Home | 8 ஆம் வகுப்பு | 8வது அறிவியல் | நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம்

ஒலியியல் | அலகு 6 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம் | 8th Science : Chapter 6 : Sound

   Posted On :  28.07.2023 03:23 am

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 6 : ஒலியியல்

நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம்

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 6 : ஒலியியல் : நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம்

நினைவில் கொள்க

ஒரு ஊடகத்தின் துகள்கள் அதிர்வுறுவதன் மூலம் ஒலி உருவாகிறது.

ஒலி என்பது ஒரு வகை ஆற்றல். அது காற்று அல்லது பிற ஊடகங்கள் வழியே அலை வடிவில் அதிர்வுகளாகக் கடத்தப்படுகிறது.

அலை இயக்கத்தில் ஆற்றல் துகள்கள் இடம் மட்டுமே கடத்தப்படுகிறது. பெயர்வதில்லை.

ஒரு குறுக்கலையின் தொடர்ச்சியான இரண்டு முகடுகள் அல்லது தொடர்ச்சியான இரண்டு அகடுகளுக்கு இடையிலான தூரம் அதன் அலைநீளம் என வரையறுக்கப்படுகிறது.

ஒரு துகள் ஒரு முழு அதிர்வுக்கு ஒரு எடுத்துக்கொள்ளும் காலம் அதிர்வுக் காலம் என அழைக்கப்படுகிறது

ஒரு அலையின் வேகம் என்பது ஒரு வினாடியில் அது பயணிக்கும் தொலைவாகும்.

ஒலியின் அதிர்வெண் அதிகமானால் சுருதியும் அதிகரிக்கும்.

ஈரப்பதம் அதிகரிப்பதன் மூலம் ஒலியின் வேகம் அதிகரிக்கிறது.

ஒழுங்கான மற்றும் சீரான அதிர்வுகளால் இசை உருவாக்கப்படுகிறது.

20 Hz முதல் 20000 Hz வரையிலான அதிர்வெண் கொண்ட ஒலி சோனிக் ஒலி அல்லது கேட்கக்கூடிய ஒலி என்று அழைக்கப்படுகிறது.

20 Hz ஐ விடக் குறைவான அதிர்வெண் கொண்ட ஒலி குற்றொலி அல்லது இன்ஃப்ராசோனிக் ஒலி என்று அழைக்கப்படுகிறது.

20000 Hz ஐ விட அதிக அதிர்வெண் கொண்ட ஒலி மீயொலி என அழைக்கப்படுகிறது.

 

சொற்களஞ்சியம்

அலை வீச்சு ஒலி அலையின் பெரும இடப்பெயர்ச்சி.

எதிரொலி ஒலியின் பிரதிபலிப்பு.

சுருதி ஒரு தளர்வான ஒலி மற்றும் கீச்சிடும் ஒலியை வேறுபடுத்தி அறிய உதவும் பண்பு.

ஒலி அலை துகள்களின் உயர் மற்றும் குறைந்த அழுத்தப்பகுதி அல்லது அதிர்வுகள் நகரும் முறை.

ஒலியின் வேகம் ஒரு பொருளின் வழியாக ஒலி செல்லும் வேகம்.

அதிர்வு ஒரு துகளின் முன் பின் இயக்கம்.

அலைநீளம் ஒலி அலைகளின் அடுத்தடுத்த இறுக்கங்களுக்கு இடையிலான நீளம்.



பிற நூல்கள்

1. The everyday physics of hearing and vision – By Bejamin de Mayo

2. Vibration and Waves – By Anthony French


இணைய வளஙகள்

1. www.pbslearningmedia.org

2. www.scholastic.com


இணையச் செயல்பாடு

ஒலி

எளிதில் கிடைக்கும் பொருட்களிலிருந்து அறிவியல் கருவிகளைத் தயாரித்து அதிலிருந்து ஒலி எழுப்பி மகிழ்க.

படி 1 கீழ்க்காணும் உரலி / விரைவுக்குறியைப் பயன்படுத்தி இணையப் பக்கத்திற்குச் செல்க. கீழ்க்காணும் உரலி/விரைவுக்குறியீட்டைப் பயன்படுத்தி இச்செயல்பட்டிற்கான இணையப் பக்கத்திற்குச் செல்க.

படி 2 Toys from Trash என்னும் முகப்புப் பக்கம் தோன்றும். அதன் கீழே பல எளிய ஒலி எழுப்பும் கருவிகள் செய்தலின் தலைப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும்.

படி 3 திரையில் இருக்கும் படவுருவைச் சொடுக்கினால் எளிய ஒலி உருவாக்கும் கருவிகளின் செய்முறைகள் கொடுக்கப்பட்டிக்கும். அதைப் பார்த்து கருவிகள் செய்து பல்வேறு ஒலிகளை எழுப்பி மகிழ்ந்திடுக.

உரலி: http://www.arvindguptatoys.com/simple-sounds.php

Tags : Sound | Chapter 6 | 8th Science ஒலியியல் | அலகு 6 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 6 : Sound : Points to Remember, Glossary, Concept Map Sound | Chapter 6 | 8th Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 6 : ஒலியியல் : நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம் - ஒலியியல் | அலகு 6 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 6 : ஒலியியல்