Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

வரலாறு - முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் | 10th Social Science : History : Chapter 1 : Outbreak of World War I and Its Aftermath

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 1 : முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

உலக வரலாற்றில் கி.பி. (பொ .ஆ.) 1914ஆம் ஆண்டு ஒரு திருப்பு முனையாகும். 1789ஆம் ஆண்டில் தொடங்கிய அரசியல் சமூக செயல்பாடுகள், 1914இல் வெடித்த முதல் உலகப்போரில் உச்சத்தை அடைந்து இருபதாம் நூற்றாண்டினுடைய போக்கையே தீர்மானித்தன.

முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்



கற்றலின் நோக்கங்கள்

கீழ்க்காண்பனவற்றோடு அறிமுகமாதல்

 ஐரோப்பிய வல்லரசுகளிடையே பகைமையும் மோதல்களும் ஏற்படுவதற்கு இட்டுச் சென்ற காலனியாதிக்கப் போட்டி

 கிழக்கு ஆசியாவில் ஜப்பான் அதிக வலிமை மிகுந்த நாடாகவும் ஆக்கிரமிப்பு செய்யும் தன்மை கொண்ட நாடாகவும் மேலெழுதல்

 காலனியாதிக்கம் ஆப்பிரிக்காவின் மீது தாக்கத்தை ஏற்படுத்துதல்

 முதல் உலகப்போருக்கான காரணங்கள், போரின் போக்கு, விளைவுகள்

 வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையும் அதன் சரத்துக்களும்

 ரஷ்யப் புரட்சிக்கான காரணங்களும் அதன் போக்கும் விளைவுகளும்

 பன்னாட்டுச் சங்கம் உருவாக்கப்படுதலும் அதன் செயல்பாடுகளும் தோல்வியும்


அறிமுகம்

உலக வரலாற்றில் கி.பி. (பொ .ஆ.) 1914ஆம் ஆண்டு ஒரு திருப்பு முனையாகும். 1789ஆம் ஆண்டில் தொடங்கிய அரசியல் சமூக செயல்பாடுகள், 1914இல் வெடித்த முதல் உலகப்போரில் உச்சத்தை அடைந்து இருபதாம் நூற்றாண்டினுடைய போக்கையே தீர்மானித்தன. ஆகையால் வரலாற்றாசிரியர்கள் இதனை, நீண்ட பத்தொன்பதாம் நூற்றாண்டு என அழைத்தனர். இப்போரே ஒட்டுமொத்த உலகின் செல்வாதாரங்களின் மீது தொடுக்கப்பட்ட முதல் தொழிற்சாலைகள் சார்ந்த போராகும். மேலும் இப்போர் குடிமக்களின் பெரும்பகுதியினரைப் பாதித்தப் போராகும். இப்போரால் உலக அரசியல் வரைபடம் மீண்டும் வரையப்பட்டது. போரின் முடிவில் மூன்று பேரரசுகள் சிதறுண்டு கிடந்தன. அவை ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, உதுமானியப் பேரரசு ஆகியனவாகும். இப்போரின் மிகப்பெரும் விளைவு ரஷ்யப் புரட்சியாகும். அது உலக வரலாற்றில் தனித்துவம் பெற்றதும், அது போன்ற புரட்சிகளில் முதலாவதும் ஆகும். முதன்முறையாக உலக நாடுகள் பன்னாட்டுச் சங்கத்தின் மூலமாக உலக அமைதியை ஏற்படுத்த முயன்றன.

இப்பாடத்தில் நாம், முதல் உலகப்போர் வெடிப்பதற்கு இட்டுச்சென்ற சூழல்கள் குறித்தும், ரஷ்யப் புரட்சி, பன்னாட்டுச் சங்கம் எனப்பட்ட பன்னாட்டு அமைதி நிறுவனம் உருவாக்கப்பட்டது குறித்தும் அதன் விளைவுகள் பற்றியும் விவாதிப்போம்.


Tags : History வரலாறு.
10th Social Science : History : Chapter 1 : Outbreak of World War I and Its Aftermath : Outbreak of World War I and Its Aftermath History in Tamil : 10th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 1 : முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் : முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் - வரலாறு : 10 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 1 : முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்