அணு அமைப்பு | முதல் பருவம் அலகு 4 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - மாணவர் செயல்பாடு | 7th Science : Term 1 Unit 4 : Atomic Structure
ஒரு அணுவானது மனித முடியின் தடிமனைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு சிறியது. அதன் சராசரி விட்டம் 0.000000001மீ. அல்லது 1× 10-9மீ. ஒரு அணுவின் அளவைப் புரிந்துகொள்வதற்கு, நமக்குத் தெரிந்த சில பொருள்களாகிய பென்சில், இரத்த வெள்ளை அணு, வைரஸ் மற்றும் தூசுகளின் அளவு எவ்வளவு என்று நாம் காண்போம்
ஒரு அணு எவ்வளவு சிறியது என்பதை உங்களால் இப்பொழுது கற்பனை செய்து பார்க்க முடியும்.
அணுவின் அமைப்பினைப் பற்றி அநேக அறிவியலாளர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு தங்கள் கொள்கைகளை வெளியிட்டுள்ளனர். டால்டன், தாம்ஸன், ரூதர்போர்டு ஆகியோர் கூறிய கொள்கைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
செயல்பாடு 1
நமக்குத் தெரிந்த சில பொருள்கள் மற்றும் அவற்றின் துகள்களின் படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பொருள்களின் பெயர்களையும் அவை எத்துகள்களால் உருவானவை என்பதனையும் எழுதுக.
1. சுத்தியல் (இரும்பு )
2. வளையல் (தங்கம் )
3. குழாய் (நிக்கல் )
4. கிண்ணம் (தாமிரம் )
அணுவின் பகுதிப்பொருள்கள் கண்டறியப்பட்ட காலம்
செயல்பாடு 2
கீழ்க்காணும் வரைபடத்தை உற்று நோக்கி பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.
1. புரோட்டான் நேர்மின் சுமை கொண்ட துகளாகும்.
2. எலக்ரான் மின்சுமை அற்றது.
3. எலக்ரான் எதிர்மின்சுமை கொண்ட துகளாகும்.
செயல்பாடு 3
மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையினை உற்றுநோக்கி பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.
1. நான் சுவாசித்தலுக்குப் பயன்படுகிறேன். நான் இல்லாமல் உங்களால் உயிர் வாழ முடியாது. எனது பெயரையும், குறியீட்டையும் எழுதுக. ஆக்சிஜன், O.
2. இது பலூன்களை நிரப்பப் பயன்படுகிறது. இது ஒரு வாயுவாகும். இதனை அடையாளம் காண்க. இதன் நிறை எண் என்ன?ஹட்ரஜன். (A=l).
3. வாழைப்பழத்தில் உள்ள தனிமத்தின் பெயரைக் குறிப்பிடுக. அதன் அணு எண் யாது? பொட்டாசியம் (Z = 19)
4. நான் பட்டாசுகளில் காணப்படுகிறேன். நான் எத்தனை புரோட்டான்களைக் கொண்டுள்ளேன்? சல்பர் (p = 16)
5. நான் உயர்ந்த மதிப்புமிக்க தனிமம். நான் யாரென்று கண்டுபிடி. என்னுடைய நிறை எண்ணைக் கூற முடியுமா?