தாவர உலகம் | அலகு 17 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - மாணவர் செயல்பாடுகள் | 8th Science : Chapter 17 : Plant Kingdom
செயல்பாடு 1
ஒரு துண்டு ரொட்டியை எடுத்து அதன்மேல் சிறிது நீர் தெளித்து, ஒரு மூடிய பாத்திரத்தில் நான்கு நாட்கள் வைக்கவும். பின்பு ஒரு சிறிய துண்டை நழுவத்தின் மீது வைத்து நுண்ணோக்கியால் உற்றுநோக்கவும். அதில் என்ன காண்பாய்? நீ காணும் உயிரினத்தின் பெயரைக் குறிப்பிடு.
செயல்பாடு 2
உனது வீட்டுக்கு அருகில் உள்ள நாற்றங்கால் பண்ணைக்குச் சென்று தோட்டக்கலையில் ஸ்பாக்னம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பார்த்து, குறிப்பெழுதுக.
செயல்பாடு 3
உனது வீட்டிற்கு அருகில் உள்ள பூக்கும் தாவரங்களைக் விதையிலைத் விதையிலைத் கண்டறிந்து அவை ஒரு தாவரமா அல்லது இரு தாவரமா என்பதை அதன் வேரின் அடிப்படையிலும், இலை நரம்பமைவின் அடிப்படையிலும் வகைப்படுத்துக.
செயல்பாடு 4
உனது பள்ளி வளாகத்தினுள் வளரும் தாவரங்களைச் சேகரிக்கவும். அவற்றின் வட்டாரப் பெயர், தாவரவியல் பெயர் மற்றும் அது ஒரு வித்திலைத் தாவரமா அல்லது இரு வித்திலைத் தாவரமா என்பதை அட்டவணைப்படுத்துக.
பூஞ்சைகளைப்
பற்றிய பாடப்பிரிவு மைக்காலஜி எனப்படும்.
தகவல் துளிகள்
R.H.விட்டேக்கரின்
ஐந்து உலக வகைப்பாட்டில் பூஞ்சைகள் மூன்றாவது உலகமாக இடம் பெற்றுள்ளன. ஏனெனில், இவற்றில்
பச்சையம் மற்றும் ஸ்டார்ச் இல்லை.
மேலும் அறிந்து கொள்வோம்
கிளாவிசெப்ஸ் பர்பூரியா என்ற பூஞ்சையானது மாயத்தோற்றப் பூஞ்சை எனப்படுகிறது. இது கனவுலகில் மிதப்பது போன்ற ஒரு வித்தியாசமான மனநிலையை இளைஞர்களிடத்தில் ஏற்படுத்தி அவர்களைப் பாதிப்படையச் செய்கிறது.
அஸ்பர்ஜில்லஸ் என்ற பூஞ்சையானது குழந்தைகளிடம் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.
ஆனால், கிளாடோஸ்போரியம் என்ற பூஞ்சையானது ஒவ்வாமையிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.
மேலும் தெரிந்து கொள்க
லைக்கோபோடியம்,
கிளப் மாஸ் எனப்படுகிறது. ஈக்விசிட்டம் குதிரை வால் எனப்படுகிறது.
தாவரங்களைச் சேகரித்து, உலர்த்தி, அழுத்தி, ஒரு அட்டையின் மீது ஒட்டி, ஏற்றுக்கொள்ளப்பட்ட எதாவது ஒரு வகைப்பாட்டின்படி வரிசைபடுத்தும் முறை ஹெர்பேரியம் எனப்படும்.
இந்தியாவிலுள்ள
மிகப் பெரிய உள்ளளுக்கும் உலர் தாவரத் தொகுப்பு (Herbarium) கொல்கத்தாவில் உள்ளது.
இங்கு பத்து இலட்சத்திற்கும் அதிகமான உலர் தாவர மாதிரிகள் (Herbarium) உள்ளன.
தகவல் துளிகள்
இருசொற்பெயரிடுமுறை
தொடர்பான விதிமுறைகள் மற்றும் பரிந்துரைகள் ICBN (அகில உலக தாவரவியல் பெயர் சூட்டும்
சட்டம்) அமைப்பில் உள்ளது, தற்போது இது ICN (அகில உலக பெயர் சூட்டும் சட்டம்) என அழைக்கப்படுகிறது.