மின்னோட்டவியல் | இரண்டாம் பருவம் அலகு 2 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - நினைவில் கொள்க | 7th Science : Term 2 Unit 2 : Electricity
நினைவில் கொள்க
❖ மின்னூட்டங்களின் ஓட்டமே மின்னோட்டம் ஆகும், ஓரலகு நேரத்தில் பொருளின் குறுக்குப் பரப்பு வழியே செல்லும் மின்னூட்டத்தின் அளவே மின்னோட்டம் என வரையறுக்கப்படுகிறது.
❖ மரபு மின்னோட்டத்தின் திசையானது எலக்ட்ரான் ஓட்ட திசைக்கு எதிர் திசையில் அமையும்.
❖ ஓர் குறிப்பிட்ட பரப்பு வழியே ஒரு வினாடி நேரத்தில் ஒரு கூலும் மின்னூட்டம் பாய்ந்தால் பாயும் மின்னோட்டத்தின் அளவு ஓரு ஆம்பியர் ஆகும்.
❖ நேரடியாகவோ அல்லது எளிதாகவோ மின்சாரம் அளிக்க இயலாத வெவ்வேறான சாதனங்களுக்கு எளிதில் மின் ஆற்றல் அளிக்க வல்ல மின்சாதனமே மின்கலன் எனப்படும்.
❖ லெக்லாஞ்சி மின்கலனின் எளிதில் எடுத்துச் செல்லத்தக்கதுமான ஓர் வடிவமே உலர் மின்கலனாகும்.
❖ வேதிவினைகள் மூலம் மின்சுற்றில் எலக்ட்ரான்களின் ஓட்டத்தை ஏற்படுத்தும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மின்கலன்களின் தொகுப்பே மின்கலஅடுக்கு ஆகும்.
❖ மின்கலம் - என்பது வேதியாற்றலை மின்னாற்றலாக மாற்றும் ஓர் எளிய மின்வேதிக்கலனே ஓர் மின்கலனாகும்.
❖ அம்மீட்டர் - பாயும் மின்னோட்டத்தை ஆம்பியரில் அளவிடும் கருவியே அம்மீட்டர் ஆகும், சோதிக்கப்பட வேண்டிய மின் சுற்றில் அம்மீட்டரானது தொடர் இணைப்பில் இணைக்கப்படவேண்டும்.
❖ ஆம்பியர் (A) - ஓரு விநாடி நேரத்தில் ஒரு கூலூம் மின்னோட்டம் பாயும் வீதமே ஒரு ஆம்பியர் என வரையறுக்கப்படுகிறது.
❖ மின்சுற்று மின்னழுத்த மூலம் அல்லது மின்மூலத்தில் இருந்து எலக்ட்ரான்கள் பாயும் மூடப்பட்ட பாதையே மின்சுற்று ஆகும்.
❖ ஓர் கடத்தியின் வழியே பாயும் மின்னூட்டத்தின் அளவே மின்னோட்டமாகும்.
❖ பாதுகாப்பு நிலைக்கு மேல் பாயும் மின்னோட்டத்தை உருகி துண்டிக்கும் கம்பித் துண்டை கொண்ட ஓர் தடையாக்கும் சாதனமே உருகு இழை ஆகும்.
❖ கடத்திகள் தன் வழியே மின்னோட்டத்தை நன்கு செல்ல அனுமதிக்கும் பொருள் கடத்திகள் எனப்படும்.
❖ தன் வழியே மின்னோட்டத்தை செல்ல அனுமதிக்காத பொருள் மின்கடத்தாப் பொருள் அல்லது காப்பான்கள் எனப்படும்.
❖ பக்க இணைப்பு - மின்னோட்டம் பாய்வதற்கான பல்வேறு பாதைகளைக் கொண்ட ஓர் மின் சுற்று பக்க இணைப்பு எனப்படும்.
❖ தொடர் சுற்று - மின்னோட்ட பாய்வதற்கான ஒரே ஒரு பாதையைக் கொண்ட ஓர் மின் சுற்று தொடர் இணைப்பு எனப்படும்.
❖ குறுக்குச் சுற்று - ஓர் மின்சுற்றில் மின் சுற்றின் ஒரு பகுதியானது அதே மின்சுற்றின் மற்றொரு பகுதியுடன் தொடர்பு கொண்டு ஒரு குறிப்பிட்ட பாதையில் செல்லும் மின்னோட்டத்தின் திசையை மாற்றுமாயின் அச்சுற்று குறுக்குச் சுற்று எனப்படும்.
❖ ஓரலகு கூலூம் என்பது தோராயமாக 6.242 × 1018 புரோட்டான்கள் அல்லது எலக்ட்ரான்களுக்கு சமம்.
❖ இரு புள்ளிக்கு இடையேயான மின்னமுத்த வேறுபாடு என்பது ஓரலகு மின்னூட்டத்தை ஒரு புள்ளியில் இருந்து மற்றொரு புள்ளிக்கு கொண்டு வர தேவையான ஆற்றலாகும்.
❖ ஒரு பொருளின் மின்கடத்துத் திறன் அல்லது தன் மின்கடத்துத் திறன் என்பது அப்பொருள் மின்னோட்டம் கடத்தும் தன்மையின் அளவு ஆகும்.
❖ தன் வழியே பாயும் மின்னோட்டத்தை எதிர்க்கும் பொருளின் வலிமையை அளவிட்டுக் கூறும் பண்பே மின்தடையாகும்.
❖ குறைவான மின்சாரத்தை குறைந்த கால அளவிற்கு உருவாக்கும் மூலங்கள் மின்மூலங்கள் அல்லது மின் வேதிமூலங்கள் எனப்படும்.
❖ கரைசலில் மின்னோட்டத்தை அளிக்க வல்ல அயனிகளாக மாறும் தன்மை கொண்ட பொருள் மின்பகுளி எனப்படும்.இணையச் செயல்பாடு
மின்னோட்டவியல்
மாணவர்கள் இணையான மற்றும் தொடர் மின்சுற்று குறித்து அறிந்து கொள்வார்கள்
படிநிலைகள்:
படி 1: கீழ்க்காணும் உரலி/விரைவுக்குறியீட்டைப் பயன்படுத்தி இச்செயல்பட்டிற்கானஇணையப் பக்கத்திற்குச் செல்க. ஒரு பக்கம் மின்கலம், சில கம்பி வடம் , இரு மின்சுற்றுகள் மற்றும் இரு மின் விளக்குகளோடு தோன்றும்.
படி 2: மாணவர்கள் கம்பி வடத்தை மின் சுற்று மற்றும் மின்கலத்தோடு இணைத்து பார்ப்பர்.
படி 3: வேறு வேறு வகையில் இணைத்து மாணவர்கள் செய்து பார்க்க வேண்டும்.
மின்னோட்டவியல் உரலி:
* படங்கள் அடையாளத்திற்கு மட்டுமே.
* தேவையெனில் 'Adobe Flash' ஐ அனுமதிக்கவும்.