Home | 8 ஆம் வகுப்பு | 8வது அறிவியல் | நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம்

காற்று | அலகு 11 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம் | 8th Science : Chapter 11 : Air

   Posted On :  09.09.2023 10:54 pm

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 11 : காற்று

நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம்

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 11 : காற்று : நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம்

நினைவில் கொள்க

• ஆக்சிஜன் இயற்கையில் சிலிக்கேட்டுகள், கார்பனேட்டுகள் மற்றும் நீராகக் காணப்படுகிறது. இது தனித்த நிலையில் வளிமண்டலக் காற்றின் ஒரு பகுதியாகவும் உள்ளது.

• ஆக்சிஜன் நிறமற்றது, மணமற்றது மற்றும் நீரில் ஓரளவுக்குக் கரையக்கூடியது. காற்றைவிட அடர்த்தியானது.

• மெக்னீசியம், இரும்பு, சோடியம் போன்ற உலோகங்கள் ஆக்சிஜனுடன் சேர்ந்து எரிந்து கார ஆக்சைடுகளைத் தருகின்றன.

• பாக்டீரியாக்கள் வளிமண்டல நைட்ரஜனை நீரில் நேரடியாக கரையக்கூடிய நைட்ரஜன் சேர்மங்களாக மாற்றுகின்றன.

• சாதாரண சூழ்நிலைகளில் நைட்ரஜன் வினைதிறனற்றதாக இருந்தாலும் உயர் வெப்பநிலை, அழுத்தம் அல்லது வினைவேகமாற்றியின் முன்னிலையில் பல்வேறு தனிமங்களுடன் வினைபுரிகின்றது.

• சாதாரண வளிமண்டல அழுத்தத்தில் கார்பன் டைஆக்சைடு திரவ நிலையில் இருக்க இயலாது. இது இயற்கையில் கார்பனேட்டாக உள்ளது.

• கார்பன் டை ஆக்சைடு அமிலத்தன்மை கொண்டது. மேலும், தெளிந்த சுண்ணாம்பு நீரைப் பால் போல் மாற்றக் கூடியது.

• கார்பன் டை ஆக்சைடு தீயணைக்கும் கருவிகளில் பயன்படுகிறது.

• உலக வெப்பமயமாதல் என்பது வளிமண்டலத்தின் சராசரி வெப்பநிலை உயர்வதைக் குறிக்கிறது அல்லது பூமி வெப்பமடைவதைக் குறிக்கிறது.

• கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, குளோரோபுளூரோகார்பன் ஆகியவை பசுமை இல்ல வாயுக்கள் ஆகும்.

 

சொல்லடைவு

வளிமண்டலம் பூமியைச் சுற்றியுள்ள வாயுக்களால் ஆன கவசம்.

நைட்ரஜன் நிலைநிறுத்தம் வளிமண்டல நைட்ரஜனை நைட்ரஜன் சேர்மங்களாக மாற்றும் முறை

உலகவெப்பமயமாதல்  வளிமண்டல வெப்பநிலையில் ஏற்படும் சராசரி உயர்வு.

பசுமை இல்ல விளைவு பசுமை இல்ல வாயுக்களால் சூரிய வெப்பம் கவரப்படுவதால் ஏற்படும் பூமியின் வெப்பநிலை உயர்வு.

ஹேபர் முறை நைட்ரஜன் மற்றும் ஹைட்ரஜனைக் கொண்டு 500 வளிமண்ட அழுத்தத்திலும் 550°C வெப்பநிலையிலும் வினையூக்கியுடன் செயற்கை முறையில் அம்மோனியாவைத் தயாரிக்கும் முறை.

ஆக்சிஜென்ஸ் அமில உருவாக்கி என்பதற்கான கிரேக்கச் சொல். இதிலிருந்துதான் ஆக்சிஜன் என்ற சொல் உருவானது.

சோடா நீர் அழுத்தத்தைப் பயன்படுத்தி கார்பன் டைஆக்சைடை நீரில் கரைத்து உருவாக்கப்படும் நீர்.

பதங்கமாதல் திடப்பொருளை வெப்பப்படுத்தி திரவ நிலைக்குச் செல்லாமல் நேரடியாக வாயு நிலைக்கு மாற்றும் முறை


பிறநூல்கள்

1. Environmental Science - Timothy O Riordan Second edition

2. Basic of atmospheric science - A. chandrasekar

3. Text book of Air pollution and its control - S.C.Bhatia

இணைய வளங்கள்

1. www.chemicool.com

2. www.nationgeographic.com

3. www.environmentalpollutioncenters.org



 

இணையச் செயல்பாடு

காற்று

இச்செயல்பாடுகள் மூலம் கரிஉமிழ்தல்,பருவமாற்றம், புவி வெப்பமடைதல் குறித்து அறியலாம்.

படி 1 கீழ்க்காணும் உரலி / விரைவுக்குறியைப் பயன்படுத்தி இணையப் பக்கத்திற்குச் செல்க.

படி 2 திரையில் தோன்றும் பக்கத்தில் தேவையானவற்றைத் தேர்வு செய்யவும்.

படி 3 எ.கா. "Climate Time Machine" என்பதை தேர்வு செய்வதன் மூலம் கரிம வெளிப்பாடு, கடல் மட்டம், வெப்பமடைதல் போன்றவற்றை அறியலாம்.

படி 4 "Global average sea level" என்பதனை சொடுக்குவதன் மூலம் ஆண்டுவாரியான கடல் மட்டத்தை அறியலாம்.

உரலி: https://climatekids.nasa.gov/menu/play/

Tags : Air | Chapter 11 | 8th Science காற்று | அலகு 11 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 11 : Air : Points to Remember, Glossary, Concept Map Air | Chapter 11 | 8th Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 11 : காற்று : நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம் - காற்று | அலகு 11 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 11 : காற்று