காற்று | அலகு 11 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - வினா விடை | 8th Science : Chapter 11 : Air

   Posted On :  09.09.2023 10:52 pm

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 11 : காற்று

வினா விடை

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 11 : காற்று : புத்தக வினாக்கள், கேள்வி பதில்கள்

மதிப்பீடு

 

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

 

1. கீழ்க்கண்டவற்றுள் ஆக்சிஜனைப் பற்றிய சரியான கூற்று எது?

அ) முழுமையாக எரியும் வாயு

ஆ) பகுதியளவு எரியும் வாயு

இ) எரிதலுக்குத் துணைபுரியாத வாயு

ஈ) எரிதலுக்குத் துணைபுரியும் வாயு

விடை: ஈ) எரிதலுக்குத் துணைபுரியும் வாயு

 

2. காற்றேற்றம் செய்யப்பட்ட நீரில் உள்ளது.

அ) காற்று

ஆ) ஆக்சிஜன்

இ) கார்பன் டைஆக்சைடு

ஈ) நைட்ரஜன்

விடை: இ) கார்பன் டைஆக்சைடு

 

3. சால்வே முறை ----------- உற்பத்தி செய்ய பயன்படுகிறது.

அ) சுண்ணாம்பு நீர்

ஆ) காற்றேற்றம் செய்யப்பட்ட நீர்

இ) வாலை வடி நீர்

ஈ) சோடியம் கார்பனேட்

விடை: ஈ) சோடியம் கார்பனேட்

 

4. கார்பன் டைஆக்சைடு நீருடன் சேர்ந்து --------------- மாற்றுகிறது.

அ) நீலலிட்மசை சிவப்பாக

ஆ) சிவப்பு லிட்மசை நீலமாக

இ) நீல லிட்மசை மஞ்சளாக

ஈ) லிட்மசுடன் வினைபுரிவதில்லை

விடை: அ) நீலலிட்மசை சிவப்பாக

 

5 அசோட் எனப்படுவது எது?

அ) ஆக்சிஜன்

ஆ) நைட்ரஜன்

இ) சல்பர்

ஈ) கார்பன் டைஆக்சைடு

விடை: ஆ) நைட்ரஜன்

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

 

1. ஆக்சிஜன்  அத்தியாவசியமான உயிர் எனப்படுகிறது.

2. நைட்ரஜன் காற்றை விட இலேசானது

3. அம்மோனியா உரமாகப் பயன்படுகிறது.

4. உலர்பனி குளிரூட்டி ஆகப் பயன்படுகிறது.

5. இரும்பை நீரேறிய இரும்பு ஆக்சைடாக மாற்றும் நிகழ்வு துருப்பிடித்தல் எனப்படும்.

 

III. பொருத்துக.

 

நைட்ரஜன் உயிரினங்களின் சுவாசித்தல்

ஆக்சிஜன் உரம்

கார்பன் டை ஆக்சைடு குளிர்பதனப் பெட்டி

உலர்பனி தீயணைப்பான்

 

விடைகள்

நைட்ரஜன் - உரம்

ஆக்சிஜன் - உயிரினங்களின் சுவாசித்தல்

கார்பன் டை ஆக்சைடு - தீயணைப்பான்

உலர்பனி - குளிர்பதனப் பெட்டி

 

IV. சுருக்கமாக விடையளி

 

1. ஆக்சிஜனின் இயற்பியல் பண்புகள் சிலவற்றை எழுதுக.

> வளிமண்டலம்

> நீர்

 > தாவரங்கள் மற்றும் விலங்குகள்

> சிலிக்கேட்டுகள், கார்பனேட்டுகள் மற்றும் ஆக்சைடுகள் ஆகியவடிவிலுள்ள தாதுக்கள்

 

2. ஆக்சிஜனின் இயற்பண்புகள் யாவை?

1. நிறமற்ற, மணமற்ற, சுவையற்ற வாயு.

2. வெப்பத்தையும், மின்சாரத்தையும் கடத்தாது.

3. குளிர்ந்த நீரில் உடனடியாகக் கரையும்.

4. காற்றை விட கனமானது.

5. அதிக அழுத்தம் மற்றும் குறைந்த வெப்பநிலையில் திரவமாகிறது.

6. எரிதலுக்கு துணைபுரிகிறது.


3. நைட்ரஜனின் பயன்கள் யாவை?

1. திரவ நைட்ரஜன் குளிர்சாதனப் பெட்டிகளில் பயன்படுகிறது.

2. சில வேதிவினைகள் நிகழத் தேவையான மந்தத் தன்மையை ஏற்படுத்த பயன்படுகிறது.


3. ஹேபர் முறையில் அம்மோனியா தயாரிக்க பயன்படுகிறது.

4. அம்மோனியா, உரங்கள் மற்றும் நைட்ரிக் அமிலம் தயாரிக்க பயன்படுகிறது.

5. வாகனங்களின் டயர்களில் நிரப்பப் பயன்படுகிறது.

6. வெப்பநிலைமானிகளிலுள்ள பாதரசம் ஆவியாகாமல் தடுக்க பாதரசத்திற்கு மேலுள்ள வெற்றிடத்தை நிரப்பப் பயன்படுகிறது.

7. வெடிபொருள்கள் TNT, நைட்ரோகிளிசரின் மற்றும் துப்பாக்கி வெடிமருந்து தயாரிக்க பயன்படுகிறது.

8. உணவுப்பொருள்களைப் பதப்படுத்துதல், துருப்பிடிக்காத இரும்பு தயாரித்தல், தீ விபத்து சார்ந்த பேராபத்துகளைக் குறைத்தல், வெப்பத்தினால் ஒளிரும் விளக்குகள் போன்றவற்றில் பயன்படுகிறது.

 

4. அலோகங்களுடன் நைட்ரஜனின் வினையை எழுதுக

ஹைட்ரஜன், ஆக்சிஜன் போன்ற அலோகங்களுடன் அதிக வெப்பநிலையில் வினைபுரிந்து, நைட்ரஜன் சேர்மங்களைத் தருகிறது.


 

5. உலக வெப்பமயமாதல் என்றால் என்ன?

> கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு, மீத்தேன், CFC போன்ற பசுமை இல்ல வாயுக்களின் அளவு தொடர்ந்து வளிமண்டலத்தில் அதிகரிப்பதால் பூமியின் மேற்பரப்பு வெப்பநிலை தொடர்ந்து உயர்கிறது.

> இதனால் புவியின் வாயு மண்டல வெப்பநிலை சராசரியாக உயர்ந்து கொண்டே வருகிறது.

> இது உலக வெப்பமயமாதல் எனப்படும்.

 

6. உலர்பனி என்பது என்ன? அதன் பயன்களை எழுதுக.

திட கார்பன் டை ஆக்சைடு உலர் பனிக்கட்டி எனப்படும்.

> இது குளிர்பதனப் பெட்டிகளில் குளிரூட்டியாக பயன்படுகிறது.

> மேடை நிகழ்ச்சிகளிலும், சினிமாக் காட்சிகளிலும் வெண்ணிற புகைமூட்டம் போன்ற தோற்றத்தினை உருவாக்க பயன்படுகிறது.

 

V. விரிவாக விடையளி.

 

1. தெளிந்த சுண்ணாம்பு நீரின் வழியே கார்பன் டைஆக்சைடு வாயுவைச் செலுத்தும் பொழுது என்ன நிகழ்கிறது? அதற்கான சமன்பாட்டைத் தருக.

> சுண்ணாம்பு நீரில் கார்பன் டை ஆக்சைடை செலுத்தும்போது கரையாத கால்சியம் கார்பனேட் உருவாகிறது.

> இதனால் கரைசல் பால் போல் மாறுகிறது.

 Ca(OH)2 + CO2 — CaCO3+ + H2O

   கால்சியம் கார்பனேட்

> அதிகளவு கார்பன் டை ஆக்சைடை, சுண்ணாம்பு நீரில் செலுத்தும்போது முதலில் பால் போன்ற நிறம் தோன்றி பின்னர் அது மறைகிறது.

> கரையக் கூடிய கால்சியம் ஹைட்ரஜன் கார்பனேட் Ca(HCO,), உருவாவதே இதற்கு காரணம்.

 

2. கீழ்க்கண்ட சேர்மங்கள் ஆக்சிஜனுடன் எரியும் போது உருவாகும் பொருட்களை எழுதுக.

அ) கார்பன்

ஆ) சல்பர்

இ) பாஸ்பரஸ்

ஈ) மெக்னீசியம்

உ) இரும்பு

ஊ) சோடியம்

அ) கார்பன் டை ஆக்சைடு (CO2)

ஆ) சல்பர் டை ஆக்சைடு (SO2,)

இ) பாஸ்பரஸ் டிரைஆக்சைடு (P2O3) (அல்லது) பாஸ்பரஸ் பென்டாக்சைடு (P2OS)

ஈ) மெக்னீசியம் ஆக்சைடு (MgO)

உ) இரும்பு ஆக்சைடு (Fe3O4)

ஊ) சோடியம் ஆக்சைடு (Na2O)

 

3. கீழ்க்காண்பவற்றுடன் கார்பன் டை ஆக்சைடு எவ்வாறு வினைபுரிகிறது?

அ) பொட்டாசியம்

ஆ) சுண்ணாம்பு நீர்

இ) சோடியம் ஹைட்ராக்சைடு


 

4. அமில மழையின் விளைவுகள் யாவை? அதை எவ்வாறு தடுக்கலாம்?

அமில மழையின் விளைவுகள் :

> மனிதர்களின் கண்களிலும், தோலிலும் எரிச்சலை உண்டாக்குகிறது.

'> விதை முளைத்தலையும், வளர்தலையும் தடை செய்கிறது.

> மண்ணின் வளத்தை மாற்றுகிறது.

> தாவரங்களையும் , நீர்வாழ் உயிரினங்களையும் அழிக்கிறது.

> கட்டடங்கள் மற்றும் பாலங்களின் அரிப்பிற்கு காரணமாகிறது.

அமில மழையை தடுக்கும் வழிமுறைகள்:

> பெட்ரோல், டீசல் போன்ற படிம எரிபொருள்களின் பயன்பாட்டைக் குறைத்தல்.'

> அழுத்தப்பட்ட இயற்கை வாயுவைப் பயன்படுத்துதல்.

> மாற்று எரிபொருளைப் பயன்படுத்துதல்.

> தொழிற்சாலைக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் வெளியேற்றுதல்.

 

VI. உயர் சிந்தனை வினாக்கள்

 

1. கோடைக்காலங்களில் சில நேரங்களில் சோடா பாட்டில்களைத் திறக்கும்பொழுது அவை வெடிப்பது ஏன்?

> கோடைக்காலங்களில் வெப்பநிலை அதிகம்.

> அதிக வெப்பநிலையில் சோடாவில் கரைந்துள்ள கார்பன் டை ஆக்சைடு வாயு அதிகமாக கரைசலை விட்டு வெளியேறும்.

> இதனால் மூடியுள்ள சோடா பாட்டிலின் உள்ளே அழுத்தம் அதிகரிக்கும்.

> எனவே கோடைக்காலங்களில் சில நேரங்களில் சோடா பாட்டில்களைத் திறக்கும் பொழுது அவை வெடிக்கின்றன.

 

2. இரவு நேரங்களில் மரங்களின் அடியில் படுத்து உறங்குவது ஆரோக்கியத்திற்குக் கேடு எனப்படுகிறது. இதன் காரணம் என்ன?

> இரவுநேரங்களில் மரங்களின் இலைகள் கார்பன்டை ஆக்சைடுவாயுவை வெளியிடுகின்றன.

> எனவே இரவு நேரங்களில் மரங்களின் அடியில் படுத்து உறங்கும்போது சுவாசிக்க தேவையான அளவு ஆக்சிஜன் கிடைக்காமல் போகலாம்.

> இதனால் மூச்சுத்திணறல் போன்ற சுவாச கோளாறுகள் ஏற்படலாம்.

 

3. மீனை நீரிலிருந்து வெளியே எடுத்தவுடன் இறந்து விடுகிறது. ஏன்?

> மீனின் வாய் வழியே நீர் நுழைந்து செவுள்கள் வழியாக வெளியேறும் போது, மீனின் செவுள்கள் நீரில் கரைந்துள்ள ஆக்சிஜனை எடுத்துக்கொண்டு கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுகிறது.

> இம்முறையில் மீன்கள் நீரினுள் சுவாசிக்கின்றன.

> மீனை நீரிலிருந்து வெளியே எடுத்தவுடன், ஆக்சிஜன் பெறுவது நிறுத்தப்படுகிறது. ஏனெனில்

காற்றில் உள்ள ஆக்சிஜனை மீனின் செவுள்களால் பிரிக்க இயலாது.

> எனவே அவை இறந்து விடுகின்றன.

 

4. பூமியின் வளிமண்டலத்திற்கு அப்பால் செல்லும் விண்வெளி வீரர்கள் எவ்வாறு சுவாசிக்கின்றனர்?

> பூமியின் வளிமண்டலத்திற்கு அப்பால் விண்வெளியில் காற்று இல்லை.

> எனவே விண்வெளிக்கு செல்லும் விண்வெளி வீரர்கள் சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜனை, ஆக்சிஜன் உருளைகளில் எடுத்துச் செல்கின்றனர்

Tags : Air | Chapter 11 | 8th Science காற்று | அலகு 11 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 11 : Air : Questions Answers Air | Chapter 11 | 8th Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 11 : காற்று : வினா விடை - காற்று | அலகு 11 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 11 : காற்று