Home | 8 ஆம் வகுப்பு | 8வது சமூக அறிவியல் | பொதுத்துறைகள் பின்வரும் 9வகைகளாக பிரிக்கப்படுகின்றன

அலகு 2 | பொருளியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - பொதுத்துறைகள் பின்வரும் 9வகைகளாக பிரிக்கப்படுகின்றன | 8th Social Science : Economics : Chapter 2 : Public and Private Sectors

   Posted On :  15.06.2023 01:27 am

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 2 : பொது மற்றும் தனியார் துறைகள்

பொதுத்துறைகள் பின்வரும் 9வகைகளாக பிரிக்கப்படுகின்றன

பொதுத்துறை நிறுவனங்கள், பொருளாதார மேம்பாட்டுக்கு அத்தியாவசிய உள்கட்டமைப்பை வழங்க வேண்டும். இவைகள் முதன்மை பொதுப் பயன்பாடுகள் என அழைக்கப்படுகின்றன. அவை பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன. விமான நிறுவனங்கள், கப்பல் போக்குவரத்து, இரயில்வே, மின் உற்பத்தி, தொலைத் தொடர்பு போன்றவைகளாகும்.

பொதுத்துறைகள் பின்வரும் 9வகைகளாக பிரிக்கப்படுகின்றன.

1. பொதுத்துறை நிறுவனங்கள், பொருளாதார மேம்பாட்டுக்கு அத்தியாவசிய உள்கட்டமைப்பை வழங்க வேண்டும். இவைகள் முதன்மை பொதுப் பயன்பாடுகள் என அழைக்கப்படுகின்றன. அவை பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன. விமான நிறுவனங்கள், கப்பல் போக்குவரத்து, இரயில்வே, மின் உற்பத்தி, தொலைத் தொடர்பு போன்றவைகளாகும்.

2.பொதுத்துறை நிறுவனங்கள் "கட்டளைப் பொருளாதாரத்தின் அதிகாரங்களை" (Commanding heights of the economy) தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக பாதுகாப்பு, வங்கிகள், நிலக்கரி சுரங்கங்கள், எண்ணெய், எஃகு போன்றவைகளாகும்.

3. பொதுத்துறை ஒரு தொழில்முனைவோர் பங்கினை வகிக்க வேண்டும் அதாவது வேறுவிதமாக கூறினால் இதனை மூலதன தீவிர தொழில்கள் என்றும் அழைக்கலாம். எடுத்துக்காட்டு: இரும்புத்தாது, பெட்ரோ - வேதிபொருள், உரம், சுரங்கம், கப்பல் - கட்டுமானம், கனரக பொறியியல் போன்றவை.

4. அரசின் முற்றுரிமையின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் இதில் அடங்கும்: தொலைத்தொடர்பு உபகரணங்கள், பாதுகாப்பு உற்பத்தி, இரயில்வே, ரோலிங் ஸ்டாக் போன்றவை.

5. உயர் தொழில்நுட்ப தொழில்களுக்கு மட்டுமே பிரத்தியேகமாக இருக்கும் பொதுத்துறை நிறுவனங்கள். எடுத்துக்காட்டு: அணுசக்தி. 6. நுகர்வோர் சார்ந்த பொதுத்துறை நிறுவனங்கள். எடுத்துக்காட்டு: மருந்து, காகிதம், உணவகம் போன்றவை.

7.நலிவடைந்த தனியார் நிறுவனங்களைக் கையகப்படுத்துவதற்கு அமைக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள். எடுத்துக்காட்டு : ஜவுளி, -பொறியியல் போன்றவை.

8. வர்த்தக கழகமாக அமைக்கப்பட்டுள்ள பொதுத்துறை நிறுவனங்கள்: எடுத்துக்காட்டு: இந்திய உணவுக் கழகம் (FCI), சி.சி.ஐ (CCI) முதலியன.

9. ஆலோசனை மற்றும் பொறியியல் சேவையை வழங்கும் பொதுத்துறை நிறுவனங்கள். எடுத்துக்காட்டு: மெக்கான் நிறுவனம் (MECON).

நிதி ஆயோக்

நிதி ஆயோக் என்பது 65 ஆண்டுகள் பழமையான திட்டக் குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்ட குழுவாகும். அமைச்சகங்களுக்கும், மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்க திட்டக் குழுவிற்கு அதிகாரம் உள்ளது. ஆனால் இந்த அதிகாரம் தற்போது நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ளது. நிதி ஆயோக் 2015 ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து நிதி ஆயோக் செயல்பட துவங்கியுள்ளது.


Tags : Chapter 2 | Economics | 8th Social Science அலகு 2 | பொருளியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்.
8th Social Science : Economics : Chapter 2 : Public and Private Sectors : Public Sector is divided into the following nine categories Chapter 2 | Economics | 8th Social Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 2 : பொது மற்றும் தனியார் துறைகள் : பொதுத்துறைகள் பின்வரும் 9வகைகளாக பிரிக்கப்படுகின்றன - அலகு 2 | பொருளியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 2 : பொது மற்றும் தனியார் துறைகள்