அலகு 4 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - மக்களின் புரட்சி | 8th Social Science : History : Chapter 4 : People’s Revolt
அலகு - 4
மக்களின் புரட்சி
கற்றலின் நோக்கங்கள்
>தமிழ்நாட்டில் பாளையக்காரர் முறை பற்றி அறிதல்
>ஆங்கிலேயர்களுக்கெதிராக நடைபெற்ற புரட்சியில் பூலித்தேவர் மற்றும்
கட்டபொம்மனின் பங்கினைப் பற்றி புரிந்துகொள்ளுதல்
>தென்னிந்திய புரட்சி பற்றி தெரிந்துகொள்ளுதல்
>வேலூர் புரட்சியின் காரணங்கள் மற்றும் விளைவுகளைப் பற்றி அறிதல்
>1857ஆம் ஆண்டு புரட்சியின் காரணங்கள் மற்றும் விளைவுகளைப் புரிந்துகொள்ளுதல்
அறிமுகம்
1857ஆம்
ஆண்டு பிளாசிப் போருக்குப் பின் நாட்டின் அரசியல், சமூக - பொருளாதார நிலையைப் பாதிக்கும்
வகையில் ஆங்கிலேயரால் நாட்டின் பல பகுதிகளில் அரசியல் மற்றும் பொருளாதார ஆதிக்கம் ஏற்படுத்தப்பட்டது.
இது பல திறன்மிக்க நிலக்கிழார்கள் மற்றும் தலைவர்களிடையே அதிகார வேறுபாட்டிற்கு வழிகோலியது.
இயற்கையாகவே அவர்களுள் பலர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டனர். ஆங்கிலேயர்கள்
பாளையக்காரர்களிடமிருந்து வருடாந்திர கப்பம் வசூலிக்கும் உரிமை பெற்றிருந்ததாகக் கருதப்படுகிறது.
ஆங்கிலேயர்களுக்கு முதல் எதிர்ப்பு பூலித்தேவரால் ஏற்பட்டது. அவருக்குப்பின் மற்ற பாளையக்காரர்களான
வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது சகோதரர்கள் மற்றும் தீரன் சின்னமலை ஆகியோரும்
ஆங்கிலேயருக்கெதிரான எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.