அணு அமைப்பு | முதல் பருவம் அலகு 4 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - நினைவில் கொள்க | 7th Science : Term 1 Unit 4 : Atomic Structure
நினைவில் கொள்க
❖ ஒரு தனிமத்தின் வேதிப் பண்புகளை தக்க வைத்துக் கொள்ளத்தக்க மிகச் சிறிய துகளே அணுவாகும். பிற துகள்களுடன் ஒப்பிடும்போது அவை அளவில் சிறியவையாகும்.
❖ அணுக்கள் மிகச் சிறியதாக இருப்பதால் வெறும் கண்களால் மட்டுமல்ல நுண்ணோக்கியினாலும் அவற்றினைக் காண இயலாது.
❖ ஓர் அணுவில் பெரும்பான்மையான பகுதி வெற்றிடமாகும்.
❖ ஒரே தனிமத்தின் அனைத்து அணுக்களும் ஒரே மாதிரியாகவும், வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் வெவ்வேறு மாதிரியாகவும் உள்ளன.
❖ ஓர் அணுவில் நேர்மின்சுமை கொண்ட புரோட்டான்களும், மின்சுமையற்ற நியூட்ரான்களும் இணைந்து செறிவான உட்கருவைக் கொண்டிருக்கின்றன.
❖ புரோட்டான்களும் நியூட்ரான்களும் இணைந்து நியூக்ளியான்கள் என அழைக்கப்படுகின்றன.
❖ ஓர் அணுவானது மின்சுமையற்றது. அதாவது நடுநிலைத்தன்மை உடையது. அவை சம் எண்ணிக்கையிலான புரோட்டான்கள் மற்றும் எலக்ட்ரான்களைக் கொண்டுள்ளன.
❖ ஓர் அணுவில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கையே அத்தனிமத்தின் அணு எண்ணாகும்.
❖ ஓர் அணுவில் உள்ள புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் மொத்த எண்ணிக்கையே அத்தனிமத்தின் நிறை எண் எனப்படும்.
❖ ஒரு தனிமம் பிற தனிமங்களுடன் இணையும் திறனே அதன் இணைதிறன் எனப்படும்.
இணையச்செயல்பாடு
அணு அமைப்பு
அணுவை உருவாக்குவோமா!
படிநிலைகள்:
படி 1: கீழ்க்காணும் உரலி/விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி இச்செயல்பட்டிற்கான இணையப் பக்கத்திற்குச் செல்க. 'play’ பொத்தானை சொடுக்கி செயல்பாட்டினைத் துவங்கவும்
படி 2: "ATOM" என்பதை சொடுக்கிநாள் புதிய சாளரம் திறக்கும். திரையின் கீழே கூடையில் உள்ள துகள்களை (Protons, Neutrons and Electrons) இழுக்கவும்.
படி 3: வலது சாளரத்தில் உள்ள 'Elements, Net charge and Mass number' போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்களை உற்றுநோக்கவும்.
படி 4: கீழே உள்ள "Symbol" என்பதை சொடுக்கவும். துகள்களை இழுத்து தனிமங்களின் குறியீட்டைப் பெறலாம்.
படி 5: "GAME" என்பதனை சொடுக்கி விளையாட்டினைத் தொடங்கவும்.