கொண்டே சென்று, இறுதியில் நின்று விடுகிறது


செயல்பாடு 5

இரண்டு கற்களை எடுத்து அவற்றை ஒன்றோடொன்று தட்டி, அவை உருவாக்கும் ஒலியைக் கேட்கவும். இப்போது கற்களை நீருக்கடியில் வைத்துத் தட்டவும். நீருக்கடியில் கற்களால் உருவாகும் ஒலி மெதுவாகவும், தெளிவின்றியும் இருப்பதை நீங்கள் உணர்வீர்கள்.


செயல்பாடு 6

ஒரு கல்லை நிலையாக உள்ள நீர்ப்பரப்பின்மீது எறியும் போது அது அலைகளை உருவாக்குகிறது, இந்த அலைகள் நீரின் மேற்பரப்பில் வேகமாகப் பரவுகின்றன. மேலும், அவை அனைத்துத் திசைகளிலும் பரவுகின்றன. இதில் நீர்த்துகள்கள் இடம் பெயர்கின்றனவா? சில மரத் துகள்கள் அல்லது இலைகளை அதன்மீது போடுவதன் மூலம் அதனைச் சோதிக்கவும். துகள்கள் இடம்பெயர்வதில்லை. அதற்குப் பதிலாக துகள்கள் மேலும் கீழும் நகர்வதைக் காண முடியும் இதேபோல், ஒலியும் அலை வடிவத்தில் பயணிக்கிறது.


Tags : Sound | Chapter 6 | 8th Science ஒலியியல் | அலகு 6 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 6 : Sound : Student Activities Sound | Chapter 6 | 8th Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 6 : ஒலியியல் : மாணவர் செயல்பாடுகள் - ஒலியியல் | அலகு 6 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 6 : ஒலியியல்