அலகு 2 | பொருளியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - சமூக பொருளாதார மேம்பாடு | 8th Social Science : Economics : Chapter 2 : Public and Private Sectors
சமூக பொருளாதார
மேம்பாடு
சமூக
பொருளாதார மேம்பாடு என்பது ஒரு சமூகத்தில் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியின் செயல்
முறையேயாகும். சமூக பொருளாதார மேம்பாட்டைப்
பின்வரும் குறியீடுகள் கொண்டு அளவிடப்படுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), ஆயுட்காலம்,
கல்வியறிவு மற்றும் வேலைவாய்ப்பின் அளவு போன்றவைகளாகும்.
புதிய
"மதியுரையகக் குழு" (Think Tank) எனப்படும் நிதி ஆயோக் (NITI Aayog) என்ற
அமைப்பினால் மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் சமூக துறை முயற்சிகளை ஒருங்கிணைப்பதில்
பொருத்தமான தளத்தை உருவாக்க முடியும்.
சமூக - பொருளாதார வளர்ச்சிக் குறியீடுகள்
மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)
மொத்த
உள்நாட்டு உற்பத்தியானது (GDP) சமூக – பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதில் துணைபுரிகிறது.
தொழில் துறையில், தனியார் மற்றும் பொதுத் துறையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதம்
அதிகரித்துள்ளது. இது அரசின் நிதியை அதிகரிப்பதோடு பொதுச் செலவுகளையும் அதிகரிக்கிறது.
ஆயுட்காலம்
2011ஆம்
ஆண்டு இந்தியாவின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி சராசரி ஆயுட்காலம் ஆண்களுக்கு
65.80 ஆண்டுகள் மற்றும் பெண்களுக்கு 68.33 ஆண்டுகள் ஆகும். பல்வேறு திட்டங்கள் மூலம்
அரசாங்கம் அதிக அளவு சுகாதார நடவடிக்கைகளை வழங்குகிறது. ஏழைமற்றும் பாதிக்கப்படக்கூடிய
குடும்பங்களுக்கு சேவை செய்வதற்காக 2018-19 மத்திய வரவு செலவுத் திட்டத்தில் தேசிய
சுகாதார உற்பத்தி திட்டத்தை (NHPS) அரசாங்கம் அறிவித்தது.
கல்வியறிவு
சமூக
பொருளாதார வளர்ச்சிக்கு கல்வி திறன் முக்கிய பங்கு வகிக்கிறது. அனைவருக்கும் கல்வி
இயக்கம் (SSA) இந்திய அரசின் முதன்மை திட்டத்தின் அங்கமாகும். 6-14 வயதுடைய குழந்தைகளுக்கு
வாழ்க்கைத் திறன்களுடன் கூடிய இலவச மற்றும் கட்டாயக் கல்வியை வழங்குவதற்காக செயல்படுத்தப்பட்டது.
கல்வியில் தரத்தின் அளவை அதிகரிப்பதற்காக அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டம்
(RMSA), திறன் வகுப்பு (Smart Class) மின்ன ணு-கற்றல் (E-Learning), இலவச கணினி திறன்
வகுப்புகள் மற்றும் கற்பதற்கான இயற்கையான சூழல் வழங்குதல் (Eco-Friendly) போன்ற திட்டங்களும்
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
வேலைவாய்ப்பு
வேலை
வாய்ப்பானது, முதன்மை துறையிலிருந்து இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலைக்கு வேலைவாய்ப்பு
மாறியுள்ளது என்பது தெளிவாகிறது. அதிக எண்ணிக்கையிலான மக்கள் வேலை தேடி நகர்புறங்களுக்கு
இடம் பெயர்கின்றனர். இதனால் நகர்ப்புற மக்கள் தொகை அதிகரிக்கிறது. இதனால் அரசாங்கம்
"திறன் நகரம்" (Smart City) திட்டத்தை தொடங்கியது. இது நகரங்களில் மருத்துவமனைகள்,
பள்ளிகள், வீட்டு வசதிகள் மற்றும் வணிக மையங்கள் போன்ற பல வசதிகளை அளிக்கிறது. வேலைவாய்ப்பைப்
பொறுத்தவரை கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளை மேம்படுத்துவதற்காக குறைந்த கட்டணத்தில்
மின்சார வரிச்சலுகை போன்ற பல சலுகைகளை வழங்குவதன் மூலம் பின்தங்கிய பகுதிகளில் தொழில்
துறையைத் தொடங்க தனியார் துறைகளை அரசாங்கம் ஊக்குவிக்கிறது. இதனால் வட்டார ஏற்றத்தாழ்வுகளை
நீக்குகிறது.
வீடு, சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரம் வழங்குதல்
அரசுத் துறையானது வீட்டு வசதிகள், சுத்தமான குடிநீர் வசதிகள் மற்றும் சுகாதார வசதிகளை தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வழங்குகிறது. சுத்தமான நீர் மற்றும் சுகாதார வசதிகளை வழங்குவதால் நோய்கள் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டை நீக்குகிறது. இது போன்ற வசதிகளை வழங்குவதால், மக்களின் வாழ்க்கை சுழற்சி அதிகரிக்கிறது.